தேவ சித்தம் இல்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் TRYING TO DO GOD A SERVICE WITHOUT IT BEING GOD'S WILL 65-11-27B டாகோமா, வாஷிங்டன், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் தேவ சித்தம் இல்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல் (65-1127) ஊழியக்காரச் சகோதரர்களே, மற்றும் அங்கே வெளியே நிற்கும் நண்பர்களே, இந்தக் காலை வேளையில் இங்கே இருப்பதை ஒரு சிலாக்கியமாக கருதுகின்றேன். அத்தகைய ஒரு அறிமுகம், அதற்கேற்றபடி நான் எப்படி என்றென்றும் ஜீவிக்கப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. 2. ஆனால் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அதாவது, சகோதரன் ஜேக் மூரைப் (Brother Jack Moore) போலவே இருக்கும் ஒருவரை நான் இதுவரை கண்டிருக்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் சகோதரன் நோலன் (Brother Nolan) அவர்கள் சரியாக அவரைப் போலவே இருக்கிறார். ம்... ஹூம்... (நாம் எல்லாரும் வெவ்வேறு உருவத்தில் உண்டாக்கப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒரே தேவனால் உண்டாக்கப் பட்டிருக்கிறோம்). நல்லது, “நான் இங்கே அவருடன் இருக்கும் வரையில்...” என்று சகோதரன் நோலன் பேசிக் கொண்டிருந்தார். (அது அவருடைய மருமகன்). மேலும் எப்படியாக அவர் அவரை நேசிக்கவும், அவருடைய ஞானத்தையும் மற்ற காரியங்களையும் மதிக்க கற்றிருந்தார். இந்த விஷயத்தில் நான் அதற்கு “ஆமென்” என்று சொல்லுவேன். நாங்கள் ஒன்றாக கழித்த மிகவும் அருமையான தருணங்கள், நானும் அவரும் மற்றும் இங்கேயுள்ள சகோதரன் பிரவுன் (Brother Brown) மற்றும் சகோதரன் பவுட்லேயர் (Brother Boutliere) ஆகியோர். அருமையான தேவ மனிதர்கள், நான் அவர்களை என் முழு இருதயத்தோடும் உண்மையாக நேசிக்கிறேன். 3. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் இளைஞர்களாக வனாந்திரம் முதலியவைகளை கடந்து திரிந்தபோது எங்களை கவனித்துக் கொண்டிருந்த அந்த கால கட்டங்களை இப்பொழுது நான் நினைவு கூறுகிறேன். நம்மால் அந்த பருவத்திற்கு பின்னோக்கிச் செல்ல முடியாது. ஆனால் நாம் ஒருபோதும் முதுமை அடையாத தேசம் ஒன்று உண்டென்பதை அறிகிறோம். நாம் மீண்டுமாய் ஒரு நாளில் அங்கே சந்திப்போம். 4. நான் கடந்த இரவு கூடாரத்தை விட்டுச்செல்லும் போது, கூட்டம் முடிந்து செல்லும்போது, அங்கே ஒரு சிறிய பெண், பின்பாக கட்டிலின் மேல் படுத்திருந்தாள். அவள் சொன்னாள், “சகோதரன் பிரன்ஹாம், சில ஆண்டு களுக்கு முன்பு...” அவள் முடமாயிருந்தாள் என்று நான் நினைக்கிறேன். அவள் சொன்னாள், “நீங்கள் என்னிடம் சொன்னீர்கள்..." அன்று அந்த பெண் சொன்ன கருத்து என்ன என்பதை இப்போது நான் மறந்து விட்டேன், அது ஏதோ இது போன்றது, நான் அதைத் தவறாக மேற்கோளிடமாட்டேன் என்று நம்புகிறேன். “எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த துன்பம் ஒரு நோக்கத்திற்காகவே இருக்கும்” என்றாள். அல்லது அவள் ஒரு குழந்தையைப் பெறுவாள், அதுபோன்ற ஏதோ ஒன்று. மேலும், அவளுடைய அந்த நிலையில் அவளுக்கு அது எப்படி சாத்தியமாகும் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. 5. அங்கே ஒரு இளமையான, அழகான வாலிபன் நின்றிருந்தான். அவன் சொன்னான், “அவளுக்கு பிறந்த குழந்தை நான், அவள் பெற்ற குழந்தை நான் தான்” என்றான். 6. மேலும், வழிநெடுகிலும் அநேகக் காரியங்கள் நடந்தேறின. நாம் அதைக்குறித்து இங்கே பேச போதிய நேரம் கூட நமக்கு இங்கேயில்லை. நாம் மறுபக்கத்திலே அந்த நேரத்தை பெற்றிருப்போம். 7. இந்த வர்த்தக புருஷர்களின் அத்தியாயத்தில், நான் எந்தவொரு ஸ்தாபனத்தையும் சேர்ந்தவன் அல்ல என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். ஆனால், நான் இந்த ஒரு கூட்டத்தோடு மட்டுமே இணைந்திருக்கிறேன், ஒரு ஐக்கிய அட்டையைக் கொண்டுள்ளேன். அவர்கள் வெவ்வேறு ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள், இது வெறும் வர்த்தக புருஷர்கள் மாத்திரமே. பிதாவாகிய நமது தேவன் எனக்கு அருளின இவ்விதமான ஊழியத்திற்கும் எனக்கும், அவர்கள் மாபெரும் சொத்தாக இருக்கிறார்கள். அது நான் நிச்சயமாக ஸ்தாபனத்தை விரும்பாதவன் என்பதல்ல, அது வெறுமனே எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு ஊழியம். மேலும், ஒரு வேளை நான் அந்த அழைப்பிற்கு உண்மை இல்லாதவனாக இருந்தேன் என்றால், பின்னர் நான் தேவனுக்கு உண்மை இல்லாதவனாக இருப்பேன். 8. நான் டூசானை (Tucson) விட்டுச்செல்வதற்கு சற்று முன்பு, மேலும், நான் யோசிக்கிறேன், உங்களில் பலர் அங்கே இருந்திருக்கலாம். நான் ஒருநாள் லாஸ்ஏஞ்சல்ஸில் பேசிக் கொண்டி ருந்தேன். நான் அந்த ஸ்தாபனத்தை, ஒரு வேளை, சற்று மோசமானதாகவே சித்தரித்தேன். நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. ஒருவேளை நீங்கள் அதை அப்படியாகக் கருதினால், நான் ஒரு மாய்மாலக்காரனாக இருப்பேன். நீங்கள் அப்படி செய்யக் கூடாது, அது யாரோ ஒருவர் மேல் தூக்கியெறிவதைப் போன்றது. சகோதரன் ஷாரிட் (Sharrit) உடைய பண்ணைத் தோட்டத்தில் பார்த்த ஒரு மரத்தைப் பற்றி நான் பேசி னேன். அதில் ஐந்து வெவ்வேறு விதமான பழவகைகள் இருந்தன. “என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு மரத்தை நான் கண்டதேயில்லை” என்று சொன்னேன். அது கிரேப் ஃபுரூட் பழத்தைக் கொண்டிருந்தது. அது எலுமிச்சையைக் கொண்டிருந்தது, அது டேஞ்சரினை கொண்டிருந்தது, டேஞ்சலோஸ் மற்றும் ஆரஞ்சு போன்ற எல்லாமே, அந்த ஒரே மரத்தில் வளர்ந்தன. “நல்லது,” நிச்சயமாகவே, எனக்குப் அது புரியவில்லை, எந்த வகையைச் சார்ந்த மரம்?" என்றேன், “அது ஒரு ஆரஞ்சு மரம்” என்றார். “அப்படியானால் அந்த கிரேப்ஃபுரூட்?” என்றேன். (கிரேப்ஃபுரூட் என்பது ஆரஞ்சு மற்றும் பம்பளிமாஸ் பழங்களின் கலவை) அவர் சொன்னார் “ஆம், அதுவும்தான்” நான் சொன்னேன், “அது எப்படி?" “அது ஓட்டுப்போடப்பட்டது” என்றார். மேலும் நான் சொன்னேன், “ஓ, அப்படியா?” 9. அவர், அவை எல்லாம் சிட்ரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவைகள், மேலும் சிட்ரஸ் குடும்பத்தைச் சேர்ந்த எந்த மரமும்... ஒட்டுப் போடலாம்” என்றார். 10. நான் சொன்னேன், “எனக்கு புரிந்தது”. நான் உடனே சிறிது கூச்சலிட ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரியுமா, ஏனென்றால் நான் பதற்றமாகவும் உணர்ச்சி வசப்பட்டும் இருந்தேன். 11. அதனால், அவர் “என்ன காரியம்?” என்று கேட்டார். 12. மேலும் நான் சொன்னேன், “நல்லது, நான் ஏதோ ஒன்றைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்.” மேலும் நான் சொன்னேன், “இப்பொழுது, நான் உன்னிடம் ஒரு கேள்விக் கேட்கவேண்டும்.” நான் “இப்பொழுது, அடுத்த வருடம் எப்பொழுது பூ பூக்குமோ, அங்கே ஆரஞ்சுகள், டேஞ்சலோஸ், (அம்லா ஆரஞ்சு மற்றும் கிரேப்ஃபுரூட் பழங்களின் கலவை) கிரேப்ஃபுரூட், எலுமிச்சைகள் இருக்காது. அவைகள் எல்லாம் ஆரஞ்சுப் பழங்களாக இருக்கும், ஏனென்றால், அவைகள் ஆரஞ்சு மரத்தில் இருக்கின்றன. இல்லையா?” என்றேன். 13. அவர் “இல்லை, இல்லை. இல்லை, ஒவ்வொரு கிளையும் அதனுடைய சொந்த மானதையே பிறப்பிக்கும்” என்றார். 14. நான் “அப்படியா?” என்றேன். 15. ஆதலால், அது இன்னும் உண்மையிலேயே நல்லது, ஏனென்றால், நான்... உங்களுக்குத் தெரியுமா நான், ஹார்ட்ஃ போர்டு (Hartford) மற்றும் எல்லா பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஒரு பட்டத்தை நான் பெற்றிருக்கிறேன், உங் களுக்குத் தெரியுமா அதனால் நான்... எனவே நான்... இயற்கையை கவனியுங்கள், நான் இதுவரையில் கண்டதில் சிறந்த பல்கலைக் கழகம் அதுதான், அது சிருஷ்டிகரின் பல்கலைக் கழகம். ஆகையால் நான் அதைக் கவனித்தால், இயற்கை செயல்படும் விதத்தை காணும்போது என்னுடைய பிரசங்கங்களை பெற்றுக் கொள்கிறேன். 16. மேலும் நான் “நல்லது, அது என்னை மிகவும் நன்றாக உணரச்செய்கிறது” என்றேன். 17. அவர் “அது என்ன காரியம்?” என்றார். 18. நான் “நான் ஏதோ ஒன்றைக்குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றேன் 19. அதனால், அந்த நாளில், நான் அதைப்பற்றி பிரசங்கித்தேன். மற்றும் நான் சொன்னேன், “இப்பொழுது, நீங்கள் பாருங்கள், சபையானது முதலில் ஆரம்பித்த பொழுது நான் யோவான் 15-ம் அதிகாரத்தை பிரசங்கித்துக் கொண்டி ருந்தேன். “நான் திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள். மேலும் கனி கொடுக்காத ஒவ்வொரு கிளையும் வெட்டப்பட்டு, அக்கினியில் போடப்படும்” என்று இயேசு கூறினார். 20. மேலும் யாரோ ஒருவர் அதைக்குறித்து கேட்டது என் கழுத்தை சற்று கடினமாக நெறித்ததுப்போல இருந்தது. அவர், “நீங்கள் உண்மையிலேயே ஒருமுறை பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு இரட்சிக்கப்பட்டிருந்தால், அவர் களால் அதிலிருந்து விலகிச் செல்லவே முடியாது என்று நீங்கள்தான் கூறினீர்கள் என்று நான்நினைத்தேன்” என்றார். 21. “அது சரியே.” 22. “ஆனால் அதைக்குறித்து என்ன?” என்று கேட்டார். 23. நான் “இப்பொழுது நீங்கள் வேறொரு பொருளில் பேசுகிறீர்கள். அவரோ கனி கொடுப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார், கொடியை குறித்து அல்ல; அவர் கனி கொடுப் பதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார், ஜீவனைக் குறித்து அல்ல. ஆகவே அவர், ‘நல்லது. அந்த மரத்தின் பாகத்தை வெறுமனே வெட்டிப் போடுங்கள், அது மீண்டும் வளரும், கனி கொடுக்கும்' என்றார்” என்றேன். 24. அவர் சொன்னார்... 25. மேலும் நான் “இப்பொழுது, பாருங்கள், இந்த மரம், அது வளரத் தொடங்கியபோது, அவையெல்லாம் உண்மையான, வேதாகம கிறிஸ்தவர்களாக இருந்தது. பின்னர் ஒரு கிளை வருகிறது, லூத்தரன் என்றழைக்கப்பட்ட கிளை, பின்னர் மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்ட், பிரஸ்பிட்டேரியன்: எலுமிச்சைகள், மற்றும் அதனோடு பிற ஒவ்வொன்றும்” என்று கூறினேன். மேலும் நான் “நீங்கள் பாருங்கள், அது கிறிஸ்தவம் என்னும் பெயரினால் செழிக்கிறது, ஆனால் அது.. அந்த மரத்தைக் கொண்டு ஜீவிக்கிறது. ஆனால் அது தன்னுடைய சொந்த ஸ்தாபன கனிகளையே கொடுக்கிறது என்றேன். பாருங்கள்? ஆனால், “அந்த ஆரஞ்சு மரம் தன் சொந்த கிளையையே வேறொரு கிளையாக பிறப்பிக்குமானால் அது ஆரம்பத்தில் கொடுத்தது போல ஆரஞ்சுபழங்களையே கொடுக்கும்” என்று நான்கூறினேன். 26. ஒருமுறை நம்முடைய மகத்தான பெந்தெகொஸ்தேவின் ஒரு அமைப்பின் தலைமை கூட்டம் நடைபெற்றது. நான் அந்த சகோதர, சகோதரிகளுக்கு எதிரானவன் என்பது என்னுடைய எண்ணம் அல்லவென்பதை அனை வரும் புரிந்து கொள்ளும் விதமாக எப்படி விளக்குவது என்று எனக்கு தெரியவில்லை; அது தவறு. ஆதலால் நான் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன், ஏனென்று எனக்குத் தெரியவில்லை. பாருங்கள்? ஜனங்கள் சபைக்குச் செல்வதைக் கூட நான் நம்பவில்லை என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். அது சத்தியத்தை விட்டு பல இலட்சம் மைல்கள் விலகி இருக்கிறது. “நாம் அனைவரும் கண்டிப்பாக ஒன்றாகக் கூடவேண்டும், மேலும் அந்தநாள் நெருங்கி வருவதைப் பார்க்கும்போது இன்னும் அதிகமாக கூட வேண்டும்.” பாருங்கள்? நாம் ஒற்றுமையாக ஒன்றுகூட வேண்டும்... 27. ஒருவேளை நான் நகர்ப்புறத்தில் வசித்தால், அங்கு அவர்கள் செல்வதற்கு ஒன்றுமேயில்லாத பட்சத்தில், நல்லது, ஆனால் ஏதோ ஒரு சபை (நான் எந்த ஒரு பெயரையும் அழைக்க விரும்பவில்லை), ஆனால் வெறுமனே ஏதோ ஒரு சபை, அவர்கள் இயேசு தெய்வீகமானவர் என்ற ஒன்றை மட்டும் விசுவாசித்து மற்ற அனைத்துக் காரியங்களையும் தவறாக கொண்டிருந்தாலும், நான் அந்த சபைக்குச் செல்வேன், எனக்கு முழு ரொட்டி கிடைக்கவில்லை என்றாலும், நான் ஒரு துண்டை மாத்திரம் எடுத்துக்கொள்வேன், பாருங்கள்? நான் சென்று கவனித்து, ஆண்டவரை ஆராதித்து, மேலும் நான் எனது பங்கைச் செய்கிறேன் என்பதை அவருக்குக் காட்டுவேன், நான் ஜீவனோடு இருக்கிறேன் என்பதை அவருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நான்....எந்த பக்கமாக இருக்கிறேன் என்பதை எல்லோரும் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் கிறிஸ்தவர்களோடு ஒன்றுகூடி, மேலும் அங்கே ஆராதித்து, தேவனை சேவிப்பேன். 28. ஆனால் இது மிகக்கடினமானது, என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது, பின்பு அநேகக் காரியங்களில் நம்முடைய கர்த்தரைக்கூட தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கண்டறிந்தேன். அவர் ஏதாவ தொன்றை சொல்வார், மேலும்... அதை அவர்கள் தவறாகப் புரிந்துக்கொள்வார்கள். அது அவ்வாறாகத் தான் இருக்க வேண்டும் என்று நான் யூகிக்கிறேன். ஆனால் ஞானமுள்ளவர்கள் புரிந்துக் கொள் வார்கள். பாருங்கள்? வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. அவர்கள் அதைப் பிடித்துக் கொள்வார்கள். 29. இந்தக் காலை வேளையிலே இதை சொல்வதற்கு... மேலும் நான் “இப்பொழுது, அவர்கள் கிறிஸ்தவம் என்னும் பெயரைக் கொண்டு வாழ்கிறார்கள், ஆனால் அவர்கள் தவறுதலான கனியைப் பிறப்பிக்கின்றனர். அது ஒரு ஸ்தாபனக் கனியாயிருக்கின்றது. அவர்கள் ஒரு காரியத்தை அமைத்து அந்த அமைப்பின் அடிப்படையில் ஜீவிக்கிறார்கள், ஆனால் அவர்களோ உண்மையான ஜீவனைவிட்டு விலகி வாழ்கிறார்கள்” என்றேன். 30. கடந்த இரவு நான் சொல்ல முயற்சித்தது இது தான். அதாவது, ஆவியானது அந்த ஆவிக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டும் ஒரு கிறிஸ்தவனாக இராமலிருப்பது. பாருங்கள்? நீங்கள் அதே ஜீவனைக் கொண்டு வாழ் கிறீர்கள், ஆனால் நீங்கள் கொடுக்கும் கனிகளே நீங்கள் யாரென்பதை சொல்லி விடுகிறது. பாருங்கள்? அது சரியே. பாருங்கள்? அவர்கள் அதே ஜீவனைக் கொண்டு வாழ்ந்து, எல்லா அற்புதங்களையும் செய்யக்கூடும், பின்னர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவும், வியாதியஸ்தரை சுகமாக்கவும், கண்களை திறக்கவும், பிசாசுகளை துரத்தவும், மேலும் இவைகள் எல்லாவற்றையும் செய்யக் கூடும். அதிலுள்ள அதே ஜீவனைக் கொண்டே ஜீவிக்கிறது, ஆனால் இன்னமும் அது ஒரு எலுமிச்சைப்பழமே. பாருங்கள்? அது சரி. “உங்கள் கனிகளால் அறியப்படுவீர்கள்,” என்று இயேசு கூறினார். ஆகவே நாம் காணலாம்... 31. நான் மேடையில் இருந்து இறங்கியதும், இந்த பெரி யதலைவர் எழும்பி நின்று, “அவர் அவ்வாறாக அர்த்தம் கொள்ளவில்லை” என்றார். அவர் “நாம் அனைவரும் ஒட்டுப் போடப் பட்டுள்ளோம் என்பதை நாம் அறிந்தி ருக்கிறோம்” என்றார். நல்லது, நாம் ஒட்டுப் போடப்பட்டிருக் கிறோம் என்பது உண்மையே, நாம் மரத்தண்டில் ஒட்டுப் போடப் பட்டிருக்கிறோம். அது சரியே; ஆனால், கொடியில் ஓட்டுபோடப்படவில்லை, பின்னர் அவர் சொன்னார்...ஒரு விதமாக – தூற்றும் விதமாக பேச ஆரம்பித்தார். 32. மேலும் அங்கே ஒரு வாலிபன் இருந்தான், அவன் ஏதோ திரைப்பட நட்சத்திரம் என நான் நினைக்கிறேன். அவனுடைய பெயர் டேனி ஹென்றி (Danny Henry), மேலும் அவன் ஒரு பாப்டிஸ்ட் சிறுவன். நல்லது, அவன் மேடையின் மீது வந்து தன் கைகளை என்னுடைய தோளின் மீது போட்டான், அவன் சொன்னான் “சகோதரன் பிரன்ஹாமே,” இது புனிதத் தன்மையை குலைக்கும் விதமாக இல்லை என்று நம்புகிறேன். ஆனால், “அது கிட்டத் தட்ட வெளிப்படுத்தின விசேஷம் 23-ம் அதிகாரமாக இருக்கக்கூடும் என்று நம்புகிறேன்” என்று கூறினான். 33. மேலும் நான் “உமக்கு நன்றி” என்றேன். 34. அதன் பின்னர் ஏதோ ஒன்றைக்குறித்து அவன் சொல்லதொடங்கி, அந்நியபாஷையில் பேசினான், ஒரு பாப்டிஸ்ட் வாலிபன். அவ்வாறு அவன் செய்தபோது லூசியானா விலிருந்த பெண்மணி இங்கே இருந்தாள், அவள் ஒரு பிரெஞ்சுக்காரி, ஒரு விதமான பருமனான பெண்மணி, அவள் அதனுடைய வியாக்கியானத்தை எழுதிக்கொடுத்தாள். 35. நல்லது, இன்னொரு பிரெஞ்சுக்கார வாலிபன் அங்கே அமர்ந்திருந்தான், அவனும் அவர் என்ன சொன்னாரோ அதை எழுதிக் கொடுத்தான். அவர்கள் அந்த குறிப்புக்களை ஒப்பிட்டுப் பார்த்தார்கள், மற்றும் அவைகள் இரண்டுமே ஒன்றாக இருந்தது. 36. பின்னர் ஒரு பெரிய, வெளிர்நிற தலையையுடைய சிறுவன் கிளிப்டன்ஸ் உணவு விடுதியில், (Clifton's Cafeteria) பின்னால் நின்று கொண்டிருந்தவன், முன்பாக நடந்து வந்தான், அவன் “நான் அந்தக் குறிப்புகளைப் பார்க்கட்டும். அவைகள் என்ன என்பதைப் பார்க்க விரும்புகிறேன்” என்றான். 37. மேலும் அவர்கள் மூவருடைய வியாக்கியானமும் ஒரே மாதிரியாக இருந்தது. அவர் ஐ.நா.வின் பிரஞ்சு மொழிப்பெயர்ப்பாளர். மேலும் அது இவ்வாறு கூறியது: ஏனெனில் நீ நேரான மற்றும் குறுகியதுமான வழியைத் தேர்வு செய்தாய், அது கடினமான வழி, நீ அதை உன்னுடைய சொந்த விருப்பப்படி தேர்வு செய்தாய்... ஆனால் என்ன ஒரு மகிமையான முடிவை நீ தேர்வு செய்தாய், ஏனெனில் அது என்னுடைய வழி. பாருங்கள்? மேலும் தொடர்ந்து இதுவே, அது தெய்வீக அன்பில் மகத்தான வெற்றியைக் கொண்டு வரச்செய்து, அதை உருவாக்கி, தாமாக அதை நிறைவேற்றும் ஒன்றாகும் என்றது. 38. நீங்கள் பாருங்கள், எப்பொழுதும், பிரஞ்சுமொழி யில் கூட, வினைச் சொல்லுக்கு (verb) முன்னால் வினையுரிச் சொல் (adverb) மொழிபெயர்ப்பில் இருக்கும். என்னால் அதைக்குறித்து அப்படியாகக் கூற இயலாது. மோசே, அவ னுடைய விருப்பத்தை தேர்வு செய்தான், அவன் தனது விருப்பத்தை செய்ய வேண்டியதாயிருந்தது. நாம் அனைவரும் நம்முடைய விருப்பங்களை தேர்வு செய்து, நம்மால் முடிந்தவரை சிறப்பாக செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். மேலும், தேவனைப் பற்றிய எந்த ஒரு மனிதனின் பிரசங்கத்தையும் நான் கனம் பண்ணுகிறேன். நான்... அது எதுவாக இருந்தாலும், அதை என் முழு இருதயத்துடன் மதிக்கிறேன். 39. இப்போது, சில வாலிப சகோதரர்கள் சற்று முன்பு வந்ததை நான் காண்கிறேன், சகோதரன் ஸ்டிரிங்கர் (Stringer) என்று நான் நினைக் கிறேன், அவர்கள் (Louisiana) லூசியானாவின் கீழிருந்து....அல்லது மிசிசிப்பியிலிருந்து (Missis sippi), வந்திருக்கிறார்கள். இங்கே நாங்கள் னித்துக் கொண்டிருந்த சில படங்களை அவர்கள் நமக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அது கர்த்தருடைய தூதன் தோன்றினபோது காட்சி யளித்த படம். எத்தனை பேர் அந்த சம்பவத்தை கேட்டிருக்கிறீர்கள்? இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் அதை கேட்டிருப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். நீங்கள் அதை ஒலிநாடாவில் மற்றும் பலவற்றில் பெற்றிருக்கிறீர்கள். 40. இப்போது, ஒருநாள் காலை பத்து மணியளவில், இந்தியானாவிலுள்ள (Indiana) என் அறையில் நின்று கொண்டிருந்த போது அது எனக்கு சொல்லப்பட்டது. நான் டூசானில் (Tucson) இருப்பேன், அதிகாலையில் இருப்பேன் என்று என்னிடம் கூறப்பட்டது. நான் என் கால்சட்டையிலிருந்து ஒரு ஊமுள்ளை (Cocklebur) எடுப்பேன். அங்கே அதை நாங்கள் கோட் ஹெட்டர் (Goat Header) என்று அழைப்போம், மேலும் ஏழு தேவ தூதர்கள் வந்து, இந்த பூமியின் தரையை வெடிக்கச் செய்தனர், மேலும் மற்ற அனைத்தும்கூட வெடித்தது... மலைகளிலிருந்து பாறைகள் உருண்டோடின, மேலும் அங்கு ஏழு தேவதூதர்கள் நின்று கொண்டிருந்தனர். 41. மேலும் நான் “நல்லது...” நான் என் மனைவியிடம் கூறினேன், மற்றும் இந்தக் காலையில் அவள் இங்கு, எங்கோ இருக்கிறாள், “நீ எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துகொள், ஏனென்றால் எந்த ஒரு மனிதனாலும் அதில் நிலைத்திருக்க முடியாது.” “அங்கிருந்து வெளியே நான் டூசானுக்கு (Tucson) செல்கிறேன், என்னுடைய பணி இந்த பூமியில் நிறைவடைந்து விட்டது. கர்த்தராகிய இயேசு வோடு இருக்க நான் வீட்டிற்குச் செல்கிறேன்” என்றேன். 42. “நல்லது,” அவள் “நீர் சொல்வது உறுதியாகவா?” என்றாள். 43. நான் சொன்னேன், “ஆம், ஆமாம், யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதைச் செய்வதற்கு எந்த வழியும் இல்லை” என்றேன். 44. அப்போது தான் நான் ஏழுசபைக் காலங்களைப் பற்றி பிரசங்கித்திருந்தேன். அங்குதான் நான் எங்கள் துணிச்சலான சிறிய சகோதரர் ஜாக் மூரை (Jack Moore) அழைத்து, வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரத்தில், இயேசு வெண்மையான சிரசும் மயிரும் கொண்ட வராயும் மற்றும் எல்லாவற்றுடனும் அங்கே நின்று கொண்டிருந்தார் என்பதைப் பற்றி கேட்டேன். 45. நான் “அவர் ஒரு வாலிப மனிதனைப் போல காணப்பட்டார்” என்றேன். அது அவராக அல்ல, அவர் ஒரு பொய்மயிர்த்தோகை (Wig) அணிந்திருப்பதை குறித்த தான வெளிப்பாடு அங்கு தான் வருகிறது; அவருடைய உயர்ந்த தெய்வீகத் தன்மையின் நிமித்தம் ஒரு பொய் மயிர்த் தோகையை [வெண்பஞ்சைப் போன்ற] (அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை) அணிந்தவராய் இருந்தார். மேலும், இஸ்ரவேலின் பழைய நீதிபதிகள் தலை வெண்மையாயிருக்க வேண்டும் என்பதற்காக அதை உபயோகிப்பர். மேலும் அந்த வெண்மை பரிசுத்தத்தை குறிக்கிறது. மேலும், இங்கி லாந்தின் உச்ச நீதிமன்றங்களின் ஆங்கிலேய நீதிபதிகள், இந்நாள்வரை அவர்கள் வெளியே வரும் போது, வெள்ளை பொய் மயிர்த் தோகையை அணிந்தவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுடைய சட்டத்தைக் காட்டிலும், பூமியில் மேலான ஒரு சட்டம் இல்லை. பாருங்கள்? மேலும், அவர்கள் உச்ச நீதிபதிகளாயிருக்கிறார்கள். 46. நான் அரிசோனாவுக்கு சென்றது மற்றவைகளெல்லாம் எனக்கு நினைவிருக்கிறது. என்னால் முடிந்த வரை... நான் மரணபயத்தில் இருந்தேன். நான் ஃபீனிக்ஸ் கூட்டத்திற்கு சென்றேன். மேலும் நினைவில் உள்ளது, நான், "ஐயன்மீர் இதுவா சமயம்?” என்ற செய்தியைப் பிரசங்கித்தேன். அது நினைவிருக்கிறதா? நான் அதைக் கண்டேன், என்று கூறினேன். நான் சொன்னேன். “அது சம்பவிக்கும் முன், நினைவில் கொள்ளுங்கள், அது கர்த்தர் உரைக் கிறதாவது, ஏதோ ஒன்று நிகழப்போகிறது." அந்த ஒலிநாடாவை, அநேகமாக, ஒலிநாடா நூலகத்தில் நீங்கள் இப்பொழுது பெற்றிருப் பீர்கள். மேலும் அங்கே நான் சொன் னேன், “தரிசனங்கள் ஒருபோதும் தவறுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதோ ஒன்று நிகழப்போகிறது, நினைவு கொள் ளுங்கள்!” 47. மேலும் சில நாட்களுக்கு பின்னர், நான் பதற்றம் அடைந்தேன், மேலும் நான் நினைத்தேன், “இது என்ன? நான் மரிக்கப் போகிறேனா? அப்படியென்றால்... விரைவாக அது சம்பவிக்கட்டும், அதை நான் கடந்து செல்லமுடியும் என நம்புகிறேன். நான் அதைத் தாமதிக்க விரும்பவில்லை.” 48. பின்னர், ஒரு நாள் காலையில் கர்த்தர், “சபீனோ கான்யன் (Sabino Canyon) மலையுச்சிக்கு ஏறிப்போ” என்றார். 49. நான் அங்கு மேலே சென்று என் கைகளை உயர்த்தியபடி ஜெபித்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒன்று என் கையில் பட்டதை உணர்ந்தேன். அது ஒரு பட்டயமாயிருந்தது. நீங்கள் உங்கள் கையில் அவ்வளவு நீளமான பட்டயத்துடன் அங்கு நின்று கொண்டு இருப்பீர்களானால் நீங்கள் எப்படியாக உணர்வீர்கள் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். நான் அதை கீழே இழுத்து அதை நோக்கி பார்த்தேன். அது வெறுமனே அவைகளை போன்று ஒரு பட்டயம், நான் எப்போதும் பட்டயத்துக்கு அஞ்சுபவன். அது மற்ற பட்டயத்தை போன்று உலோகத்தை உடையதாயிருந்தது, அதாவது அது உலோக கலவை அல்லது அது போன்று, மிகவும் கூர்மையானதாயும், குறுகியதுமாய் இருந்தது. சண்டையிடுபவர்கள் தங்கள் ஒருவருடைய கைகளை ஒருவர் வெட்டிக்கொள்ளாதபடி, அதை சுற்றி இங்கே ஒரு உறையிருந்தது. அதன் கைப்பிடியில் ஒரு முத்து இருந்தது. அது என் கைகளி னுள் மிகச்சரியாய் பொருந்தியது. நல்லது, நான் என் முகத்தை துடைத்து திரும்பி பார்த்தேன். வேறொரு நாளில் சரியாக அதே இடத்தில், நான் ஒரு சிறிய வெள்ளை புறா இறங்குவதை கண்டேன். உங்களுக்கு அதைக் குறித்து பின்னர் கூறுகிறேன். 50. நான் அதை என் கையில் பிடித்திருந்தேன், நான் நினைத்தேன், “அது விநோதமானது, இப்போது கர்த்தாவே, நான்...என் சிந்தையை இழக்கிறேனா? இங்கே ஒருவருமே இல்லை. நான் மற்றவர்களிடமிருந்து, பல மைல் தொலை விலிருக்கிறேன், மற்றும் இங்கு ஒரு பட்டயம் உள்ளது. நான் என் கையை மேலே உயர்த்தியிருந்தேன், அது எங்கிருந்து வந்தது?” மேலும், நான் நினைத்தேன், “அது மிகவும் விநோதமான காரியம். இப்போது இங்கே பாருங்கள், அது ஒரு பட்டயம்” பாருங்கள், அதை தட்டினேன். அது ஒரு பட்டய மாயிருந்தது. மேலும் நான் சொன்னேன், “இங்கே யாருமே நிற்கவில்லை. நான் இந்தப் பாறைகளின் மேலாக, சரியாக மலையின் உச்சியின் மேலே நின்றுகொண்டிருந்தேன். மேலும் நீங்கள் அங்கிருந்து டூசானைக் (Tucson) கூட பார்க்கமுடியாது, அது மிகவும் கீழே உள்ளது. 51. நான் நினைத்தேன், “இப்போது, இது ஒரு விநோதமான காரியம். இப்போது, அது அருகாமையில் இங்கே எங்கேயாவது இருக்க வேண்டும், ஒரு பட்டயத்தை உருவாக்கி அதை என் கையில் வைக்கக் கூடிய யாரோ ஒருவர்தான்”. நான் சொன்னேன், அது, “ஆபிரகாமுக்காக ஆட்டுக்கடாவை சிருஷ்டித் தவரும், அந்த அணில்களை சிருஷ்டித்த வருமாகிய அதே தேவனாகத் தான் இருக்க முடியும்”அதை நீங்கள் கேள்விப் பட்டிருக் கிறீர்கள். மேலும், நான் சொன்னேன், “இது தான் அந்த பொருள், இதில் மூன்று வெவ்வேறு வஸ்துக்கள் உள்ளன, நான் எப்படி என் கைகளில் நிஜமான ஏதோ ஒன்றை பிடித்திருப்பேனோ, அப்படியாக அதை என் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தேன்”. 52. மேலும், நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன், அது கூறியது, “அது அந்த இராஜாவின் பட்டயம்!” 53. மேலும் நான் “இப்போது, அது எங்கிருந்து வந்தது? அது பாறைகளுக்கிடையே எங்கே யாவது இருந்ததா” என்று நினைத்தேன். மேலும், அதை என் கைகளில் இவ்வாறாக பிடித்துக் கொண்டு, “ஒரு ராஜாவின் பட்டயம்” என்று நான் சொன்னேன். பின்னர், நான் சுற்றிலும் பார்த்தபோது, அந்த பட்டயம் மறைந்துபோனது. மேலும் நான் “ஒரு ராஜாவின் பட்டயம்” என்றேன். அதற்கென்று அது. அதாவது வீரதீர செயல் புரிந்த அல்லது இராணுவ வீரர்களுக்கு பட்டயம் கொடுப்பதை, அதை நீங்கள் அறிவீர்கள். மேலும் நான் சொன்னேன், நல்லது, அது அநேகமாக அதற்காகத்தான் இருக்க வேண்டும். ஒருவேளை, நான் ஊழியக்காரர்கள் மேல் என் கைகளை வைக்கவோ அல்லது அதுபோன்று ஏதோ, அதாவது அவர்களை ஊழியக்காரர்களாக ஆக்கவோ அது பொருள்படக்கூடும். அதன் பின்னர் நான்... 54. மீண்டும் ஒரு சத்தம் பேசியது, அது சொன்னது, “அந்த இராஜாவின் பட்டயம்,” ஒரு இராஜா அல்ல; அந்த இராஜாவின் பட்டயம்! பாருங்கள்? 55. “இப்போது, நான் சிந்தை இழந்தவனாக இங்கு நிற்கிறேன் அல்லது ஏதோ ஒன்று இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது, யாரோ ஒருவர் என்னருகே நின்று கொண்டிருக்கிறார்” என்று நான் நினைத்தேன். 56. மேலும் சகோதரர்களே, இந்தக் காரியங்கள் உண்மையானவைகள். எனக்குத் தெரியவில்லை-உங்களுக்கு எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை, அது எப்போதும் அந்த விதமாகவே நடப்பதை நீங்கள் எப்போதும் பார்த்திருக்கிறீர்கள். மற்றும் அது.... என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே... இது மிகவும் ஒரு விசித்திரமான உணர்வாகவுள்ளது. 57. நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன். நான் நினைத்தேன், “நான் ஒரு சிறு ஆண் பிள்ளையாக இருந்தது முதல் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பேசியவர் எவரோ, சரியாக அவரே அங்கு நின்று கொண்டிருந்தார், ஆனால் அவரை என்னால் காணவே முடியவில்லை.” நான் “அந்த ராஜாவின் பட்டயம்?” அந்த ராஜா என்பது, தேவனாகத் தான் இருக்க முடியும் என்றேன். மேலும், “அந்த பட்டயம் என்ன? ” 58. “வார்த்தை, அதுதான் உன் கையில் வைக்கப்பட்டுள்ளது.” “மரணத்திற்கு பயப் படாதே, இது உன்னுடைய ஊழியம்” என்றார். 59. ஓ, என்னே! நான் அந்த மலையிலிருந்து கீழே சென்று, என் உச்சக்குரலில் கத்தி, அழுது, பாறைகளின் மீது குதித்தேன். நான் கீழேச் சென்று, என் மனைவியிடம் “நான் மரிக்கப் போவதில்லை, பார், இது-இது-இது என் ஊழியம்.” (நான் அவளிடம் பில்லிப்பாலை என்னிடம் கொண்டு வரவும், குழந்தைகளைக் கூட்டி வரவும் சொன்னேன். “இப்போது, (கவலைப்பட) என்னிடம் எதுவுமில்லை, ஆனால் நீங்கள் அனைவரும் பசியுடன் இருக்க வேண்டியதில்லை சபை பார்த்துக் கொள்ளும், மேலும் நான் உங்களை எல்லைக்கு அப்பால் சந்திப்பேன்” என்று சொல்லியிருந்தேன். மேலும்- மேலும் அவள்.. நான் “இல்லை, நான் மரிக்கப்போவதில்லை. இது எனது ஊழியத்தைப் பற்றிய தான விஷயம் என்றேன்.” 60. சில நாட்களுக்குப் பின்னர் நான் ஒரு கூட்டத்தி லிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன்; டெக்சாஸிலுள்ள (Texas) ஹூஸ்டனிலிருந்து (Houston) மூன்று பக்க தந்தி வந்திருந்தது. அந்த மனிதர் என்னை மிகவும் மோசமாக விமர்சித்த அந்த இரவில் கர்த்தருடைய தூதனானவரின் அந்தப்படம் எடுக்கப்பட்டது, அங்கே ஹூஸ்டனில் அந்தப் படம் எடுக்கப்பட்டது. அவர் என்னை அழைத்தார். அவர் சொன்னார்... ஒரு தந்தி அனுப்பினார், மனைவி கூறினாள், “சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் ஓய்வில்லாமல் இருக்கிறீர்கள், எனக்குத்தெரியும். என் மகன் (டெட் கிப்பர்மேனின் சகோதரியின் மகன்) மரண தண்டனை கைதியாக மின்சார நாற்காலியில் அமர்ந்து மரிக்க இருக் கிறான்”. ஒருவேளை (அதுவே பில்லிப்பாலாக இருந்தால்?) அவள் சொன்னாள், “அவனும் ஒரு சிறுமியும் மரிக்க இருக்கிறார்கள்” என்றாள். நீங்கள் அனைவரும் நிச்சயமாக அதைச் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். மேலும், “நீங்கள் வந்து கூட்டம் நடத்தி மக்களை ஒன்றாக இணைப்பீர்கள் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமே எங்களுக்கு உள்ளது” என்றாள். 61. மேலும் ரேமண்ட் ஹோக்ஸ்ட்ரா (Raymond Hockstra) எனக்கு ஏற்கனவே பலமுறை எழுதியிருந்தார், ஆனால் அந்த சந்திப்பிற்குப் பின்னர், நான் திரு. மேக் அனேலி (Mc.Anally) மற்றும் அவர்களுடனே வேட்டைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். “நல்லது, நான் என் முயற்சியை முன்வைக்காமல் அந்த சிறுவர்களை மரிக்கவிட்டால், என்னால் இனிமேல் ஒரு போதும் வேட்டைக்குச் செல்ல முடியாது” என்று நினைத்தேன். 62. அதனால் நான், “சரி, நான் வருகிறேன்” என்றேன். நான் ஹூஸ்டனுக்கு (Houston) வந்தேன், கூட்டத்தை நடத்தினேன், மற்றும் நிச்சயமாக.... அவர்களை அவர்கள் ஒருபோதும் கொல்லவில்லை, அவர்களுக்கு ஆயுள் தண் டனை மட்டுமே விதித்தார்கள். அதைத்தான் செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள், வெறுமனே.. அவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்க வேண்டும் என்று. ஆகவே அது டெக்ஸாஸில் சுமார் இருபத்தி யொன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று யூகிக்கிறேன். 63. எனவே திரும்பிச்சென்று, நான் மலையில் ஏறி சகோதரன் ஃபிரட் சாத்மனுடன் (Fred Sothmann) சென்றேன். அவர் இங்கு எங்கோ இருக்கிறார். சகோதரன் ஃபிரட், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? சரியாக இங்கேயே. சகோ தரன் ஃபிரட் சாத்மன், சகோதரன் ஜீன் நார்மன் (Gene Norman); ஒருநாள், இரண்டாம் நாள் அங்கு அமர்ந்திருந்தோம், நாங்கள் இருந்த முகாமிற்கு கர்த்தருடைய தூதன் நேராக இறங்கி வந்து, அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார். 64. நான் மீண்டும் மலைமேல் ஏறிச்சென்றேன். நான் ஏற்கனவே என் ஜாவலினாவை (ஜாவலினா என்பது ஸ்கங்க் பன்றிகள் என்று அழைக்கப்படும் ஒரு காட்டுப்பன்றி இனத்தை சேர்ந்த மிருகமாகும்) வேட்டையாடி பெற்றிருந் தேன். இன்னொரு ஜாவலினாவை சகோதரன் ஃபிரட் இருக்கும் திசையில் துரத்த முயன்றேன். அதனால் மலையின் பக்கவாட்டில் அவைகள் சாப்பிட்டுக் கொண் டிருந்த இடத்தை கண்டுபிடித்தேன். மேலும் நான் சொன்னேன், “நல்லது, சகோதரன் ஃபிரட்” இப்போது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று சொல்லுகிறேன், “இப்போது, நீங்கள் காலையில் அந்த இடத்திற்குச் செல்லுங்கள்.” நாங்கள் பகல் வெளிச்சம் வந்தவுடன் அங்கே மேலே செல்வோம், மலையின் மீது ஏறுவோம். “மேலும் பகல் நேரத்தில், அங்கு சென்று நான் மேலே மலையின் மறுபக்கம் வருவேன். இப்போது, நான் ஒன்றையும் சுடமாட்டேன், ஆனால் அவைகள் இந்த வழியாக ஓடிவருமானால், நான் அவைகளுக்கு முன்னால் சுட்டு அவைகளைத் திருப்பி விடுவேன். நீங்கள் பெரிதான ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் என்று நான் சொன்னேன்.. 65. அவர், “சரி” என்றார். 66. எனவே சகோதரன் ஃபிரட் அங்கு சென்றார். சகோதரன் ஜீன் நார்மன் (சகோதரன் ஜீன் வந்ததாக நான் நினைக்கவில்லை, அவர் வந்தாரா?) அவர் அதற்கு மறு பக்கத்தில் இருந்தார். உங்களில் பலருக்கும் ஜீன் நார்மனைத் தெரியும், அவர் பலருக்கு ஒரு ஆத்மார்த்தமான நண்பர், அருமையான சகோதரன். மேலும் அவர் கொஞ்சம் கீழே இறங்கினார், அங்கே, பன்றிகள் இருந்தன, அன்று காலையில் அவைகள் அங்கு இல்லை. மற்றும் நான் சகோதரன் ஃபிரட்டைப் பார்க்க முடிந்தது, அவருக்கு கை அசைத்தேன், அவர் என்னிடமிருந்து ஒரு மைல் தொலை விலிருந்தார். நல்லது, நான் “அவைகள் எங்கே போயிருக்க முடியும்?” என்று நினைத்தேன். நான் ஒரு பெரிய பள்ளத் தாக்கினூடே இறங்கினேன், கீழே வந்து, “என்னால் மட்டும் அவைகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிந்தால்” என்று நான் நினைத்தேன். மீண்டும் திரும்பி மேலே ஏறினேன். அது பொழுது விடிந்து சிறிது நேரமே ஆகியிருந்தது, அப்பொழுது தான் சூரியன் மேலே வரத் தொடங்கியது 67. நான் ஒரு மகா பெரிய பள்ளத்தாக்கை சுற்றிச் சென்றேன், ஓ, என்னே, நூற்றுக் கணக்கான அடிகள் ஆழமான, அந்தப் பள்ளத்தாக்கில் பெரியப்பாறைகள் இருந்தன, அவைகள் பெரியச்சுவர்களாக இருந்தன. மேலும் அப் போது சூரியன் மேலே எழும்பிக் கொண்டிருந்தது, அது சுமார் ஏழு மணியிருக்கும் என்று நான் யூகிக்கிறேன், அல்லது அப்படித்தான் இருந்தது. மேலும் நான் கீழே அமர்ந்து சுற்றிப்பார்த்தேன், நான் கீழே என் கால் சட்டையை பார்க்க நேர்ந்தது, அதில் அந்தக் புல்-ஹெடர் (bull-header) என்ற ஊமுள் குத்தியிருந்தது. நான் சொன்னேன், “உங்களுக்குத் தெரியுமா, இது வித்தியாசமாக தெரிகிறது. உங்களுக்குத் தெரியுமா, நான் டூசானுக்கு (Tucson) வடகிழக்கே, நாற்பது மைல் தொலைவிலிருப்பேன் என்றும், நான் என் காலில் இருந்து ஒரு ஊமுள்ளை (bull-header) எடுப்பேன் என்றும், கர்த்தருடைய தூதனா னவர் என்னிடம் கூறியிருந்தார்.” உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? இருக்கிறதா? ஆமாம், ஐயா. பாருங்கள்? நான், “அது விசித்திரமாயுள்ளது” என்றேன். நான் அதைப் பிடித்துக் கொண்டிருந்தேன். 68. நான் மேலே பார்த்தபோது, என்னிடமிருந்து ஐநூறு கெஜம் தொலைவில் சுமார் இருபது பன்றிகள், இந்தச் சிறிய மலர் செடியைச் சாப்பிட்டு வெளியே வந்து படுத்துக் கொண்டிருந்தன. “இப்போது, நான் சகோதரன் ஃபிரட்டை எப்படியாவது அந்த இடத்திற்கு வரவழைக்க முடியுமானால், அவர் தனக்கான பன்றியை அங்கேயே பெற்றுக் கொள்வார்” என்றேன். ஆனால் அவர் இப்போது என்னிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு மைல் தொலைவில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அதனால், நான் சொன்னேன், “அவர்கள் என்னைப் பார்க்காமல் நான் இந்தச் சிறிய ஜூனிபர் (Juniper) மரத்தின் வழியாக என்னால் இந்தச் சிறிய மலைமுகட்டை கடக்க முடிந்தால்,” நான், “இந்தப்பாதையில் சுற்றி வந்தால், இந்தப் பக்கமாக மான் வழித்தடம் உள்ளது, நான் அங்கு ஓடி, மேலும் வழியைவிட்டு வெளியேற முடியும் என்றேன். மேலும் ஒரு சிறிய காகிதத்தை இங்கே தொங்கவிடுவேனென்றால், அங்கு அந்த பள்ளத்தாக்கின் எந்த பிரிவின் வழியாகச் செல்ல வேண்டுமென்பதை அறிந்தவனாய், நான் சரியான நேரத்தில் சகோதரன் ஃபிரட்டை அங்கு வரவழைக்க முடியும்". 69. நான் இந்தச் சிறிய ஊமுள்ளை (bull-header) கீழே வீசினேன், அதைப்பற்றி மறந்திருந்தேன். நான் மலை மீது ஏறி அதை எளிதாக கடக்க தொடங்கி, திரும்பிப் பார்த்த போது, அவர்கள் என்னைப் பார்க்கவில்லை, நான் கீழே ஓடிவந்து அந்த மான் வழித்தடத்தை அடைந்தேன். நான் ஒரு பெரிய கறுப்புத் தொப்பியை அணிந்திருந்தேன். நான் இந்தப் பள்ளத்தாக்கினூடே வேகமாக ஓட ஆரம்பித் தேன். அப்போது அது நடந்தது. 70. முழு பூமியும் அதிர்ந்தது, எல்லா இடங்களிலும் அவ்வளவு பெரிய அளவு பாறைகள் கீழே உருண்டோடியது, புழுதி அப்படியே பறந்தது. அப்போது நான் பார்த்த போது எனக்கு முன்பாக ஏழு தூதர்கள் நின்றார்கள்; அது அப்படியே சரியாக இருந்தது. நான் தரையிலிருந்து மேலே உயரத்திலே நிற்பதுபோல் உணர்ந்தேன். முதலில் நான், கருப்புத் தொப்பி அணிந்த யாரோ என்னை சுட்டார்கள் என்று நினைத்தேன்; அது ஒரு ஜாவலினா பன்றியை போலிருந்தது, எப்படியோ, அவைகள் கருமையாக இருக்கு மென்பதை நீங்கள் அறிவீர்கள். என்னை யாரோ மிகவும் அருகிலிருந்து சுட்டுவிட்டார்கள் என்று நினைத்தேன், அதன் பின்பு தான், அது என்ன என்று நான்- நான் பார்த்தேன். நல்லது, உடனடியாக “ஏழு இரகசியங்களாயிருக்கிற ஏழு முத்திரைகள்” என்ற கட்டளையை வேத வசனங்களிலிருந்து நான் பெற்றுக்கொண்டேன். பாருங்கள்? 71. யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார்கள், "இப்போது...''ஓ, அவர், “சரி, இப்போது, ஒருநாள் தேவன் ஒருவேளை (சகோதரர் பிரன்ஹாம், நீங்கள் தரிசனங்களை காண்கி றீர்கள்) இந்த விஷயங்கள் என்ன என்பதை உங்களுக்கு வெளிப்படுத்துவார், நாம் அனைவரும் தேவனிடம் நெருங்கி வரவும், மேலும் அந்நிய பாஷைகளிலும் மற்றக் காரியங்களிலும் பேசுவதில் நமக்கு கிடைப்பதைக் காட்டிலும் அதிக வல்லமை உடையவர்களாகவும் இருப்போம்” என்று கூறினார். 72. நான், “அது அவ்வாறாக இருக்கமுடியாது" என்றேன். 73. காரணம், பாருங்கள், நான் வார்த்தையே சத்தியம் என்று விசுவாசிக்கிறேன். மேலும் வேதாகமம், “யாராவது இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினாலும் அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டாலும்” என்று கூறுகிறது. அது இந்த வார்த்தையில் இருக்க வேண்டும். பாருங்கள்? இது, ஜனங்கள் கவனிக்க தவறிய இரகசியங்களாகும், ஏனென்றால், சர்ப்பத்தின் வித்து பற்றிய எனது செய்தியும், விசுவாசியின் பாதுகாப்பு பற்றிய உண்மையான விசுவாசமும் அங்கிருந்துதான் வருகிறது. 74. அங்குள்ள எனது பிரஸ்பிட்டேரியன் சகோதரர்களை நான் இழிவுபடுத்தவில்லை, மற்றும் வழியிலிருக்கும் சில பாப்டிஸ்ட் சகோதரர்களே, உங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது. வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை, ஆனால் அதை நீங்கள் சரியாக பெற்றிருக்கவில்லை. பாருங்கள்? அதுசரி. பாருங்கள்? ஆனால், நானும்கூட தவறாக பெற்றிருந்தேன். ஆனால் பரலோகத்திலிருந்து ஒரு தூதன் வந்து நின்று உன்னிடம் சொல்வானேயாகில், அது சரியாக வேதத்தில் காணப்படுமானால், அது உண்மைதான். பாருங்கள்? அது சரி, பாருங்கள்? அவர் எப்பொழுதும் வேதத்துடன் சரியாக பேசுவார். 75. அந்த வட்டம் மேலே செல்லும் வரை நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அது சுழன்று மேலே செல்ல ஆரம்பித்தது, மற்றும் அவைகள் ஒரு மர்ம ஒளியாக, ஒரு மூடு பனியைப்போல மாறினது. சரியாக அதைப் போலவே... ஹூஸ்டனில் (Houston) எடுக்கப் பட்ட அந்த புகைப்படத்தை எத்தனைபேர் பார்த்திருக்கிறீர்கள்? கிட்டத்தட்ட அனைவரும். பாருங்கள்? சரி, அது அப்படியே அவ்வாறாகவே தான் இருந்தது. அவ்விதமாகவே அது மாறி, அது மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போனது 76. நான் ஓடி ஓடி, சகோதரன் ஃபிரட் (Fred) மற்றும் அவர்களெல்லாரையும் கண்டுபிடிக்க முயன்றேன். சிறிது நேரம் கழித்து, சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு, அவர் கீழேயிருந்து கையை அசைப்பதை பார்க்க முடிந் தது; மற்றும் சகோதரர் ஜீன் (Gene) அவர் தம் கையை அசைத்துக்கொண்டு வருவதை பார்க்கமுடிந்தது. ஏதோவொரு காரியம் சம்பவித்திருக்கிறது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அதன்பின் நான் அவர் களுடன் சேர்ந்து கொண்டேன். அதுதான் சகோதரன் ஃபிரட் சரியாக அங்கே அமர்ந்திருக்கிறார். 77. அது மேலே சென்றபோது, சரியாக மெக்ஸிகோ வரையிலிருக்கும் கண்காணிப் பகங்களும் மற்றவர்களும் அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் என்பதை நான் அறியவில்லை. அது மேலே சென்றபோது லைஃப் பத்திரிக்கை (life Magazine) அதைப் புகைப்படம் பிடித்திருந்தது. மேலும் உங்களில் அநேகர்... இங்கே லைஃப் பத்திரிக்கை (Life Magazine) அதன் படத்தை பிரசுரித்திருக்கிறது. இங்கே அது ஒரு மர்மத்திற்குரியதாயிருந்தது. அது எங்கேயிருந்து வந்தது என்று அவர் களுக்குத் தெரியவில்லை என்றும், அது மிகவும் அதிக உயரமாக இருந்தது என்றும் கூறினார்கள். அது எல்லா மேகமண்டலங்களுக்கும், மற்ற எல்லாவற்றுக்கும்... மேலாக இருந்தது, அது பனிமூட்டத்திற்கும் அதிக உயரத்தில் இருந்தது. ஏனெனில் அதன் உயரத்தை அடைந்தபிறகு அது முப்பது மைல் உயரமும் இருபத்தேழு மைல் குறுக்கேயும் இருந்தது. அந்த உயரத்தில் ஈரப்பதமும்கூட இருக்காது வேறு எதுவுமே அங்கு இருக்காது. பாருங்கள். 78. மேலும் அவர்கள் அது ஆகாய விமானமோ என்று நினைத்தனர், ஆகவே எல்லா இடங் களையும் பரிசோதித்தனர், அன்றையதினம் ஒரு விமானமும் பறக்கவில்லை. பாருங்கள், ஜன்னல்களும் மற்றவைகளும் அதிர்வுற்றதா என்பதை அவர்கள் பார்க்க வேண்டியிருந்தது. “அங்கே ஒரு விமானமும் இல்லை.” இங்கே சரியாக இந்த பத்திரிக்கையிலேயே அது உள்ளது, அது அதையே சொல்லயிருக்கிறது. மேலும் அச்செய்தி பரவி சென்றுகொண்டே இருந்தது. இன்று சரியாக.. 79. இங்கே, அது சயின்ஸ் (Science Magazine) பத்திரிக்கையில் உள்ளது, அதில் அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. அது என்னவென்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. 80. என்னுடைய நண்பன் ஒருவன் டூசானில் (Tucson) உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு அன்றொரு நாள் சென்றிருக்கிறான், அதைப்பற்றி அவர்களிடம் பேசியிருக்கிறான். “அது என்ன வென்று எங்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை...” என்று கூறினார்கள். 81. நான், “எதையும் கூறவேண்டாம், அது எந்த நன்மையும் செய்யப் போவதில்லை.” “பன்றி களுக்கு முன் முத்துக்களைப் போடவேண்டாம்” என்றேன். பாருங்கள்? அது சபைக்கு, தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கே, அழைக்கப்பட்ட வர்களுக்குத்தான். பாருங்கள்? 82. அதன்பின் ஒவ்வொருவராக வந்து கொண்டி ருந்தனர், என்னிடம் கூறினார்கள், “சகோதரன் பிரன்ஹாம், நான் உங்களுடைய புகைப்படத்தை இங்கே பார்த்தேன், நான் இதைக் காண்கிறேன், நான்..” என்றனர். அது எவ் வாறு இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? ஆனால் இந்த சகோதரன் வைத்திருக்கும் அந்த மிகப்பரந்த சுழற்சியாக எடுக்கப்பட்ட அதில்... மன்னிக் கவும். (சகோதரன் பிரான்ஹாம் புகைப்படத்தை பெறுகிறார்). அது இவ்வாறாக இங்கே துவங்கி, சுழன்று மேலெழும்பினது. உண்மையிலே இது வலது பக்கத்திலிருந்தது. “குறிப்பிடத்தக்க அந்த தூதனே என்னோடு பேசினான், அவன் வலது பக்கத்தில் நின்றிருந்தான்” என்று நான் கூறினது உங்கள் அனைவருக்கும் நினைவிலிருக்கும். அது நடைபெறுவதற்கு முன்பாகவே சொன்னேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவனுடைய இறக்கைகள் பின்புறம் நோக்கினவாறு இருந்தது. அந்த தூதன் மேலே சென்றபோது அவன் இறக்கைகள் சரியாக அவ்வாறே இருந்தது. பாருங்கள், அது போல....ஆதலால் அவர்கள் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர், ஏனென்றால் அது மிகவும் மர்மமாயிருந்தது. அது அப்படி மேலே ஆகாயத்தில் சென்று உருவானபோது, இவ்வாறாக கடைசியாக எடுக்கப்பட்ட படத்தை லுக் (Look) பத்திரிக்கை பிரசுரித்திருக்கிறது. அது எவ்வாறாக மேலே எழும்பி சென்றது என்பதை, அவர்கள் பார்க்கத் துவங்கியதிலிருந்து கண்டதை இங்கே காண்கிறீர்கள். இப்போது வருவது, அது உருவானபோது எடுக்கப்பட்ட நிஜமான முக்கியமான அந்த கடைசி புகைப்படம். 83. அவர்களுக்கு, அது எங்கிருந்து வந்தது அல்லது எங்கே சென்றது என்பதெல்லாம் இதுவரை தெரியாது. விஞ்ஞானமே அதைக் குறித்து முற்றிலுமாக தடுமாற்றம் அடைந் திருக்கிறது, என்ன நடந்ததென்பது அவர்களுக்கு புரியவில்லை. ஆனால், நமக்குத்தெரியும்: "உயர வானத்திலே அடையாளங்கள் காணப்படும்." நமக்கு அது தெரியும். பாருங்கள்? அவர் இந்தக் காரியங்களை வாக்களித் துள்ளார். பாருங்கள்! மேலும், இது மாத்திரமே புகைப்படம் எடுக்கப்படும் படியாக அனுமதிக்கப் பட்டுள்ளது.... 84. இப்போது, இந்தக் காலை வேளையில் இங்கே சொந்த மந்தை மாத்திரம் உள்ளதை அறிந்திருக்கிறேன். நான் எல்லாம் தெரிந்தவனாக என்னை காண்பித்து, சகோதர சகோதரிகளாகிய உங்களை ஈர்க்க முற்பட்டேன் என் றால் என்னை தயவு செய்து மன்னியுங்கள். நான் அந்த விதமாக இருக்க விரும்புவதில்லை. இந்தக் காலை வேளையிலே மேதைகளும் திறமைசாலிகளுமான மனிதர்கள் முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன். நான் படிப்பறி வில்லாதவன், என்னுடைய வேதவாக்கியங்களை கூட என்னால் சரியாக உச்சரிக்க இயலாது. இன்று காலை வாசிப்பதற்கென்று ஒரு அதிகாரத்தை உடையவனாயிருக்கிறேன். நான் இங்கிருக்கும் சகோதரர்களில் ஒருவரை அழைத்து, அதை எனக்காக வாசிக்கும்படியாக கேட்டுக் கொள்ளப் போகிறேன். ஏனென்றால் அதிலிருக்கும் பெயர்களை கூட என்னால் உச்சரிக்க இயலாது, அது ஒன்று நாளாகமம் 13 (சகோதரன் ஜாக், உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் அந்த பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்) அது என்னுடைய பாடபொருளுக்கானது. அதிலிருக்கும் பெயர்களைக் கூட என்னால் உச்சரிக்க முடியவில்லை, அதை அவரால் உச்சரிக்க முடியும் என்பதால் அவரை வாசிக்க சொல் கிறேன். 85. நான் திறமை வாய்ந்த மனிதர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் சகோதரர்களே, இவைகள் செய்யப் படுவது எதற்கெனில், நீங்கள் என்னுடய படிப்பறிவின்மையைப் பாராமல் நான் உங்களுக்கு சத்தியத்தை கூறுகிறேன் என்பதை நீங்கள் விசுவாசிக்கவேண்டும் என்பதற்காகவே. இது தேவனே உங்களுக்கு சத்தியத்தை உரைப்பதாகும். அதுதான் உண்மை. பாருங்கள்? 86. இப்போது, நான் ஸ்தாபனங்களை குறித்து பேசும் போது, நீங்கள் மிகவும் கொடூர மானவர்கள் என்ற அர்த்தத்தில் சொல்ல வில்லை... நீங்கள் உங்கள் சபைக்கு செல்ல வேண்டாம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. உங்கள் சபைக்கு செல்லுங்கள். அதை நீங்கள் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால் அந்த ஸ்தாபனங்களுடன் நீங்கள் சேர்ந்து கொள்ள மாத்திரம் வேண்டாம். ஏனென்றால், நான் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒருநாள் அதுவே மிருகத்தின் முத்திரை யாயிருக்கும் என்பதைப் பற்றி நான் உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், அதுவே அந்த முத்திரை. 87. நான் பிரசங்கிக்கிறேன். நான் அதை சகோதரன் ஜாக் சபையில் பிரசங்கிக்கப் போவதில்லை. அவர் என்னிடம் “நீங்கள் போய் அதை பிரசங்கியுங்கள்” என்று கூறுவார், ஆனால் நான் கூடாரத்திற்கு செல்லப் போகிறேன், அது சுமார் நான்கு மணி நேரம் இருக்கும். என்னுடைய பொருள், “சர்ப்பத்தின் அடிச் சுவடுகளின் வழியாக, ஆதியில் இருந்த மிருகம் மற்றும் முடிவில் இருக்கும் மிருகம்,". பாருங்கள்? அது ஒரு நான்கு மணி நேரம் எடுக்கும். என்னுடைய வேதவாக்கியங்கள் அனைத்தையும் குறித்து வைத்துள்ளேன். ஆதியில் இருந்த மிருகம் அவன் ஏதேன் தோட்டத்தில் மிருகமாயிருந்தான், அவனே முடிவிலும் மிருகமாயிருக்கிறான். அவன் ஒரு மதப்பற்றுள்ளவனாகவும், ஒரு ஸ்தாபனமாகவும் (அதுவே ஸ்தாபனத்தை உண்டாக்கியது) ஸ்தாபனத்தை சேர்ந்தவனாயும் இருப்பதை காண்பித்து, சரியாக அதன் அடிச்சுவடு களினூடாக வந்து, வேத வார்த்தையினால் அதை நிரூபித்து காண்பிப்பேன். அன்றொருநாள் அங்கே அதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு அளிக்கும் வரை நான் அதை அறிந்திருக்கவில்லை. 88. இப்பொழுது, நான் இதை ஒரு நாள் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏதோ ஒன்று என்னுடன் சொன்னது.... அதைப் பார்க்கையில், நான் நினைத்தேன்... சகோதரன் ஹிக்கர்சன், அவர் ஜெஃபர்சன்வில்லில் இருக்கும் சபையில் தர்மகர்த்தாக்களில் ஒருவர், அல்லது டீக்கன் மார்களில் ஒருவர். நான் சபைக்கு செல்வதில் நம்பிக்கையற்றவனாய் இருப்பேனென்றால் நான் ஏன் சபையை உடையவனாயிருக்கிறேன்? அவைகள் தேசத்தின் எல்லா இடங்களிலும் உள்ளது. அன்றொரு நாள் இரவு நாங்கள் அனைவரும் ஒன்று கூடினோம். ஒவ்வொரு இருநூறு மைல் தொலைவிற்கும் என்னுடைய ஒரு சபை என்பதாக இருந்தது. 89. இப்போது, இதில், இந்த படத்தில், நான் நின்று கொண்டிருந்தேன். அதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மேலும் ஏதோ ஒன்று.. என்னுடைய அறையில் நின்று கொண்டிருந்தேன். ஏதோ ஒன்று சொன்னது, “அதை வலது புறமாக திருப்பு” என்று. நான் கவனித்தேன். 90. அது, சற்று மனதளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் சொல்வது போலிருக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் பாருங்கள், அன்று இரவு நான் சொன்னது போல, இந்த மகத்தான காரியங்கள் மிகவும் அறிவுப் பூர்வமானது.... அறிவாற்றலுக்கு நான் எதிரானவன் அல்ல. நினை விருக்கட்டும், நாம் நமது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும், கல்வி மற்றும் அதைச் சார்ந்தவற்றை கற்பதற்கு. ஆனால் நான் இப்பொழுது உங்களுக்கு இதைச் சொல்லு கிறேன், இனிவரும் உலகத்திலே அது அவர்களுக்கு ஒரு பயனும் செய்யப் போவதில்லை, ஏனென்றால் அது இப்போது இருப்பதைக் காட்டிலும் முற்றிலும் மேலான வேறொரு நாகரீகமாய் இருக்கும். அந்த நாகரீகத்தில் எந்த ஒரு.. அதில் எந்த ஒரு பள்ளிக்கூடங்களும் இருக்காது, அதில் எந்த ஒரு மரணமும் இருக்காது, அதில் எந்த ஒரு பாவமும் இருக்காது. அவை எல்லாம் இங்கே இருக்கிறது. நாம் எவ்வளவு தான் நாகரீக வளர்ச்சி அடைந் தாலும், மேலும் மேலும் மரணங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. பாருங்கள்? அதுவோ மரணத்தை உடையதாய் இருக்கப் போவதில்லை. ஆனால் இப்போதோ நாம் பள்ளிக்கூடங்களை கொண்டிருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம், நாம் உடைகளை அணிய வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம்... 91. இந்தக் காலை வேளையிலே, நான் “சாத்தானின் ஏதேன்” என்பதின் பேரில் பேசலாம் என்றிருந்தேன். (உங்களில் அநேகர் அதன் ஒலிநாடாவை வைத்திருப்பீர்கள்) “சாத்தானின் ஏதேன்”. அவன் வேறொரு ஏதேனின் தோட்டத்தை உண்டுபண்ணினான். அதைச் செய்ய அவனுக்கு ஆறாயிரம் வருடங்களாயின, தேவன் தம்முடையதை ஆதியிலே செய்ததுபோல. தேவன் தம்முடைய ஏதேனை உண்டு பண்ணினார். சாத்தான் அதைக் கெடுத்துப் போட்டான். இப்போது சாத்தான், தனது சொந்த ஏதேனை உண்டாக்கிவிட்டான். ஆனால் தேவன் அதை அழிக்கப் போகிறார். (அது சரியே) பின்னர் தம்முடையதை ஸ்தாபிப்பார். ஏதோ ஒன்று என்னிடம், “வலப்பக்கமாக அதைத் திருப்பு” என்று சொல்லிற்று. “நான் சரியாகத் தான் பார்க்கிறேன் என நினைக்கிறேன்” என நினைத்தேன். “வலப்பக்கமாய் அதைத் திருப்பு” என்றது. பாருங்கள்? 92. “ஒருவேளை அந்த சத்தம் உரைப்பது, வலப்பக்க மாக அதைத் திருப்புவேண்டும் என்று அர்த்தம் கொள்ளலாம்” என்று நான் நினைத்தேன். நான் அதைச் செய்த போது, நீங்கள் பாருங்கள் அது என்ன என்று: அது ஹாப்மன் வரைந்த (Hofmann's), முப்பத்து மூன்று வயதில் கிறிஸ்துவின் தலை. இங்கே, பாருங்கள் இங்கே. அவருடைய கறுப்பு தாடி, அவருடைய முகம், அவருடைய கண்கள், அவருடைய மூக்கு, மற்றவை எல்லாம். அவருடைய மயிரின் ஒரு பகுதி, இங்கே உள்ளது பாருங்கள். மேலும் வெண்ணிறமான தூதனின் பொய்மயிர்த் தோகையை அவர் அணிந்திருந்தது, தேவனாயிருக்கிற அவருடைய செய்தியானது சத்தியமாயிருக்கிறது என்பதை காண்பிக்கவே. அவரே அண்ட சராசரத்தின் உச்ச நீதிபதி. பரத்திற்கும், பூமிக்கும் தலைமை நீதிபதி. அவரே தேவன், தேவனைத்தவிர வேறு எதுவுமில்லை. அவரே மானிட உருவில் வெளிப்பட்ட தேவன், தேவகுமாரன் என்று அழைக்கப்பட்டார், குமாரன் என்பது மனிதன் ஆகும். அது ஒரு வேளை நம்முடைய செய்தியை மிகச்சரியாக காணச் செய்யா விட்டாலும், வேதத்தின் மூலமாய் அடையாளம் காணப்பட்டும், ஆராதனையிலே அடையாளம் காணப்பட் டும், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறவருடைய பிரசன்னத்தினா லேயும் அடையாளம் காணப்பட்டி ருக்கிறது. ஆகவே சகோதரர்களே, அந்த ஏழு முத்திரை களும் சத்தியமாயிருக்கிறது. இதனோடு நீங்கள் உடன்படாமலிருக்கலாம். ஆனால் வெறுமனே உட்கார்ந்து உங்கள் திறந்த இருதயத்தோடு ஒருமுறை படிக்கவும். பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்தட்டும். 93. இங்கே சகோதரன் ஜாக் (Jack)... இதைப் பிரசிங்கிப்பதற்கு முன்பு அவரை அழைத்தேன், அவரிடம் ஒரு முறை, “இந்த வெண்மையான பொய் மயிர்த்தோகை (Wig) என்பது என்ன?” என்று கேட்டேன். 94. அவர் “நல்லது, சகோதரன் பிரன்ஹாம், அது அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவருடைய மகிமையடைந்த சரீரத்தில் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறேன்” என்று கூறினார். நான் சகோதரன் ஜாக்குடன் பேசிக்கொண்டிருந்தேன். மேலும் அங்கே... சகோதரன் ஜாக் மூர் மற்றும் சகோ தரன் வேய்ல் போதிக்கும் வேதசாஸ்திரம் மற்றும் அதைச் சார்ந்த உபதேசங்களின் மேல் நான் சார்ந்திருப்பது போல் இந்த உலகத்தில் வேறு எவருடைய உபதேசங்களின் மேல் சார்ந்திருக்க முடியுமோ என்பதை நான் அறியேன். அவர்கள் அதைச்சார்ந்த பல்வேறு புத்தகங்களை பல்வேறு கோணங்களில் கற்றறிந்த உண்மையான வேதசாஸ்திரிகள் ஆவர். நல்லது. ஆனால், நீங்கள் பாருங்கள், அப்படி யெல்லாமிருந்தும், என்னுடைய இதயப்பூர்வ சிநேகிதனாக இருந்தும், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலிருக்கும் ஏதோ ஒன்று, அதை பெற்றுக் கொள்ள முடிய வில்லை. 95. ஆனால், இந்த ஒன்று, என்னிடம் வந்தபோது, அது என்ன என்று நான் கவனித்தேன். இங்கே, அவருடைய கருமையான தாடி உள்ளது. நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்று நான் யூகிக்கிறேன். பாருங்கள்? அவருடைய கருமையான தாடியும், கருமையான மயிரும், அவருடைய கண் களும், மூக்கும், எல்லாமுமே மிகச்சரியாக நேர்த்தியாக இருந்தது. மேலும் அவருடைய முடியின் ஒரு பாகமும்கூட, மேலே இந்தப் பக்கமாக வந்திருந்தது. அவர் தேவன்! பாருங்கள்? அவரே நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். இது லுக் (Look Magazine) பத்திரிக்கை... அல்லது லைஃப் (Life Magazine) பத்திரிக்கை. நான் நினைக்கிறேன் இது.. இப்போது அது என்ன வெளியீடு என்பதை மறந்து விட்டேன்; ஓ! மே 17-ம் தேதி 1963. அது இந்த தேதியில்தான் வந்தது. யாருக்காவது இந்தப் பத்திரிக்கை வேண்டுமானால், இது அதே படம் தான், ராக் ஃபெல்லர் (Rockfeller) மற்றும் அவருடைய மனைவியும் அதன் மறுபுறத்தில் இருந்தது. மேலும் இதுதான், நியூ சயின்ஸ் (New Science Magazine) பத்திரிக்கையில், “இன்னும், இது ஒரு மர்மமாகவே உள்ளது” என்று பிரசுரிக்கப் பட்டது. 96. இக்காரியங்களை எதற்காக நான் சொல்லுகிறேன்? தேவன் வானத்திலும், பூமியிலும் சரியாக அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார் என்பதை நாங்கள் சொல்ல முயற் சிக்கும் காரியங்களை உங்களுக்கு சற்று காட்சிப்படுத்தவே இதைச் சொல்கிறோம். இந்தப் பகுத்தறிதல், தரிசனங்கள் இவற்றில் நமக்கு அநேக ஆள் மாறாட்டங்கள் எப்பொழுதுமே உள்ளன. ஆனால் நினைவி ருக்கட்டும், ஒரு கள்ள டாலர் நோட்டு இருக்குமானால், ஒரு நல்ல டாலர் நோட்டு அதற்கு முன்னதாவே இருந்தாக வேண்டும்; முதலில் உண்மையான டாலர் நோட்டு இருக்க வேண்டும். பிறகு அதிலிருந்துதான் அந்த போலியானது செய்யப்படுகிறது. எப்படி நமக்கு ஒரு உண்மையான மோசேயும், உண்மை யான ஆரோனும் இருந்து, பின்னர் நமக்கு யந்நேயும், யம்பிரேயும் அவர்களுக்குப் பிறகு இருந்தனரோ அது போலவே. இவை எல்லாம் எப்படி வருகிறது என்று பாருங்கள்? அவர்கள் அதைப்பார்த்து, அதன் பிறகு அதைப் போலவே ஆள்மாறாட்டம் செய்யப்பார்க்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே ஒரே ஒரு அசல்தான் உண்டு. அதுதான் சரி. இதைப் புண்படுத்தவோ, அல்லது தரக்குறைவுச் செய்யவோ, அல்லது காரியங்களை மாற்றி வைப்பதற்கோ அதைச் சொல்லவில்லை, ஆனால் சத்தியம் என்பதனா லேயே, அதை அறிந்து கொள்ள நான்... 97.நான் வயதானவனாகிக் கொண்டிருக்கிறேன். மேலும் எனது நேரம் இன்னும் அதிகம் இல்லை என்று எனக்குத் தெரியும். ஒருவேளை இயேசு தாமதிப்பாரானால், நான் சிறிது காலம் இங்கே இருப்பேன்; ஆனால் இந்த இருதயம் ஒரு நாள், கடைசித் துடிப்பை துடிக்கும் என்றும், ஒரு பெரிய, இருண்ட குழியாகிய மரணத்திற்குள் பிரவேசிப்பேன் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அது வரும் போது, நான் மனந்திரும்புவதற்கோ அல்லது எதற்குமே திரும்ப வேண்டிய அவசியமான எதுவும் எனக்கு இருக்க கூடாது. அந்த நேரம் எனக்கு வரும்போது, நான், தேவனுடைய கிருபை யினால் பரிசுத்தமும், களங்கமுமில்லாதவனா கவும் இருக்க விரும்புகிறேன். நான் அங்கே உள்ளே பிரவேசிக்கும்போது, அவருடைய நீதியின் அங்கியினால் சுற்றப்பட்டவனாய், என்னுடைய மனதில் இதைக் கொண்ட வனாய் பிரவேசிப்பேன்: நான் அவரை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறிந்திருக் கிறேன்; பின்னர் அவர் என்னை அழைக்கும் போது, நான் மரித்தவர்களின் மத்தியிலிருந்து வெளியே வந்து அவருடன் என் றென்றும் ஜீவிப்பேன். இந்த நாளுக்குரிய தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மேல், ஒவ்வொரு மனித னுடைய விசுவாசத்தை விருத்தியடையச் செய்வதே என்னுடைய நோக்கமாகும், உங்களுடைய வேதத்துவத்தை மாற்றவோ அல்லது வேறெதுவோ இல்லை. இப்போது நாம் ஜெபிப்போம். 98. அன்பான தேவனே, இந்தக் காலை வேளையிலே, உமக்கு நன்றியுடைய ஜனங்களாய் இருக்கிறோம். ஆனால், இன்னும் கர்த்தாவே, நாங்கள் இருளான உலகத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்.... இந்தக் காலை வேளையிலே இங்குள்ள அனைவரும், தகப்பனே, நாங்கள் என்ன உணர்கிறோம் என்றால், உம்மோடு நெருங்கி நடக்க விரும்புகிறோம். உம்முடைய அந்த.... அந்தத் தொடுதல் எங்களுக்கு, எங்கள் ஜீவியத்தில் தேவை. அது எங்களை மிருதுவாக்கி எங்களை வளைந்து கொடுக்கும் தன்மையுள்ளதாகச் செய்யும். அதனால் எந்த நேரத்திலும் எங்களை நீர் மாற்ற முடியும், தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் எங்களை உருவாக்கும். அதுவே எங்களுடைய நோக்கமாய் இருக்கிறது. பிதாவே, அது... நான் கொண்டிருக்கிற ஒரே குறிக்கோள் என்னவென்றால், உமக்கு முன்பாக ஜீவிக்க முயற்சிக்கவும், உம்முடைய வார்த்தையைப் பெற்று, அதைத் திரும்பவும் புருஷர் மற்றும் ஸ்திரீகளிடம் அதை பேசவும், அது...ஒரு வித்தியாசமான நபராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல; ஆனால் எனக்கு ஜீவனை கொடுத்த அவரை கனப்படுத்த முயற்சிக்கவும் செய்வதே. இதை அருளும் கர்த்தாவே! 99. அப்படிப்பட்ட ஒருவரும் இன்று இங்கே இல்லாதிருப்பார்களாக... இன்று காலை தேசம் முழுவதும் நாம் மீண்டும் (தொலைபேசி வாயிலாக) இணைக்கப் பட்டிருக்கிறோம். நம்முடைய சத்தத்தின் ஒலியின் கீழாக இருந்து, உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் உம்மை அறிந்து கொள்ளாமலேயே அந்த பெரிய குழிக்குள் செல்லும் அப்படிப்பட்ட ஒருவரும் நம்மிடையே இல்லாதிருப்பார்களாக. ஒரு போதும் போகத்திருக்கட்டும். தேசத் தினூடே எங்காவது பாவிகள் இருப்பார்களானால் அல்லது, இந்தக் கட்டிடத்திலோ அல்லது இந்தப் பெரிய அரங்கத்திலோ இக்காலை வேளையில் இங்கே உட்கார்ந்திருக்கலாம். அப்படி யாராகிலும் உம்மை அறியாம லிருந்தால், இந்நாளில் தாமே அவர்களது மனசாட்சி அசைக்கப்படட்டும், எழுப்பப் படட்டும்; நம்முடைய ஜீவியங்களுக்காக உன்னதத்தில் பதிலளிக்க நாம் எந்த நிமிடத்திலும் அழைக்கப்படலாம் அல்லது உத்தரவிடப்படலாம் என்று அவர்கள் உணர்த்தப்படட்டும், மேலும் நமது பெயர் இன்னமும் அந்த குற்றப் பதிவேட்டில் (Stalk Book) இருந்தால், நாம் தப்பிக்க முடியாது. ஆனால் அது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் இருக்குமானால், அது மெய்யான ஜீவன், நாம் இரட்சிக்கப்படுவோம். 100. மேலும் கர்த்தாவே, அந்த ஜீவன் தண்டிலிருந்து மகரந்தத்திற்குள்ளாகவும், உமியி லிருந்து தானிய மணிக்குள்ளாகவும் பயணிப் பதால், இந்தக் காலையில் நாம் அதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், தானிய மணிக்குள் செல்ல வேண்டிய ஜீவன், தண்டிலேயே பின்தங்கி இருந்தால், அதை இன்றே வெளியே கொண்டு வாரும் கர்த்தாவே. அது தானிய மணியின் நகருதலின் பின்னாலேயே தொடர்ந்து வரட்டும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 101. அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக மன்னிக்கவும். வானொலி நேரம் மற்றும் தொலைபேசி இணைப்பின் நேரத்தைக்கூட நான் மறந்துவிட்டேன். 102. இப்போது நாம் வாசிப்பதற்கு திருப்புவோம். சகோ தரன் ஜாக், உங்கள் வேதாகமம் உங்களிடம் உள்ளதா? என்னுடைய வேதபகுதியை நான் கண்டுபிடிக்கும் வேளை யில், சகோதரன் ஜாக் அவர்களை வேதத்தை வாசிக்கும் படி கேட்கிறேன். ஏனெனில் என்னால் இந்தப் பெயர்களை சரியாக உச்சரிக்க முடியவில்லை. சரி. இது முதலாம் நாளாகமம் 13-ல் உள்ளது. (சகோதரன் ஜாக் மூர் கேட்கிறார், முழு அதிகாரமுமா? சகோதரன் ஜாக் மூர் நாளாகமம் 13:1 முதல் 14 வரை வாசிக்கிறார்.) 1. தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுப் பேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைப்பண்ணி, 2. இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேன் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளி நிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களி டத்துக்கு ஆள் அனுப்பி, 3. நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத் துக்குக் கொண்டுவருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான். 4. இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மை யாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள். 5. அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டு வரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லை மட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங் கூட்டி, 6. கேருபீன்களின் நடுவே வாசம் பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுது கொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவி லிருந்து கொண்டு வரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனை வரும் அவ்விடத்திற்குப் போனார்கள். 7. அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின் மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள். 8. தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்கு முன்பாகச் சுரமண்டலங் களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப் பாடினார்கள். 9. அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான். 10. அப்பொழுது கர்த்தர் ஊசாவின் மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டி யண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான். 11. அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்த தினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ் ஊசா என்னும் பேரிட்டு, 12. அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்திற்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி, 13. பெட்டியைத் தன்னிடத்தில் தன்னிடத்தில் தாவீதின் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே சேர்த்தான். 14. தேவனுடைய பெட்டி ஒபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஒபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற் றையும் ஆசீர்வதித்தார். 103. எனக்காக வேதத்தை வாசித்ததற்காக நன்றி, சகோதரர் மூர் அவர்களே. இப்போது மன்னிக்கவும், அதை என்னால் வாசிக்க முடியவில்லை, ஆனால் நான்-நான்... அதைச் செய்ய முடியவில்லை. 104. இப்போது என்னுடன், மாற்கு 7:7-ஐ நீங்கள் திருப்பும்படி நான் விரும்புகிறேன். நாம் பரிசுத்த மாற்கு 7-ம் அதிகாரத்தின் முதல் ஏழு வசனங்களை வாசிக்கலாம். 1. எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடி வந்தார்கள். 2. அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம் பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம் பிடித்தார்கள். 3. ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிட மாட்டார்கள். 4. கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம் பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக் குடங்களையும் மணைகளையும் கழுவுகிறது மல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டு வருவார்கள். 5. அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். 6. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 7. மனுஷனுடைய கற்பனைகளை உபதேசங் களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். நாம் ஜெபிப்போம் 105. அன்புள்ள தேவனே, இப்போது உம்முடைய வார்த்தையைக் கனப்படுத்தும். அது எந்த நோக்கத்தைக் கொண்டுள்ளதோ, அதை அது நிறைவேற்றட்டும். அதை பேசும்படிக்கு எங்களை கருவிகளாக உபயோகியும், உம்மிடமிருந்து எங்கள் செவிகள் கேட்கும் படியாகவும், எங்கள் இருதயங்கள் அதைப் பெற்றுக் கொள்ளும்படியாகவும் எங்களைப் பயன்படுத்தும். இயேசுவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக கேட்கிறோம். ஆமென். 106. இப்போது, சிறிது நேரத்திற்கு எனது பொருள் இது... நான்.... 107. இந்தக் காலையிலே நாம் தேசிய தொலைபேசியுடன் இணைக்கப்பட்டுள்ளோம். எனது நல்ல நண்பர் ராய் பார்டர்ஸ் (Roy Borders) அவரும் இதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன், கடந்த இரவு மிகவும் நொறுங்கிப் போயிருந்தார். கடந்த இரவு நாங்கள் வானொலி... தொலைபேசி இணைப்பிலிருந்ததை நான் மறந்துவிட்டேன். சகோதரர் ராய் அவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும், அங்கே சான் ஜோஸில் (San Jose) இருக்கும் சபையிலிருந்தாலும் அல்லது சகோதரர் மெக்ஹூவின் (McHughes) சபையிலிருந்தாலும், அல்லது எங்கிருந்தாலும், பயப்படாதீர்கள், என் சகோதரனே எல்லாம் சரியாகிவிடும். அமைதியாக தரித்திருங்கள். அவர் அதை எனக்குத் தெரியப்படுத்துவார். ராய், கவலைப்பட வேண்டாம் மகனே, தேவனில் விசுவாசமாயிருங்கள். 108. இந்தக் காலையில் எனது பாடபொருள்: “தேவ சித்தம் இல்லாமல் தேவனுக்காக ஒரு சேவை செய்ய முயற்சித்தல்.” இப்போது இது ஒரு வினோதமான உரை, நமது கர்த்தர் தாமே இப்பொழுது இதை நமக்கு வெளிப் படுத்துவார் என்று நம்புகிறேன். நினைவிருக்கட்டும், "தேவனுடைய சித்தமில்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சி செய்தல்”. இப்பொழுது, இது மிகவும் விநோதமாயுள்ளது. ஆனால் இதில், தேவன் ஒருக்கால் நமக்கு உதவிச் செய்யக்கூடும். 109. மற்றுமொருக் காரியம், இந்தக் காலையில் இதைச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய மிகவும் அன்புள்ள நண்பர் ஒருவர், வாலிப மனிதர், நம் மத்தியில் இருப்பதற்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம். வானொலி அல்லது தொலைபேசி இணைப்பில் இருக்கும் உங்களில் அநேக ருக்கு அவர் யார் என்பது தெரியும். இன்று அவருடைய பிறந்தநாள், தொண்ணூற்று மூன்று வயது. சகோதரர் பில் டாக் (Bill Dauch) என் முன்பு இங்கே உட்கார்ந்து இருக்கிறார், தொண்ணூற்று மூன்று வயது. 110. சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவர் சொன்னார், “அவர் பிழைக்கமாட்டார்.” நான் இப்பொழுது அவர் உட்கார்ந்திருப்பதை கவனித்தேன். பிராணவாயு (Oxygen) வைக்கப் பட்ட நிலையில், அவருடைய அன்பான மனைவி என்னை அழைத்து, “சகோதரர் பிரன்ஹாம், உங்கள் இதயப்பூர்வ சிநேகிதன் “பில் (Bill) உயிரோடு இருப்பதைத் காண விரும்பினால், நீங்கள் உடனே வருவது நல்லது” என்றாள். 111. மேலும் நான்... அவரை சென்றடைய முயன்றபோது எனது (காரின்) டயர்களில் ஒன்று பக்கவாட்டில் வெட்டப்பட்டு (கிழிக்கப்பட்டு) சக்கரத்திலிருந்து பெயர்ந்து வெளியே வந்து விட்டது. நான் ஒஹாயாவில் ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நிறுத்தி, அங்கிருந்த கழிவறைக்கு சென்று, பின்னர் அவரிடம் செல்ல திரும்பி, வெளியே நடந்து வந்தபோது ஒரு தரிசனம் கண்டேன். அங்கே சகோதரன் டாக் (Dauch) நின்றிருந்தார், சபையிலே கைகளை நீட்டியபடி நின்று கொண்டிருந்தார். அது மாறியது. பின்னர் நீங்கள் வீதியில் நடந்து வந்து என் கைகளை குலுக்குவதை கண்டேன். அப்பொழுது, “போய் அவரிடம் சொல்”. “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று சொல்லப் பட்டது 112. அப்போது அவருக்கு ஏறக்குறைய தொண்ணூறு வயதாகியிருந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இருதய அடைப்புடன் முழு இருதயமும் செயலிழந்து இருந்தது. மிகவும் சாமர்த்தியசாலியான மருத்துவர், அந்த மனிதன்... இல்லை... நான் அதைச் சொல்லமாட்டேன். அவர் தாம் விரும்பும் எந்த மருத்துவரையும் நியமித்துக் கொள்ளக் கூடியவர். அவரிடம் மிகவும் அருமையான ஒரு யூத மருத்துவர் இருந்தார். அவர் முன் அறையில் என்னை சந்தித்து, “அவர் பிழைப்பதற்கு அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை” என்றார். 113. பிறகு நான் உள்ளே சென்று, ஆக்ஸிஜன் சாதன கூட்டுக்குள் எனது கையைவிட்டு, “பில் நான் பேசுவது கேட்கிறதா?” என்றேன். அவர் தம் தலையை அசைத்தார். நான், "கர்த்தர் உரைக்கிறதாவது, இப்போது நீங்கள் மரிக்கப்போவதில்லை” என்றேன். 114. அதிலிருந்து ஒரு வாரத்தில், நான் என்னுடைய செய்தியை பிரசங்கிக்க பீடத்தின் மேல் நின்று கொண்டிருந்தேன், அந்தக் கட்டிடத்தின் வழியாக சகோதரர் டாக் (Dauch) நடந்து மேலே வந்து கொண்டிருந்தார். நான் ஃபர் உணவகத்திற்கு (Furr's Restaurant) சென்றிருந்தபோது, அதாவது லூயிவில்லில் உள்ள ப்ளூபோர் உணவகம், அவர் காரை விட்டிறங்கி, தன்னுடைய கையை நீட்டியபடி வீதியில் நடந்து வந்தார். மிகச்சரியாக கர்த்தருடைய வார்த் தையின்படியே. இது மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தது; நடந்தது; இப்போது அவர் நெடுந் தூரத்தை கடந்து வந்து, இங்கே ஷ்ரீவ்போர்ட்டில் அமர்ந்திருக்கிறார், (தேசத்தை கடந்து, விமானத்தில் அல்ல, காரில்) உஹ்ஹூ, இந்தக் காலையில் இங்கு அமர்ந்திருக்கிறார். "பிறந்த நாள் வாழ்த்துக்கள், சகோதரன் டாக்”. இது தேசத்தின் அனைவரிடத்திலிருந்தும், எல்லா இடங்களிலிருந்தும். “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!”. 115. அவர் ஒரு திரித்துவக்காரராயிருந்ததினிமித்தம், நான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன், என்னுடைய முதல் கூட்டங்களின் ஒன்றிற்கு அவர் வந்திருந்தபோது, (நீங்கள் பார்க்கும் வண்ணமாக அவர் மிகவும் திடகார்த்த மனிதனாய் இருக்கிறார்) சகோதரன் பேங்க்ஸ் வுட் தன்னுடைய உடையை அவருக்கு கொடுக்க வேண்டியதாயிருந்தது. அவர் சுமார் எண்பத்தைந்து அல்லது தொண்ணூறாவது வயதில் குளத்திற்குள் இறங்கியபோது, நான் அவருக்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். அந்த ஒரு வித பாதுகாப்பை பெற்று கொள்ளும் வரை தாம் ஒருபோதும் நன்றாக உணர்ந்ததில்லை என்று கூறினார். பின்னர், இனி ஒருபோதும் முதுமையடைய முடியாத ஒரு பிறந்த நாளை பெற்றுக் கொண்டார். அது சரியே. அந்த மகத்தான ஸ்தலம். கர்த்தருடைய வருகையை காணும்வரை தாம் உயிரோடிருக்கவும் கூட எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார். அது நடக்கக் கூடும். ஆனால், ஒருவேளை அவர் மரிக்க நேர்ந்தால், பின்னர் நாம் உயிரோடிருக்கும் பட்சத்தில், அந்த ஒரு நாளில் அவர் முதலாவதாக வருவார். சரி. ஆகவே, சகோதரன் டாக், இப்போது அதை தவறவிட எந்த வழியுமேயில்லை. நீங்கள் சரியாக கோட்டிற்கு நடுவில் உள்ளீர்கள். அங்கேயே இருங்கள் என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இவரை போன்ற ஒரு நல்ல மனிதனுக்காகவும், இவ்வளவு வருடங்களை இவருக்கு கொடுத்ததற்காகவும், நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். 116. நாளாகமம் புத்தகத்தில், “தேவ சித்தம் இல்லாமல் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்தல்." தேவன் இராஜாதிபத்தியமுள்ளவர். முதலில் நாம் அதைப் புரிந்து கொள்ளவேண்டும். நம்மால் ஏன் ஒரு எழுப்புதலை பெற முடியவில்லை என்று இன்றைக்கு ஜனங்கள் ஆச்சரியப் படுகின்றனர். தேவன் இராஜாதிபத்தியம் உள்ளவர் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? பாருங்கள், வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. 117. மேலும் நாம் முயற்சிக்கிறோம்... நான் எனது அருமை சகோதரர்களாகிய பாப்டிஸ்டு சகோதரர் குழு வோடு சில காலத்திற்கு முன்பு கலந்துரையாடிக் கொண்டி ருந்தபோது, அவர்கள், “சகோதரர் பிரன்ஹாமே, நாம் வார்த் தையை எடுக்கும் போது, வார்த்தைக்கு வார்த்தையும், பக்கத்திற்கு பக்கமும், எழுத்துக்கு எழுத்துமாக எடுத்தால் மாத்திரமே நமக்கு எழுப்புதல் உண்டாகும்” என்றனர். 118. அதற்கு நான், “நானும் பக்கத்திற்கு பக்கம் விசு வாசிக்கிறேன்”என்றேன். அவர் சொன்னார்... நான், “அதைச் செய்ய அவர்கள் நீண்ட காலமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்” என்று சொன்னேன். 119. அதற்கு அவர், “ஆனால் நாம் வார்த்தைக்கு கிரேக்க வியாக்கியானத்தையும், கிரேக்க மொழி என்ன சொல்கிறது என்பதையும் கண்டுபிடிக்கவேண்டும்” என்றார் 120. நான் சொன்னேன், “நான் அதிகம் படிக்கவில்லை. ஆனால் சபையின் வரலாற்றையும், நிசாயா ஆலோசனை சங்கம், முந்தைய நிசாயா ஆலோசனை சங்கம் மற்றும் நிசாயா பிதாக்கள் போன்றவற்றை படிக்கும் போது, அவர்கள் கிரேக்க மொழியை குறித்து தர்க்கம் செய்தனர். அது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு. ஒருவர், “அது இவ்வாறாக அர்த்தங்கொள்கிறது” என்றும், இன்னொருவரோ, “அது அவ்வாறாக அர்த்தங்கொள்கிறது, கிரேக்க மொழி இப்படியாய் அர்த்தங்கொள்கிறது” என்றும் கூறினர் 121. நம்முடைய (ஆங்கில) மொழியை போலவே; ஸீ (See) என்ற ஒரு வார்த்தைக்கு, நீங்கள் அதை “நான் புரிந்து கொள்கிறேன்” என்றும் "ஒரு நீர்நிலை” என்றும், இன்னும் பல அர்த்தங்களை கொள்ளலாம். போர்ட் (Bored) என்பதற்கு, “ஒரு துளையிடுதல், நடப்பித்தல்”, அல்லது “நீ என்னை சலிப்படைய செய்தாய்”, அல்லது “என் வாரியத்திற்கு (Board) நீ கட்டணம் செலுத்தினாய்” அல்லது அதை எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம், அநேக அர்த்தங்கள். அந்த சிறிய உயிரெழுத்துக்கள், மற்றும் அது போன்றவைகள், அதன் முழுபொருளையுமே மாற்றிவிடுகிறது. ஆதலால், நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. தேவன் அதை அவ்வாறாகவே எழுதியுள்ளார், ஏனெனில்... 122. மேலும் எல்லா வார்த்தையும் ஏவப்பட்டதாயிருக்கிறது. அவர், “நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன், பிதாவே, நீர் ஞானிகளுக்கும், கல்வி மான்களுக்கும் மறைத்து, பாலக ருக்கு அதை வெளிப்படுத்தப் போகிறபடியால்" (ஆமென்) “கற்றுக் கொள்ளும் பாலகருக்கு” அது அவரைக்குறித்த வெளிப்பாடு, நேற்றுமாலை நான் கூறியபடி, “அதை பாலக ருக்கு வெளிப்படுத்துவேன் என்றார்.” 123. நான் சொன்னேன், “அது வேலை செய்யாது ஐயா.” “ஒரு எழுப்புதலானது, தேவன், இராஜாதிபத்தியமுள்ள தேவன் அதை அனுப்பும் வரையில், அது ஒரு போதும் வராது. பிறகு அவர் தனது பெயரைக்கூட கையெழுத்திட முடியாத ஒரு அறிவீனனை எடுத்துக்கூட அதைச் செய்யமுடியும். கிரேக்க மொழியை விடுங்கள், அவன் ஒரு நல்ல ஆங்கிலத்தை கூட அறியாதவனாக இருக்கலாம்” என்று நான் கூறினேன். 124. பெந்தெகோஸ்தேயின் நாட்களில் பேதுரு பிரசங்கிக்கும் போது அதைத்தான் அவர் செய்தார், உங்களுக்குத் தெரியும், அவனால் தனது பெயரைக்கூட எழுத முடியாது, ஒன்றுமறியாதவன், படிப்பறியாதவன். ஆனால் தேவனோ, நமது அறிவாற்றலுள்ள சிந்தனைக்கு எட்டாத வினோத மான வழிகளில் காரியங்களை செய்கிறார். அதுவே அவரை தேவனாக்குகிறது. அவர்கள் ஒரு கூட்ட வேதசாஸ்திரிகள், பிரமுகர்கள் போன்றவர்களை உடையவர்களாய் இருப்பார்களானால், “அந்த திறமையான காய்பாவை பாருங்கள், அவன் அதை மிகச்சரியாக பெற்றிருந்தான்”, என்று கூறியிருப்பார்கள். ஆனால் தேவனோ இறங்கி சென்று, தங்கள் பெயர்களைக்கூட கையெழுத்திட தெரியாதவர்களாகிய மீனவர்கள், அவர்களைத்தான் அவர் தெரிந்து கொண்டார். அதுதான் தேவன், அவர் ஒன்றுமில்லாத ஒன்றை எடுத்து, அதிலிருந்து ஏதோ ஒன்றை தம்முடைய சொந்த கனத்திற்கென்று உருவாக்குகிறார். ஒரு ஒழுங்கின்மையிலிருந்து ஒரு ஏதேனை உண்டாக்கினார். உஹ்-ஊஹ்.. அதுதான் தேவன். 125. இப்போது, ஒரு எழுப்புதலை செயல்படுத்தும் இயந்திரவியலை(machanics) எவரேனும் உடையவர்களாய் இருப்பார்கள் என்றால், அது நம்முடைய பெருந்தகையான சகோதரன் பில்லி கிரஹாம் அவர்களே. இயந்திரவியல் எல்லாம் சரிதான், ஆனால் இயந்திரவியல் அதை அசைக்காது, அதை அசையச் செய்ய ஒரு இயக்கவியல் (dynamics) தேவையாயிருக்கிறது. நீங்கள் ஒரு வாகனத்தை தயாரித்து, அதனுள்ளே அழகான இருக்கைகளை வைத்து, சிறந்த பிஸ்டன்களை வைத்து, விஞ்ஞான அறிவைக் கொண்டு அதன் செயல்திறனை விளக்கினாலும், அதை இயங்கச் செய்யும் இயக்குவியல் இல்லையென்றால், அது வெறுமனே உயிரற்ற பொருட்களின் தொகுப் பாயிருக்கும். 126. ஆகவே, வெல்ஷ் (Welsh revival) எழுப்புதலின் போது, அது பெந்தெகொஸ்தே எழுப்புதலுக்கு முன் தோன்றி மரித்த ஒரு எழுப்புதல், அதை எது துவக்கியது என்று ஒருவரும் அறியவில்லை. வெறுமனே ஒரு கூட்ட ஜனங்கள் மாத்திரமே. 127. இப்போது, நமது நண்பர், பில்லி கிரஹாம், எல்லா பிரெஸ்பிட் டேரியன்களையும், எல்லா லூத்தரன்களையும், எல்லா பெந்தேகோஸ்தே யினரையும், மற்றனைவரையும் கூடிவரச்செய்து, நகரத்துக்குள் சென்று, அங்கே அவர்கள் ஆயிரக்கணக்கான ஜனங்களைக் கொண்ட ஒரு மகத்தான கூடுகையை உடையவர்களாயிருப்பார்கள், (இரண்டு வாரங்களில்) முப்பதாயிரம் பேர் கூடிவந்து தங்கள் இருதயங் களை கிறிஸ்துவுக்கு கொடுப்பார்கள்; ஆனால் இரண்டு வாரம் கழித்து அங்கு திரும்பி பார்க்கும்போது, ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். பாருங்கள், அது வெறும் இயந்திர அமைப்பு. ஆனால் தேவன் தம்முடைய ராஜரீக கிருபையால் அற்பமான ஒன்றுமற்ற ஒரு அறிவீனனிடம் பேசி, தம்முடைய ஆவியை நகரத்திற்குள் ஊற்றட்டும், அப்பொழுது புருஷர்கள் தங்களுடைய வேலைகளுக்கு செல்ல இயலாமல், ஸ்திரீகள் பாத்திரங்களை கழுவ முடியாமல், பணிப்பெண்கள் படுக்கைகளை ஆயத்தம் செய்ய முடியாமல், தங்கள் கரங்களை வானத்திற்கு நேராய் உயர்த்தியபடி, கூச்சலிட்டுக் கொண்டும், அழுது கொண்டும் இருப்பார்கள். அதுதான் எழுப்புதலாகும். அது தேவனுடைய சித்தத்தில் உள்ளது. 128. வெல்ஷ் எழுப்புதலிலுள்ள எல்லா இயந்தியவியலமைப்பையும் கண்டு அதை புரிந்துகொள்ள, சபையிலிருந்த சில கண்ணியமான மனிதர்கள் வெல்ஷ் நாட்டிற்கு சென்றனர் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் தங்கள் உயரமான தொப்பிகளையும், வட்டமான காலர்களையும் அணிந்தவர்களாய் கப்பலிலிருந்து இறங்கிய போது, அங்கே பார்க்கையில், ஒரு சிறிய போலீஸ்காரர் அவருடைய தடியை இப்படியாய் சுழற்றியபடி வீதியிலே வந்த போது, அவர்கள் அவரிடம், “எனது நல்ல மனிதரே, வெல்ஷ் எழுப்புதல் எங்கேயுள்ளது என்று கூற முடியுமா?" என்று கேட்டனர். 129. அவர் “ஆம், என் சகோதரர்களே, நீங்கள் அதன் மத்தியில்தான் நின்று கொண்டிருக்கிறீர்கள்” என்றார். உஹ்-ஊஹ், உஹ்-ஊஹ், உஹ்-ஊஹ். அவர் “நானே அந்த வெல்ஷ் எழுப்புதல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.” “ஏனென்றால் வெல்ஷ் எழுப்புதல் எனக்குள்ளே உள்ளது”, என்று சொன்னார். 130. அது இராஜாதிபத்தியமுள்ளது. அதை தேவன் தான் செய்கிறார், ஒரு எழுப்புதலை அனுப்ப அவருக்கே உரிமை உள்ளது. இயந்திர அமைப்புகளை மட்டும் ஒன்று திரட்டுவதல்ல, இயக்கவியலை அனுப்பும்படி தேவனிடத்தில் ஜெபிப்பதேயாகும். 131. தேவன் தமது வார்த்தையை முன்குறிக்கப்பட்டவர் களிடம் மாத்திரமே வெளிப்படுத்துகிறார். இப்போது, “முன் குறித்தல்” என்னும் வார்த்தையை நான் உபயோகப்படுத்தும் போது.. இப்போது, பொது இடத்தில் இதை பயன்படுத்துவது தவறான வார்த்தை. விசேஷமாக, ஆர்மீனியர் மற்றும் கால்வீனியர்களும் கலந்துள்ள இக்கூட்டத்திலே நாம் இருக்கும்போது, மேலும்... நான் எல்லாம் தெரிந்தவன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக் கொண்டேன். ஆனாலும் வேதத்தின்படி, அவர்கள் இருவருமே தவறாயிருக்கிறார்கள். தேவன் எனக்கு செய்தது கிருபை, நான் அவருக்கு செய்வது கிரியை. பாருங்கள்! அப்போது நீங்கள் அதை பெற்றுக் கொண்டீர்கள். நீங்கள் இரு கிளைகளின் ஏதாவதொன்றின் மேல் ஏறிச்சென்றால், அந்த கிளையின் முடிவிற்கு வந்து விடுவீர்கள், பின்னர் உங்களால் திரும்பி வர முடியாது. எபேசியருக்கு எழுதின புத்தகம் அதை ஒன்றுசேர்த்து விளக்குறது என்று நான் நினைக்கிறேன். 132. இப்போது, ஆனால், நான் உபயோகித்த "முன் குறிக்கப்பட்டவர்கள்” என்ற வார்த்தை.. என்னை அவ்விதம் நினைக்க வேண்டாம்... நான்... அந்த ஒரு வார்த்தை தான் எனக்குத்தெரியும்... எப்படி அதை சொல்வது என்பதை....அது தேவனுடைய முன்னறிதல், பாருங்கள், அவர் அதை அறிந்திருந்தார். அதை அவரால் சொல்லமுடியாது. அனைவரும் இரட்சிப்படையவே அவர் மரித்தார். ஆனால் அவருடைய முன்னறிவின்படி, யார் அதை அடைவர், யார் அதை அடையப் போவதில்லை என்பதை அறிந்திருந்தார். பாருங்கள்? அதைத்தான் அவர் அறிந்திருந்தார், நான் அதை அறியேன், நீங்களும் அதை அறியீர்கள், ஆதலால் நாம் பயத்தோடும், நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுகிறோம். 133. இப்போது, ஆனால் தேவன் தமது வார்த்தையை, எல்லா காலங்களிலும் வைத்துள்ளார். அவருடைய முன்னறிதலானது, சபையிலும், ஜனங்களிலும் அதை வைக்கும்படி, அவர் சில காரியங்களை ஆதிமுதற் கொண்டே செய்து வந்தார். அதன் பின்னர், அந்தந்த காலத்திலே பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷமானது, குறிப்பிட்ட சில ஜனங்களுக்கு மாத்திரமே வெளிப்பட்டது, மற்றவர்களோ அதை காண்பதில்லை. பாருங்கள்? "பிதாவே உமக்கு நன்றி. இவைகளை ஞானிகள் மற்றும் கல்விமான்களின் கண்களுக்கு மறைத்து, கற்றுக்கொள்ளக்கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தியுள்ளீர்.” பாருங்கள், அதுதான் முன்குறிக்கப்படுதல் ஆகும். நீங்கள், “நான் உன்னை தெரிந்து கொள்வேன் மற்றும் உன்னைத் தெரிந்துகொள்வது இல்லை” என்று சொல்லு கிறது போல அவர் அதைச் செய்யவில்லை. ஆனால் அவருடைய முன்னறிதலின்படியே, நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவருக்குத் தெரியும். 134. முடிவில்லாத அவர்... அவர் முடிவற்றவர் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவ்வாறு அவர் இல்லாதிருந்தால், அவர் தேவனாகவே இருக்கமுடியாது. அப்படியானால், முடிவில்லாதவர் என்பதை பற்றி சற்று சிந்தியுங்கள்: இந்த பூமியில் எத்தனை தெள்ளுப் பூச்சிகள் இருக்கும் என்பதைக் கூட அவர் அறிந்திருந்தார். அப் பூச்சிகள் எத்தனை முறை தம் கண்ணிமைகளை அசைக்கும் என்பதையும், ஒவ்வொரு பூச்சிக்குள்ளும் எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்பதையும், ஒவ்வொரு புல்லின் இதழ்களும் அவைகள் உருவாகும் முன்னரே அதை அறிந்திருந்தார். அவரே எல்லையற்றவர். நாமோ வரம்புக்குட்பட்டவர்கள், இருளில் நாம் தடுமாறுகிறோம். தேவன் நம்மை செம்மறி ஆடுகளுடன் ஒப்பிடுகிறார், நமக்கு நிச்சயம் ஒரு தலைவர் தேவை. அந்த தலைவர் ஒரு மனிதன் அல்ல, அந்த தலைவர் பரிசுத்த ஆவியே, நம்மிடையே உள்ள கிறிஸ்துவின் ஆவியே. “சிறிது காலத்திற்குப் பிறகு “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது.” அவருடைய மாம்ச சரீரமானது தேவனுடைய சிங்காசனத்திற்கு உயர்த்தப்பட்டது. அங்கே அந்த சிங்காசனத்தின் மீது ஆவியானவர் இருந்தார்; இப்போது கிறிஸ்து சிங்காசனத்தின் மீது இருக்கிறார், அவர்தான் இயேசு. “இன்னும் கொஞ்சக்காலத்திலே“ உலகம் என்னை காணாது, நீங்களோ என்னை காண்பீர்கள், ஏனெனில் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்.” தேவனாகிய கிறிஸ்துவின் சிங்காசனம் உங்கள் இருதயங்களில் எழுப்பப்பட்டுள்ளது. அவர் தேவனுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால் ஆயிரவருட அரசாட்சியில் அவர் தன்னுடைய சொந்த சிங்காசனத்தின் மேல் உட்காருவார். அவருடைய குமாரனும், தாவீதின் குமாரனுமாகிய இந்த மனிதனை அவர் எழுப்பி, தன்னுடைய சிங்காசனத்திலே அமரச்செய் வேன் என்று ஆணையிட்டார். 135. இப்போது, இந்த காரியங்களை தம்முடைய முன்னறிதலின்படி இதற்கென்று தாம் முன்குறித்தவர்களுக்கு இவைகளை அவர் வெளிப்படுத்துகிறார், இல்லையென்றால் அவர்கள் அதை காணமாட்டார்கள். சரியாக அங்கேயே நின்றுகொண்டு, சரியாக அதையே நோக்கிப் பார்த்தாலும் கூட, அவர்களால் அதை காணமுடியாது. 136. புதரிலுள்ள மாட்டின் படத்தை எத்தனை பேர் பார்த்துள்ளீர்கள்? அதை நீங்கள் மீண்டும் மீண்டும் காண வேண்டும். அதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அல்லது கிறிஸ்து புதரிலுள்ள படத்தை, அல்லது வானத்திலே, மேகத்திலே இருக்கும் படத்தை பார்த்துள்ளீர்களா? நீங்கள் அதை ஏதோ ஒரு கோணத்தில் நோக்கினால் மட்டுமே அதை காணும் படியாக அந்த ஓவியர் அதை வரைந்திருக்கிறார். நல்லது, நீங்கள் அதை ஒருமுறை பார்த்துவிட்டீர்களென்றால், அதைத்தவிர வேறேதையுமே நீங்கள் காண முடியாது. ஒவ்வொரு முறையும் அதை நீங்கள் நோக்கும்போதும், அது அங்கே காணப்படும். எத்தனைப்பேர் அந்த படங்களை பார்த்திருக்கிறீர்கள்? நல்லது, நிச்சயமாக அதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். 137. நல்லது, கிறிஸ்துவும் தாமே அந்தவிதமாகவே இருக்கிறார், சுவிசேஷமும், செய்தியும் அந்தவிதமாகவே இருக்கிறது. இந்த மணிநேரத்திற்கான செய்தியை நீங்கள் ஒரு முறை பார்த்துவிட்டீர்களானால், அதைத்தவிர வேறெ தையுமே நீங்கள் பார்க்க முடியாது. எல்லாம் அதுதான். மற்ற அனைத்தும் மறைந்து போகும், அவைகளுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. (just a filler) பாருங்கள், பாருங்கள், ஒரு முறை நீங்கள் செய்தியை பார்த்து விட்டால் போதும்! 138. அதுதான் நோவாவின் காலத்திலுமிருந்தது. நோவாவும், அவனுடைய குழுவும்... பாருங்கள்... எப்படி... அவர் கள் செய்தியை பார்த்தபோது வேறு எதுவும் ஒரு பொருட்டாக இல்லை. மோசே மற்றும் மோசேயின் குழு அதைப் பார்த்தபோது, வேறு எதுவும் ஒரு பொருட்டாக இல்லை. யோவானின் குழு அதைப் பார்த்தபோது, வேறு எதுவுமே ஒரு பொருட்டாக இல்லை. இயேசுவின் குழு அதைப் பார்த்தபோது, வேறு எதுவுமே ஒரு பொருட்டாக இல்லை. அப்போஸ்தலர் குழு அதைப் பார்த்த போது, வேறு எதுவுமே ஒரு பொருட்டாக இல்லை. லூத்தரின் குழு அதைப் பார்த்தபோது, வெஸ்லியின் குழு அதைப் பார்த்த போது, பெந்தகோஸ்தே குழு அதைப் பார்த்த பொழுது வேறு எதுவுமே ஒரு பொருட்டல்ல. எல்லாவற்றிலுமிருந்து அவர்கள் இழுக்கப்பட்டனர். ஏன்? அவருடைய முன்னறி தலின்படி அவர் இவைகளை நடப்பிக்கும்படியாய் முன் குறித்தார். 139. அவர் தமது முன்னறிதலின்படி தம்முடைய சொந்தநபரை தேர்ந்தெடுக்கிறார். ரோமர்: 8-60 அவர் இங்கே சொல்லியிருக்கிறார். அந்த ஏசா... தேவனுடைய தெரிந்ததெடுத்தல் நிச்சயமாக நிச்சயமாக நிலைநிற்கும். ஏசாவும், யாக்கோபும் பரிசுத்த பெற்றோர்களால், இரட்டையர்களாய் பிறந்தனர். அவருடைய தேர்ந்தெடுத்தல் நிச்சயமாக நிலை நிற்பதாயும், உண்மையாயும் இருக்கிறது. எந்த பையனும் பிறப்பதற்கு முன்பே அவர், “நான் ஏசாவை வெறுத்து, யாக்கோபை நேசித்தேன்” என்றார். பாருங்கள்! மனிதனுக்குள் என்ன இருக்கிறது என்பது தேவனுக்குத் தெரியும். அது என்ன என்பதை அவர் ஆதியிலிருந்தே அறிந்திருந்தார், ஆகவே அவர் மிகச்சரியாக கடிகார (அதினதின்) நேரப்படி எல்லாவற்றையும் செய்யமுடியும். நாம் தான் பதட்டமும், குழப்பமும் அடைகிறோம். அவரை ஒருபோதும் குழப்பமடைகிறவராக நீங்கள் பார்க்கமுடியாது. அவர்கள் இல்லை... பாருங்கள்! சகலமும் மிகச் சரியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. காலம் சமீபமாயுள்ளது 140. இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே. இந்த ஸ்திரீகள் எல்லாம் குட்டையான முடியுடனும், இந்த புருஷர்களும் தங்கள் மனைவிகளைப் போல தலை மயிரை வைத்துக் கொண்டும், அவர்களைப் போன்று... நான் அவர் களைப் பார்க்கிறேன். முற்றிலுமாக, முடி சுருட்டும் கருவி களை பொருத்திக் கொண்டு, தலைமயிரை சுருளாகச் செய்து முன்பாக விட்டுக் கொள்ளுகிறார்கள். என்னே ஒரு தாறுமாறான போக்கு! அதுதான் சாத்தானின் ஏதேனுடைய விளைவு. அவளைப் போல செய்வது; அவள் தன்னுடைய புருஷனைப்போல தன் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள முயற்சி செய்கிறாள். அவளுடைய புருஷனும் மனைவியைப் போல தன்னுடைய தலைமயிரை வளரவிடுகிறான்; அவள் அவனுடைய ஆடைகளை உடுத்திக் கொள்கிறாள்; அவனும் அவளுடைய உள்ளாடைகளை உடுத்திக் கொள்ளுகிறான். பாருங்கள், கவனியுங்கள். அவள் ஆண் பாலாகவும் அவன் பெண்பாலாகவும் ஆகிறார்கள். பாருங்கள் இதுதான் சாத்தானின் ஏதேன். தேவன் ஆதியிலே எதை உண்டாக்கினாரோ, அதற்கு முரண்பாடாயுள்ளது. அதுதான் உண்மை. 141. நான் ஆரம்பிக்காவிட்டால், நாம் ஒருபோதும் இதற்குள் செல்லமாட்டோம். ஆனால் இந்த காரியங்கள், அவருக்காக எந்த வழியில் அதை செய்வது, யார் அதை செய்வது என்பதெல்லாம் அவர் தெரிந்து கொண்ட அவருடைய சொந்த வழியேயாகும், அவரே தெரிந்து கொள்கிறார். அவர் அதை அவ்வழியாக தான் செய்ய விரும்புகிறார் 142. டூசானிலுள்ள(Tucson) நமது போதகர் சகோதரர் பியரி க்ரீன் (Pearry Green) அன்றிரவில் பிரசங்கித்தபோது, நான் கேட்டது போல, தேவன் எவ்வாறு சில வழிகளில் காரியங்களைச் செய்கிறார் என்பது பற்றியது, (அதாவது பாடம் என்னவென்பதை மறந்துவிட்டேன்) ஆனால் அவர், “அந்த வழியைத்தான் தேவன் விரும்புகிறார், அந்த வழியில்தான் தேவன் அதைச் செய்கிறார்” என்று கூறினார். நல்லது. அது சரிதான். 143. இப்போது, அவரிடமே சென்று, “நீர் தவறாயிருக்கிறீர்” என்று சொல்லத்தக்கவர்கள் நம்மிடையே யார் இருக்கிறார்கள்? தேவனுடைய முகத்துக்கு முன் நின்று, “நீர் தவறாயிருக்கிறீர்” கர்த்தாவே, நான் விரும்பும் இந்த விதமாகவே, இந்த விதமாகத் தான் செய்யப்பட வேண்டும் என்று டாக்டர் இன்னார்-இன்னார் கூறினாரே, அந்த வித மாகவே அது செய்யப்பட வேண்டும் என்று சொல்லக் கூடிய தைரியம் யாருக்கு உண்டு? அப்படியாக ஒரு விசேஷத்தை சொல்ல, அந்தளவு தூரம் போக யாருக்கு மனோசக்தி உள்ளது? இல்லை. நீங்கள் அவ்வாறு வெளியே வந்து சொல்ல மாட்டீர்கள், ஆனால், நீங்கள் அதை நினைக்கிறீர்கள்! 144. அந்திக் கிறிஸ்துவை குறித்ததான எனது செய்தியைப் போன்று, “கள்ள கிறிஸ்துக்கள் எழும்புவார்கள்.” இப்போது, அவர், “கள்ள இயேசுக்கள்” என்று சொல்ல வில்லை. பாருங்கள், “ஆண்டவர்” என்ற ரீதியில் தன்னை “இயேசு” என்று அழைத்துக் கொண்டு யாராலும் நிலைத்து நிற்க முடியாது. ஆனால் கள்ள கிறிஸ்துக்கள் என்பதற்கு “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள். 145. அவர்கள் அபிஷேகம் பெற்றவர்கள் என்று ஒவ்வொருவரும் நினைக்கின்றனர், “தேவனுக்கே மகிமை, அவரால் இதைச் செய்ய முடியும்; அதையும் செய்ய முடியும்” என்று. ஆனால் அவரை வார்த்தையின் சோதனைக்கு உட்படுத்துங்கள், பின்னர், இந்த மணி நேரத்திற்குரிய செய்தியில் அவர் என்னவாய் வெளிப்படுகிறார் என்பதை கண்டறியுங்கள். பாருங்கள். 146. அவர்கள் இயேசுவின் காலத்தில் அபிஷேகத்தைப் பெற்றிருந்தனர், ஆனால் அவர் மீது அல்ல. அவர்களுக்கு அந்த காலத்தில் அபிஷேகம் இருந்தது... மோசேயின் காலத்தில் தாத்தான் கூட அபிஷேகத்தை பெற்றிருந்தான். அவன் சொன்னான், “நீர் ஒருவர் மாத்திரமே நம் மத்தியில் பரிசுத்தர் என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். தேவன் அநேகம் பேரை உடையவராயிருக்கிறார். நாங்கள் இங்கே ஒரு கூட்ட மனிதர்களாய் ஒரு ஸ்தாபனத்தை துவங்குவோம்.” 148.தேவன் மோசேயிடம், “அவனிடமிருந்து உன்னைப் பிரித்துக்கொள்” என்றார். அவர் பூமியைப் பிளந்து அவர் களை விழுங்கச் செய்தார். அவர் தமது அசலான மூல வார்த்தையை தம்முடைய தீர்க்கதரிசி மோசேக்குக் கொடுத் தார். அந்த ஒரே வழியில்தான் அவர் அதைச் செய்தார், அந்த ஒரே வழியில் தான் அவர் அதை இனி மேலும் செய்வார். அவர் தமது திட்டத்தை மாற்றுவதில்லை, பாருங்கள். 149. ஆகவே நமது எண்ணங்கள் தவறாயிருக்கிறது, அவருடைய எண்ணங்கள் எப்போதுமே சரியானதாயிருக் கிறது. மேலும் அவர் தவறாயிருக்கிறார் என்று அவரிடம் சொல்ல முயற்சிக்காதீர்கள். சிறந்த தகுதி வாய்ந்தவர் என்று நாம் யாரை நினைத்தாலும் அது ஒரு பொருட்டல்ல, மேலும் சிறந்த தகுதியுடையவர் இன்னார் என்று சொல்வது நம்முடைய காரியமும் அல்ல. இப்போது அங்கேதான் நீங்கள் ஸ்தாபனத்திற்குள் சென்று விடுகிறீர்கள். 150. ஒரு சிறிய சகோதரன் ஆவியால் நிரப்பப்பட்டு, ஒரு நகரத்திற்கு கடந்து சென்று, ஒரு நல்ல ஜனக் கூட்டத்தை கூட்டி சேர்க்கிறான். பின்னர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கூடிவந்து சந்தித்து கொள்கிறார்கள். எல்லா பரிசுத்த சகோதரர்களும் சேர்ந்து கொண்டு, இவ்வாறு பேசுவார்கள், “உங்களுக்கு தெரியுமா? நான் விசுவாசிக்கிறேன், இங்கேயிருக்கும் இந்த சிறிய ஜோன்ஸ்”(அவர்கள் மத்தியில் அவன் ஒரு சிறு பையன்) “நான் நினைக்கிறேன், அவன் ஒரு நல்ல பெரிய சபை கூடாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும், அது சரியென்று நான் நினைக்கிறேன். நீங்கள் நினைக்கவில்லையா?” இல்லை, என்னே! அங்கே தான் அவர் செல்கிறார். அதன் பின் அந்த சபைக்கூட்டம் சிதறிப்போகிறது. பாருங்கள்? இவைகளை பிரித்து விடுங்கள். தேவனே பிரித்தெடுத்தலை செய்கிறார். அவர் ஒருவரே அதை செய்கிறார். ஆனால் அவர்களெல்லாரும், ஒவ்வொருவரும், அந்த சிறிய பையனை தேர்ந்தெடுத்து, அவனை அங்கே நியமிக்கவும், இந்த ஒருவனை இங்கே நியமிக்கவும் விரும்புகிறார்கள். அது மனிதனுடைய எண்ணமாயிருக்கிறது. 151. மனிதனிடம் திறவுகோல்கள் உள்ளது, ஆனால் தேவன் தான் உண்மையிலேயே திறவுகோல்களை பிடித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் சீஷர்களுக்கும், பரிசுத்த சபைக்கும் அந்த திறவுகோல்களை தந்தபோது அந்த திறவு கோல்களை அவர்கள் முதல் முறையாக உபயோகித்ததை கவனியுங்கள். யூதாஸ் மீறுதலினால் விழுந்துவிட்ட பின்பு, பரிசுத்த சகோதரர்களாகிய அவர்கள் ஒன்று கூடி, தங்களுக்குள் சீட்டு போட்டார்கள். அவர்களெல்லாம் பரிசுத்த சகோதரர்களல்லவென்று யார் சொல்லக்கூடும்? யார் அவர்களை பரிசுத்தர்கள் அல்ல என்று சொல்கின்றனர்? ஆனால் அவர் கள் சீட்டு போட்டார்கள், அது மத்தியாவின் பேருக்கு விழுந்தது. பின்பு அவன்... அவன் எதையாவது செய்தானா? ஒன்றும் செய்யவில்லை. ஆனால் பவுல்தான் தெரிந்து கொள்ளப்பட்ட ஒருவனாயிருந்தான்! ஆமென். அது தேவனுடைய தெரிந்துகொள்ளுதல்: சிறு உருவம் கொண்ட, வளைந்த மூக்குடைய, ஏளனம் நிறைந்த, ஒரு கோபக்கார யூதன். தெய்வீகத்தில் மருத்துவப் பட்டம் (D.D.,) பெற்ற மத்தியாவை போலல்ல, உங்களுக்கு தெரியுமா, அது பவுலாயிருந்தது. தேவன் பவுலை தெரிந்தெடுத்தார்; சபையோ மத்தியாவை தேர்ந்தெடுத்தது. பாருங்கள்? தேவனிடம், அவர் “தவறாயிருக்கிறார்” என்று சொல்ல உங் களுக்கு எந்த உரிமையும் இல்லை. தாம் என்ன செய்ய வேண்டுமென்பதை அவர் அறிந்திருக்கிறார், மனிதன் எதிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறான் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். 152. யார் எப்போதாவது.. சபையானது பவுலை எப்போதாவது தெரிந்து கொண்டதா? ஓ! இல்லை ஒருபோதும் இல்லை. அவர்கள் சொன்னார்கள், “அந்த மனிதன் தான் எங்கள் எல்லாரையும் பிடித்து சிறையில் அடைத்து கொண்டிருந்தான்”. 153. ஆனால் தேவன் “எனக்காக அவன் எவ்வளவாய் துன்பப்படுவான் என்பதை அவனுக்கு நான் காண்பிப்பேன்” என்றார். அது என்னவென்பதை அவர் அறிந்திருந் தார். 154. சரி. நாம் யாரை சரியென்று நினைக்கிறோம் என்பது காரியமல்ல, ஆனால் யார் சிறந்த தகுதியுடையவர் என்பதை தேவன் அறிந்திருக்கிறார், ஏனென்றால் மனிதனுடைய அவர் இருதயத்தை அறிந்தவராயிருக்கிறார். அவருக்கு தெரியும். 155. ஒரு எழுப்புதல் அல்லது இந்தக் காரியங்கள், எப்பொழுது நடக்க வேண்டும் என்று நாம் நினைக்கும் நேரத்தில் அது நடக்காது., “இது, சரியாக இந்தக் காலம், தேவனுக்கு மகிமை!” வர்த்தக புருஷர்களின் அத்தியாயம் போன்றவற்றில் நான் கவனித்திருக்கிறேன், “இப்பொழுதே வருகிறது... அல்லேலூயா! மகத்தான எழுப்புதல் வருகிறது” என்று நாம் நினைக்கிறோம்.. 156. வஞ்சிக்கப்படாதிருங்கள். “அவன் ஏற்கனவே வந் தாயிற்று, என்று எழுதியிருக்கிற பிரகாரம் அவர்கள் அவனுக்கு செய்தார்கள்.” பாருங்கள்? ஆனால் ஒரு எழுப்புதல் உண்டென்று அவர்கள் நினைக்கிறார்கள். அது நடை பெற்றுக் கொண்டிருக்கிறதா? இல்லை, அது நடந்தேறி விட்டது, அது மரித்துவிட்டது, அது முடிந்துவிட்டது. உஹ்ஹும். கவனியுங்கள், இது விளக்கை சுத்திகரிக்கும் நேரம், வெளியே வருவதும், உள்ளே செல்வதுமான தரு ணம். “கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் புதுபெலன் அடைவார்கள்”. 157. கவுனியங்கள், இங்கே நமது பாடத்தில், கவனிக்கவும், தாவீது, இஸ்ரவேலின் இராஜா, அவன் தாமே தேவனுடைய உடன்படிக்கை பெட்டியை திரும்பவும் அவனுடைய இடத்திற்கே கொண்டு வரவேண்டும் என்ற வெளிப் பாட்டைப் பெற்றிருந்தான். சவுலின் காலத்தில் அவர்கள் ஒருபோதும் அதை ஆலோசிக்கவே இல்லை, ஏனெனில் சவுல் பின்மாற்றமடைந்து விட்டான். ஆகவே சவுலின் காலத்தில் அவர்கள் உடன்படிக்கை பெட்டியைக் குறித்து ஒருக்காலும் ஆலோசிக்கவே இல்லை, ஏனென்றால் அவன் பின்மாற்றமடைந்து தேவனிடம் இருந்து விலகிப் போய் விட்டான். ஆகவே, தாவீது, விரைவாக, ஒரு ஏவுதலோடு... இப்போது இதை கவனியுங்கள். இதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால், இது மிகவும் நம்பத்தகாத ஒரு பாடப்பொருளாகும். நாம் குழந்தைகளாயிருப்பதற்கு பதிலாக புருஷர் களாயிருக்க வேண்டிய நேரம் வருகிறது என்பதை நான் உணர்கிறேன். உஹ்-ஊஹ். நாம் பாலுக்கு பதிலாக பலமான ஆகாரத்தை பெற்றிருக்க வேண்டும். 158. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதை கவனியுங்கள், இந்த ராஜா புதிதாக அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜா அல்லது தெரிந்துகொள்ளப்பட்ட ராஜா. சவுல்... சாமுவேல் தேவனுடைய சித்தத்தின்படி அவனை அபிஷேகம் பண் ணினான். மேலும் இவன் முற்றிலும் தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு இராஜா, அதில் சந்தேகமில்லை. மேலும், அவன் இங்கே இருக்கையில், ஏவுதல் அவனைத் தொட்டது. அது தாவீதுக்கு வெளிப்பட்டது. அவன் வெளிப் பாட்டைப் பெற்றுக் கொண்டான். வேறுயாரும் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை. “நாம் போய் பேழையைக் கொண்டு வருவோம். ஏனென்றால், பேழை இங்கே நம் மிடையே இருப்பதும், இந்த பேழையை கொண்டு நாம் தேவனிடம் ஆலோசிப்பதும் அவருடைய சித்தமாயிருக்கிறது.” மிகமிக தீரமிக்க செயல். நீங்கள் அவ்வாறு கருதவில்லையா? சரி. 159. ஞாபகம் கொள்ளுங்கள் ஆனால், அவன் ஒரு ராஜாவாயிருந்தும், வெளிப்பாட்டை பெற்றவனாயிருந்தும் தன் ஸ்தானத்தின் வரம்பை மீறிவிட்டான். நாத்தான் எனும் ஒரு தீர்க்கதரிசி தேசத்திலிருந்தான். அவன் தாமே வெளிப் பாட்டைப் பெற்றுக்கொள்ளும்படி நியமிக்கப்பட்டவன். எது பேசப்படுவதாயிருந்தாலும், அவன் சொன்னான், “தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு, அவர் வெளிப் படுத்தாமல் கர்த்தர் எதையும் செய்வதில்லை.” ஆனால் நீங்கள் பாருங்கள், தாவீது ராஜாவாயிருந்து தன் மேல் அபிஷேகத்தைக் கொண்டவனாயிருந்தான். இப்போது, அது வேதப்பூர்வமானதா? அபிஷேகம் அவன் மேலிருந்தது, உண்மையான வெளிப்பாட்டை பெற்றிருந்தான். ஆனால் அது தவறாயிருந்தது: ஏனெனில் நாத்தானே அந்த காலத்தின் தீர்க்கதரிசியாவான். ஆனால் வெளிப்பாடு ஒரு போதும் நாத்தானிடம் வரவில்லை. மேலும் தாவீதுக்கு வெளிப்பாடு வந்தபோது, அதைக்குறித்து ஒருபோதும் அவன் நாத்தானிடம் ஆலோசனை செய்யவில்லை. அவன் வெறுமனே தொடர்ந்து சென்று, தான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினானோ அதைச் செய்யப் போகிறான். உஹ்-ஊஹ். 160. ஆனால், கவனியுங்கள், இங்கே 13-ம் அதி காரத்தில் தாவீது யாரிடம் ஆலோசித்தான்? “ஆனால் அவன் ஆயிரம் பேருக்கு தலைவரோடும், நூறு பேருக்கு தலைவரோடும் ஆலோசனை பண்ணி,” சபையாரிடம் திரும்பினான். பாருங்கள்? இப்போது, நாம் செய்ய வேண்டியது....நீங்கள் யோசிக்கவில்லையா? இது, அதுவல்ல. இப்போது, அவன் தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் அதைச் செய்ய அவன் நியமிக்கப்படவில்லை. பாருங்கள், ஏனெனில் தேவனுக் கென்று ஒரு வழி இருந்தது. 161. அதுபோலவே தேவனும் அந்த ராஜாவிடமே, அவனுக்கிருந்த கொப்பளங்களைக் குறித்தும், அதிலிருந்து சுகம் பெறுவதைக் குறித்தும் சொல்லியிருக்க முடியும், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, அதைச் செய்ய அவருக்கு ஒரு நியமிக்கப்பட்ட வழியிருந்தது, அது தான் அவருடைய தீர்க்கதரிசி. ஆகையால், அவர் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவுடன் பேசி, எசேக்கியாவிடம் திரும்பிச் சென்று என்ன நடக்கப்போகிறது என்று சொல்லச் சொன்னார். 162. இப்போது, எசேக்கியா தேவனிடம் முகமுகமாய் பேசிக்கொண்டிருந்தான். தேவனும் எசேக்கியாவிடம் பேசியிருக்க முடியும், நிச்சயமாக. ஆனால் அதற்கு சில நெறி முறைகளை (certain channels) அவர் வகுத்தார். நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? தேவன் காரியங்களை நிகழ்த்த தமக்கே உரித்தான சொந்த வழிமுறையை அவர் கொண்டிருக்கிறார்: எழுப்புதல்களை அனுப்புவதும், பேசுதல், உரைத்தல் போன்ற எதுவாக இருந்தாலும் சரி. அவர் தமது சொந்த வழியில் அதைச் செய்கிறார். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவரிடம் சொல்ல நாம் ஒன்றுமில்லை. அவர் எந்த வழியில் அதைச் செய்ய பிரியமாயிருக்கிறாரோ, அந்த வழியில் அதைச் செய்கிறார். 163. ஆகவே நீங்கள் பாருங்கள், தாவீது ஏவப்பட்டவனாய்... இப்போது, அபிஷேகத்தைப் பற்றி, கள்ள அபிஷேகத்தைப் பற்றி நான் கூறியதை நீங்கள் நினைவு கூறுவீர்களா? ஞாபகம் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவி வந்து ஒரு நபரை அபிஷேகிக்ககூடும், அவன் இன்னுமாய் தேவனுடைய சித்தத்திற்கு வெளியே கிரியைச் செய்ய முடியும். இங்கே, அதைச் சரியென்று அது நிரூபிக்கிறது. பாருங்கள்? தேவன் அதை செயல்படுத்தும் வழியில் நாம் செல்ல வேண்டும்,நம்முடைய வழிகளிலல்ல, அதை தேவன் செயல்படுத்தும் வழியில். ஏனென்றால், தாவீது ஒரு ராஜா வாயிருந்து, அபிஷேகிக்கப்பட்டு, தேவனுடைய ஆவியின் அபிஷேகத்தை அவன்மேல் பெற்றவனாய் (இயேசு கிறிஸ்துவின் ஒரு மாதிரியைப் போல) இருந்தும், அது தேவனுடைய நெறிமுறையாய் இருக்கவில்லை. 164. மேலும், சபையார் எல்லாரும்... “அது அவர்களுக்கு சரியாய் தென்பட்டது” என்று வேதாகமம் கூறுகிறது. கவனியுங்கள், ஆயிரம்பேருக்கு தலைவரும், நூறு பேருக்கு தலைவரும், மேலும் ஆசாரியர்களும், வேத சாஸ்திரிகளும், "அது அருமையானது” என்று நினைத்தார்கள். அங்கே தான் உங்கள் வேதாகமப் பள்ளிகளும் மற்ற அனைத்தும் வருகிறது, அவர்கள் அது “அருமையானது” என்று நினைத்தனர், மற்றும் எல்லா ஜனங்களும் கூட ஒத்துக் கொண்டனர். ஆசாரியர்களும் மற்ற அனைவரும் ராஜாவினுடைய அபிஷேகம் சரியென்று ஒத்துக் கொண்டனர். கவனியுங்கள்! ஆனால், தேவனோ தம்முடைய வார்த்தையை அதனுடைய காலத்தில், அவர்களுக்கு வெளிப்படுத்துவதாக வாக்குத்தத்தம் செய்யவில்லை. தேவன் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்த அவருக்கென்று ஒரு வழியிருந்தது, ஆனால் அவர்களிடம் அல்ல. ஞாபகம்கொள்ளுங்கள், அது தேவனுக்கு முரணாயிருந்தது. 165. இம்லாவின் குமாரன் மிகாயாவின் நாட்களில் நடந்த ஒரு காரியம்போல் உள்ளது. உங்களுக்கு அந்த சம்பவம் நினைவிருக்கிறதா? யூதாவும், இஸ்ரவேலும் பிரிக்கப் பட்டன. அவர்களுக்கு இரண்டு வெவ்வேறு இராஜ்ஜியங்கள் இருந்தன. ஆகாப் ஒரு இராஜ்ஜியத்திற்கு இராஜாவாக இருந்தான். யோசபாத், யூதாவின் இராஜ்ஜியத்திற்கு இராஜாவாக இருந்தான். அது அப்படித்தான் என்று நம்புகிறேன்; ஆகாப் எருசலேமின், இஸ்ரவேலில் மீது... இராஜாவாயிருந்தான். 166. கவனியுங்கள், பிறகு இங்கே ஒரு கூட்ட புறஜாதி மக்கள் வந்து, தேவன் கொடுத்த நிலத்தின்- தேவன் இஸ்ரவேலருக்குக் கொடுத்திருந்த நிலத்தின் ஒரு பாகத்தை எடுத்துக் கொண்டனர். மேலும் அங்கேயிருந்த இந்தப் பெலிஸ்தியர்கள் அல்லது சீரியர்கள், அந்த நிலத்தைப் ஆக்கிரமித்துக் கொண்டு, தங்கள் சொந்த பிள்ளைகளுக்கு, இஸ்ரவேலுக்கு சொந்தமான நிலத்திலிருந்து சாப்பிடக் கொடுத்தனர். ஆகவே தங்கள் பிள்ளைகளையும் அவர்களுடைய சொந்த குடும்பத்தினரையும் போஷிக்கும்படி, அந்த நிலம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். அது அவர்களுக்குத் தேவன் கொடுத்த உரிமையாயிருந்தது. 167. ஆகவே ஆகாப் யோசபாத்தை அழைத்து, இங்கே வாரும், நமது பகைஞர் என்ன செய்கிறார்கள் என்று பாரும். இதுசரியா? நாம் தேவனுடைய பிள்ளைகள். தேவன் நமக்குக் கொடுத்த உரிமையோடு, அந்த நிலத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். அது நமக்கு சொந்தமானது, தேவன் தமது தீர்க்கதரிசி யோசுவா மூலம் இந்த நிலத்தைப் பகிர்ந்தளித்தார். இது நம்முடையதாக வேண்டும். இது நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் சொந்தமானது. ஆனால், இங்கே இந்த கம்யூனிஸ்ட்டுகள் அதை எடுத்துக் கொண்டனர். நமக்கு... நாம் மிகவும் பசியாயிருக்கிறோம். நமக்கு தேவன் கொடுத்த உரிமைகளை அவர்கள் எடுத்துக் கொண்டனர். நாம் கண்டிப்பாக அங்கே உள்ளே போய், நமது நிலத்தை நாம் திரும்ப எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நீ நினைக்கவில்லையா? நீயும் உன்னுடைய படை களை சேர்த்துக் கொண்டால்... மெத்தோடிஸ்டுகள், பிரஸ்பிட் டேரியன்கள் முதலானோர், லூத்தரன்கள் முதலானோர், அனைவரும் இங்கே, உலக சபை சங்கத்தையும் சேர்த்துக் (Ecumencial Council) கொள்வீர்களானால், நாம் யாவரும் ஒன்றாகக்கூடி, நாம் போய் அதை எடுத்துக் கொள்வோம். (இப்போது நான் உவமையாகப் பேசுகிறேன் என்பதை கூறிக்கொள்கிறேன்) நாம் போய் அதை எடுத்துக் கொள்வோம்” என்றான். 168. “ஏன்”, “நிச்சயமாக நாம் எல்லோரும் ஒன்று தான்,” என்றான். உஹ்-ஹு. 169.இப்போது, வேதாகமம், “இரண்டுபேர் ஒருமனப் பட்டிருந்தாலொழிய எப்படி ஒருமித்து சேர்ந்து நடப்பார்கள்?” என்கிறது. பாருங்கள். 170. அங்கே, அந்த பெரிய மனிதன் இருந்தான், அந்தப் பெரிய பெந்தெகொஸ்தே மனிதன் யோசபாத், தவ றான கூட்டத்தோடு கலந்திருந்தான். அதுதான் இன்றைய பெந்தெகொஸ்தேயினரிடமும் நடந்தது. அங்கே உண்மையான சில மனிதர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த ஸ்தாபனக் கூட்டத்தோடு கலந்திருக்கின்றனர். அந்தக் காரியத்தை விட்டு வெளியே வாருங்கள்! அது கர்த்தரால் சபிக்கப்பட்டிருக்கிறது. 171. கவனியுங்கள், இப்போது, அங்கே அவன் இருந்தான். அவன், “ஆம் அது நியாயமானதாய் தோன்றுகிறது. எங்களது இரதங்களும், ஜனங்களும் உம்முடையவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் எல்லோரும் யூதர்களே. நிச்சயமாக உங்களோடு சேர்ந்து நாங்களும் வருவோம்" என்றான். ஆனால், “நாம் முதலில் கர்த்தரிடம் ஆலோசனையைப் பெறவேண்டும் என்று நீ நினைக்கவில்லையா?” என்று கேட்குமளவிற்கு கூட போதுமான பக்தி வைராக்கியம் யோசபாத்திடம் இருந்ததா? பாருங்கள்! இது ஒரு நல்ல யோசனை என்று நான் நினைக்கிறேன். 172. ஏன், ஆகாப்கூட, “நிச்சயமாக, ஏன்! ஓ! நிச்சயமாக, நான் அதை குறித்து யோசித்து இருக்கவேண்டும்” என்றான். 173. “நல்லது, தேவ மனிதன் எங்காவது யாரேனும் இருக்கிறார்களா? தீர்க்கதரிசி யாராவது உங்களிடம் இருக்கிறாரா?” 174. “ஆஹா! என்னிடம் நானூறு பேர் இருக்கின்றனர். இங்கே என்னிடம் முழு ஆலோசனைக் குழுவும் உள்ளது, முழு ஸ்தாபனங்களும் உள்ளன. அவர்கள் எபிரேய தீர்க்க தரிசிகள்” 175. இப்போது, நினைவிருக்கட்டும். வேதம் கூறுகிறது, “அவர்கள் தீர்க்கதரிசிகள், எபிரேய தீர்க்கதரிசிகள்.” புறஜாதி தீர்க்கதரிசிகள் அல்ல, எபிரேய தீர்க்கதரிசிகள். இறையியல் பயிற்சிப் பள்ளியின் ஒரு கூட்ட ஜனங்கள். 176. “நல்லது, அவர்களைக் கொண்டு வாருங்கள்!” 177.மேலும், இராஜாக்கள் தங்கள் உடைகளை அணிந்து கொண்டு, தீர்க்கதரிசியை கவரும்படி அவன் முன்பு அமர்ந்திருந்தனர். இங்கே ஒருவன் வருகிறான், அது சிதேக்கியா என்று நான் நம்புகிறேன். அவன் மாகாண ஆலோசனை சங்கத்தின் சிறந்த தலைமை அதிகாரி அல்லது என்னவாக இருந்தானோ, அவன் அவர்களோடு கூட அங்கே வருகிறான். அவன் தனக்கு இரண்டு பெரிய கொம்புகளை உண்டாக்கி, “தேவன் உரைத்ததை நான் கேட்டேன், இது கர்த்தர் உரைக்கிறதாவது,” இந்தக் கொம்புகளை கொண்டு சீரியர்களை முட்டி, அவர்களை தேசத்திலிருந்து நிர்மூலமாக்கிப் போடுவீர் என்றான். 178. "ஓ! மகிமை!” எல்லோரும் அது அற்புதமானது என்று நினைத்தனர். அருமை! 179. எதை நம்புவது என்று தெரியாத நெருக்கத்திற்கு (razor edge), சரியானதிற்கும் தவறானதிற்கும் நடுவில் இப்பொழுது அது வந்துள்ளது என்பதை கவனியுங்கள். சரி அல்லது தவறு என்ற வேறுபாட்டிற்கிடையே ஒரு தீட்டப் பட்ட கூர்மையான கத்தியைப் போன்று அது விழும்வரை, அது எந்த பக்கம் வேண்டுமானாலும் விழலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் உடையதாய் இருக்க வேண்டும். ஏறக்குறைய எல்லா வார்த்தையையும் அல்ல, ஆனால் ஒவ்வொரு வார்த்தையும்! மேலும், இன்றைக்கு அது இறங்கி வந்திருக்கிறது, லூத்தரன்களுக்கு அல்ல, மெத்தோடிஸ்டுகளுக்கு அல்ல, பெந்தெகொஸ் தேயினருக்கு அல்ல, ஆனால், அந்த தீட்டப்பட்ட காலத்திற்கு, அந்த காலத்தில் தான் அந்திகிறிஸ்துவின் அபிஷேகமானது மிகவும் கச்சிதமாகவும், அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாயும் இருக்கும். ஆகையால், அதை அவர்கள் விழிப்புடன் கவனிக்காவிடில் தவறான பக்கத்தில் விழுந்து விடுவர். கவனியுங்கள், ஜாக்கிரதை! நாம் இப்போது பெந்தெகொஸ்தே காலத்தில் ஜீவிக்கவில்லை. அந்த காலத்தைக் கடந்துவிட்டோம், லூத்தரன் காலத்தை மற்றும்... எவ்வாறு கடந்து விட்டோமோ, அவ்வாறு கடந்து விட்டோம்.. பாருங்கள்? 180. கவனியுங்கள் இப்போது தீர்க்கதரிசிகள் எல்லோரும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர்கள் நானூறு பேர், நன்றாக போஷிக்கப்பட்டவர்களாய், நல்ல நிலையில் உள்ள, எபிரேய தீர்க்கதரிசிகள் ஒரே மனதோடு அவர்களுக்குச் சாட்சியம் அளித்தனர். “கர்த்தர் உரைக்கிறதாவது, போங்கள், கர்த்தர் உங்களோடிருக்கிறார்”. 181. யோசபாத் கூறினான். “நல்லது-அது சரிதான் ஆனால்..” “உங்களிடம் இன்னும் வேறு யாராவது இருக்கிறார்களா?” என்றான். 182.“வேறு யாராவதா? இங்கே நமக்கு முழு ஸ்தாபனம் இருக்கின்றார்கள். முழு ஆலோசனை சங்கமும் இங்கே கூடியிருக்கிறார்கள். நமக்கு எதற்கு வேறொருவர் வேண்டும்?” 183. அதற்கு அவன், “ஆஹா! ஆனால், இன்னும் வேறு யாராவது அங்கே இருக்கிறார்கள் என நான் நினைத்தேன்” என்றான். 184. அவன் சொன்னான், “ஓ! ஆமாம். இன்னொருவன் இருக்கிறான், ஆனால் அவன் இந்த ஆலோசனை சங் கத்தைக் கூடச் சேர்ந்தவன் அல்ல.” உஹ்ஹு.. “அவன் விலக்கப்பட்ட ஒருவன். அவன் மிகாயா. இம்லாவின் குமாரன். நான் அவனை வெறுக்கிறேன்,”பாருங்கள். அவன், “அவர்கள் அவனை ஐக்கியத்தில் ஏற்றுக் கொள்ளமாட் டார்கள். அவன் துவக்கத்திலிருந்தே எதற்கும் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன். அவன் எப்போதுமே, தீர்க்கதரிசனம் சொல்லும் எல்லாவற்றிலும், என்னுடைய மத ஸ்தாபனத்தை ஒரு சிறிதளவும்கூட ஊக்கமளிக்கமாட்டான்” உஹ்-ஹு “அவன் எல்லாக் காரியங்களையும் தீமை யாகவே செய்வான். அவன் எப்போதுமே, எனக்கு எதிராக தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன், மற்றவர்களை விட வித்தியாசமானவன் என்பதை காண்பிக்க” என்றான். 185. அப்பொழுது யோசபாத், "ஓ! அது போன்றதை இராஜா சொல்லாதிருப்பீராக. ஆனால், இந்த மனிதன் சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான். 186. அதற்கு அவன், “நல்லது, நாம் அவனைக் கண்டு பிடிப்போம்” என்றான். ஆகவே அவர்கள் ஒருவனை வனாந்திரத்தில் எங்கோ ஒரு இடத்திற்கு அனுப்பினார்கள். 187. "இப்போது, உன்னுடைய இந்தப் பாதையிலே, நான் உனக்கு ஒன்று சொல்லவேண்டும். நீ மறுபடியும் ஸ்தாபனத்திற்குத் திரும்பி வரவேண்டுமா? பார்? நீ அவர் கள் எல்லோரோடும் மீண்டும் ஐக்கியம் வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியானால், மாவட்ட சபைமூப்பர் (presbyter) என்ன சொல்கிறாரோ, அதையே நீயும் சொல் வாயானால், பிஷப் என்ன சொல்கிறாரோ, அதையே நீயும் சொல்வாயானால், அவர்கள் உன்னை மீண்டும் ஏற்றுக் கொள்வார்கள். அதைச் செய்யக்கூடிய நேரம் இதுதான்” என்றான். 188. ஆனால், அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனு டைய ஒரு உண்மையான தீர்க்கதரிசி, தேவனுடைய ஒரு வார்த்தையின் பேரில் சமரசம் செய்வதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? நிச்சயமாக இல்லை. 189. அவன், “தேவன் என்ன சொல்கிறாரோ, அதை மாத்திரம்தான் நான் சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன்” என்றான். நமக்கு ஒரு இம்லாவின் குமாரன் தேவை. "கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன், அவர் என்ன சொல்கிறாரோ, அதை மாத்திரம்தான் நான் சொல்வேன்” அதுதான் சரி. “அவர் என்ன சொல்கிறாரோ” 190. ஆகவே, ஜனங்களுக்கு முன்பாக அவர்கள் கீழே வந்த போது, எல்லாத் தீர்க்கதரிசிகளும், “இப்போது, நீர் சொல்லும், அவர்கள்...” என்றார்கள். 191. அவன், “காத்திருங்கள். இன்றிரவை எனக்குத் தாருங்கள். கர்த்தர் என்ன சொல்லப் போகிறார் என்று நான் பார்க்கட்டும்” என்றான். ஆகவே, அன்றிரவு கர்த்தர் தரிசனத்தில் அவனுக்குத் தோன்றி, அவன் என்ன சொல்ல வேண்டும் என்பதைச் சொன்னார். 192. அடுத்த நாள் காலை, அவன் “இம்லா, நீ சொல்வது என்ன?” என்று கேட்டான். அவர்கள் எல்லோரும் அங்கே நின்றுகொண்டிருந்தபோது.. அதாவது, இம்லாவின் குமாரனாகிய மிகாயா அங்கே நின்று கொண்டிருக்கையில், “இப்போது நீ என்ன சொல்லப் போகிறாய்? நாங்கள் எல்லோரும் இங்கே கூடியிருக்கிறோம். எல்லா ஆசாரியர்களுமாக, எல்லா தீர்க்கதரிசிகளுமாக, எல்லா இராஜாக்களுமாக, எல்லோருமே இங்கு ஒன்றாகக் கூடி அமர்ந்திருக்கிறோம். இந்தப் பெரிய ஆலோசனை சபையில், இட போது நீ என்ன சொல்ல இருக்கிறாய்?” என்று கேட்டான். 193. அவன், “நீங்கள் போகலாம். ஆனால், மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல இஸ்ரவேலர் சிதறடிக்கப்பட்டதை நான் காண்கிறேன்” என்றான். 194. அதற்கு ஆகாப், “நான் உன்னிடம் என்ன கூறினேன்! அந்த துரோகி தீமையாக மாத்திரமே எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் உரைப்பான்” என்றான். 195. தேவன் அதையே கூறியிருக்கும் பொழுது, அதைத் தவிர வேறு ஒன்றை அவன் எப்படி சொல்லக் கூடும்? ஒரு தீர்க்கதரிசியானவன், தேவன் பேசுகிற அவருடைய வாயாக இருக்கவேண்டுமே ஒழிய தன்னுடைய சுயமான எண்ணத்தின்படியல்ல. அவனுடைய... நீங்கள் பாருங்கள். அவன் முழுமையாக தேவனோடு இணங்கியிருக்கிறான். யாரையும் காயப்படுத்துவது அவன் விருப்பமல்ல, ஆனால், தேவன் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே அவன் சொல்ல வேண்டும், ஏனெனில், அதன் மீது எந்த கட்டுப்பாட்டையும் அவனாக செலுத்த முடியாது. பாருங்கள்? 196. இப்பொழுது அவன் சொன்னான், “நான் உம்மோடு கூறவில்லையா?” 197.பிறகு, ஒரு பெரிய மனிதன் கொம்புகளோடு வந்து, அவன் வாயில் அடித்து, “என்னிடத்திலிருந்து வெளியே வந்த தேவனுடைய ஆவி, எந்த வழியே சென்றது?” வேறு வார்த்தையில் அதை நான் புரியும்படியாக உடைத்து கூற முயற்சிக்கிறேன். “இங்கே பார், இங்கே பார், மிகாயா, நான் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும். வேதாகமத்தில் நான் சிறந்த புலமைப்பெற்றவன் என்பதை நீ அறிந்திருக்கிறாய் அல்லவா? நான் அபிஷேகம் பண்ணப் பட்டவன் என்பதை நீ அறிந்திருக்கிறாய் அல்லவா?” அல்லது நாம் இன்று சொல்வதுபோல: “நான் ஞானஸ்நானம் பெற்றவன் என்பதை நீ அறிந்து கொண்டாயா?” 198. இம்லா,"நான் அதை சந்தேகிக்கவில்லை” என்றான். 199. அவன், “ஆனால், கவனி! தேவனுடைய ஆவி என்னிடம், “நாம் சீரியர்களை இந்த நிலத்தைவிட்டு வெளியே தள்ளப் போகிறோம்” என்று கூறினார். மேலும் அதை இங்கே என்னிடமிருக்கும் நானூறு பேர்கள் மூலமாக சாட்சி பகர்ந்தார். அப்படியிருக்கையில், நம்முடைய மகத்தான ராஜாவானவர் கொல்லப்படுவார் என்று இங்கே வந்து சொல்ல நீ யார்?” என்று கேட்டான். அதற்கு அவன், “தேவனுடைய ஆவியானவர் என்னிடம் சொன்னார்” என்றான். 200. நீங்கள் புரிந்துகொள்ளும்படியாக, இதை இன்னும் சற்று உடைத்து கூறுகிறேன். ஒருவேளை மிகாயா இப்படி கூறியதாக நாம் காணலாம்: “ஐயா, நேற்றைய இரவு நான் தரிசனத்தில், தேவன் ஒரு சிங்காசனத்தில் வீற்றிருப்பதை கண்டேன். பரமசேனை அவரைச் சுற்றிலும் கூடி வந்து, உஹ்ஹு, அவர்கள் பரலோகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பேசிக் கொண்டதாவது: “ஆகாபை வஞ்சிக்க நாம் யாரை கீழே அனுப்பலாம்? ஏனென்றால், சிங்காசனத்தின் கீழ் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறான். ஒரு உண்மையான தீர்க்கதரிசி, அவன் பெயர் எலியா. அவன் என் வாக்கினாலே தீர்க்கதரிசனம் உரைத்து, “அந்தப் பொல்லாத ஆகாப், நாபோத்தை கொலை செய்ததினிமித்தம், அந்தப் பொல்லாத மனிதனின் ரத்தத்தை நாய்கள் நக்கும்” என்று கூறியிருக் கிறான். நாம் அதை நிறைவேறச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம், ஏனென்றால் அது ஏற்கனவே உரைக்கப்பட்டுவிட்டது. அது கர்த்தர் உரைக்கிறதாவது. அது நிறைவேறியாக வேண்டும், நடந்தே தீரவேண்டும். அதை நாம் எப்படி செய்யப் போகிறோம்?” 201. “அப்பொழுது இழக்கப்பட்டவர்களின் இருளான ஸ்தலங்களின் (creeping regions) ஆழத்திலிருந்து ஒரு ஆவி மேலேறி வந்து, “நான் ஒரு வஞ்சிக்கிறவன், என்னால் உங்களுக்கு ஒரு சேவை செய்ய முடியுமானால், நான் கீழே இறங்கிச் சென்று அவனுடைய தீர்க்கதரிசிகளுக்குள் புகுந்து கொள்வேன்” என்று சொன்னது.” அவர்கள் குறிப்பட்ட வழியில் மிகவும் பழக்குவிக்கப்பட்டவர்கள். ஒரே ஒரு காரியம் மட்டும் அவர்கள் புரிந்து கொள்ளக் கூடியது, அது சற்று உணர்ச்சிவசப்படுதல் மாத்திரமே. “நான், அவர் கள் ஒரு பொய்யை தீர்க்கதரிசனமாக உரைக்கும்படி செய்வேன். ஆகாபை உம்முடைய உண்மையான தீர்க்கதரிசிக்கு செவிகொடாமல், அந்தப் பிரமுகர்களுக்கு செவிசாய்க்கும் படி செய்வேன். ஏனெனில், (அந்த உண்மையான தீர்க்கதரிசி) அவன் கூறும் எல்லாவற்றையும் உம்முடைய வார்த் தையைக் கொண்டு சோதிப்பான், அவனுடைய தரிசனங்களை உம்முடைய வார்த்தையைக் கொண்டு சோதிப்பான், அவன் செய்யும் எல்லாவற்றையும் உம்முடைய வார்த்தையைக் கொண்டு சோதிப்பான். அது வார்த்தையுடன் பொருந்தாவிட்டால், அவன் அதற்கு செவி கொடுக்கமாட்டான். ஆனால், நான் மற்றவர்களாகிய இவர்களை வஞ்சிக்க முடியும். ஆகாப் அந்த மகத்தான ஐக்கியத்தின் மீதும் அதன் பாதுகாப்பின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறான். ஆகையால் அவர்கள் எல்லாம் ஒன்று கூடி சேர்ந்தே செல்வார்கள். நான் அங்கு சென்று, ஆகாபை அவர்களுக்கு செவிகொடுக்கச் செய்வேன். இந்தவிதமாகவே நாங்கள் அதை செய்யப் போகிறோம்.” 202. அதற்கு தேவன், “உன்னால் அதைச் செய்ய முடியும், நீ நிஜமாகவே ஒரு வஞ்சகன்தான். நீ கீழே போ என்றார்.” 203. பிறகு சிதேக்கியா அவனது கன்னத்தில் (mouth) அடித்து “எங்கே நீ...?” என்று கேட்டான். 204. அதற்கு அவன், "நீ உள்ளறையில் பதுங்கும் நாளில் அதைக் காண்பாய்” என்றான். உஹ்-ஹு 205. அவன், “நீர் போகலாம்” என்றான். இராஜாவிடம் சிதேக்கியா இவ்விதம் சொன்னான்: நீர் போய் சமாதானத்துடன் திரும்பி வாரும் என்றான். 206. ஆகாப், "அந்த ஆளை இழுத்துக் கொண்டு போய், சிறையில் அடையுங்கள்! கட்டிப் போடுங்கள். இடுக் கத்தின் அப்பத்தையும், இடுக்கத்தின் தண்ணீரையும் கொடுங்கள். நான் வெற்றியுடன் அங்கேயிருந்து திரும்பி வரும்போது, “இந்த எழுப்புதல் நிச்சயம் நடக்கும்” என்று என்னுடைய தீர்க்கதரிசிகள் என்னிடம் சொல்லியபடியே ஆகும். நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன்!” என்றான். 207. அந்த மனிதனிடம் மிகாயா பேசிய கடைசி வார்த்தையை கவனியுங்கள்: “நீர் திரும்பி வருவது உண்டானால், கர்த்தர் என்னைக் கொண்டு பேசினதில்லை” என்றான். ஆமென். 208. பாருங்கள், காரியங்களை நடப்பிக்க தேவன் தனக் ]கென்று வழிகளை உடையவராயிருக்கிறார். இந்த மனிதர்கள், தாங்கள் தேவனுக்குச் சேவை செய்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். ஜாக்கிரதை யாயிருங்கள்! உணர்ச்சிவசப்படுதலும் அல்ல, உற்சாகமும் அல்ல, கற் பனைகளும் அல்ல. ஆனால் அது, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதாக கட்டாயம் இருக்க வேண்டும். சரியாக இருக்க வேண்டும். சரி. காரியங்கள் இவ்வாறாக இருக்கிறது என்று நாம் காண்கிறோம். 209. இப்போது, கவனியுங்கள், தாவீது இந்த மகத்தான அறிவிப்பைப் செய்தபோது, அது நல்லது என்று தோன்றியது. செய்வதற்கு ஒரு நல்ல விஷயம். பிறகு நாம் காண்கிறோம். (உங்களைக் களைப்படையச் செய்கிறேனா? இன்னொன்று பெறுவதற்கு அதிக காலதாமதம் செய்கி றேனா?) அவர்கள் இந்தப் பெரிய பிரகடனத்தை செய்தனர். அவன் தீர்க்கதரிசியை ஆலோசிக்கவில்லை. 210. இப்போது, தேவன் முதலில் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் என்று அவர் வாக்குரைத்திருப்பதாக ஆமோஸ் 3:7 கூறுகிறது என்பதை எவரேனும் அறிவீர்களா? நாம் சபை காலங்களினூடாக சீர்திருத்தக்காரர்களைப் பெற்றிருந்தோம்; ஆனால் மல்கியா 4-ல், முடிவு வருமுன்னே கடைசி நாட்களில், பூமியிலே ஒரு தீர்க்கதரிசி இருப்பார் என்று வாக்குரைக்கப்பட்டுள்ளது. (ஏனெனில், இது அந்த மாதிரியுடன் பொருந்தவேண்டும், பாருங்கள்). 211. இயேசுவின் முதலாம் வருகைக்கு முன்பு, எலியா, மல்கியா 3-ன் எலியா வருகிறான். மத்தேயு 11 அவ்வாறு சொல்கிறது, நீங்கள் அதைப் புரிந்துகொண்டால், "இதோ, எனக்கு முன்பாக நான் என் என் தூதனை அனுப்புகிறேன் என்று கூறப்பட்டவன் இவன்தான்.” இப்போது, அவனைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. எல்லா வேதப் பண்டிதர்களும் இதை நம்புகின்றனர்: “கடைசி நாட்களிலும் கூட, எலியாவின் ஆவி வரவேண்டி யுள்ளது” அது ஐந்து முறை வரவேண்டியுள்ளது. தேவன் அந்த ஆவியைப் பயன்படுத்துகிறார்: எலிசா, எலியா, யோவான் ஸ்நானகன், புறஜாதி சபைக்கு, மற்றும் வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் உள்ள யூதர்களுக்கு. அது, தேவனுடைய கி-ரு-பை (G-R-A-C-E), வி-சு-வா-ச-ம் (F-A-I-T-H), இ-யே-சு (J-E-S-U-S), எழுத்து ஐந்து. நான் கோடு நிறுத்தமுடியாது. அது ஐந்திற்குச் செல்ல வேண்டும். பாருங்கள்? கவனியுங்கள்! 212. இப்போது, அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். மேலும் அது வேதாகமத்தை சரியாக இந்த நாளுக்கும் மற்றும் சோதோம் கொமோராவுக்கும் நேராக பொருத்துகிறது. மேலும் எலிய... அது எலியா அல்ல; அது எலியாவின் மேலிருந்த தேவனுடைய ஆவி. எலியா வெறுமனே ஒரு மனிதன்தான்; இப்போது, நாம் எலியாக்களைப் பெற்றிருந்தோம். மேலும், எலியாவின் அங்கிகள், எலியாவின் சால்வைகள் மற்றும் எலியாவினுடைய ஒவ்வொன்றையும் நாம் பெற்றிருந்தோம். ஆனால் இந்த நாளின் எலியா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. மத்தேயு 17-ன் படி அவர் வரவேண்டும்.... லூக்கா 17:30-ன் படி மனுஷகுமாரன், தம் ஜனங்களுக்குள்ளே தம்மை வெளிப் படுத்த வேண்டும். ஒரு மனிதன் அல்ல, ஆனால் தேவன்! ஆனால் அது ஒரு தீர்க்கதரிசியின் மூலம் வரவேண்டும். இப்போது, ஒரே சமயத்தில், இரண்டு பெரிய தீர்க்கதரிசிகள் ஒருபோதும் அவருக்கு இருந்ததில்லை. ஒருபோதும் இல்லை, இந்த உலகத்தில். பாருங்கள்! எவ்வளவாக அது... என்பது காரியமல்ல; இரண்டு- இரண்டு நபர்கள் (தலைகள்) இருக்கமுடியாது. ஒரு நபராகத்தான் இருக்க வேண்டும். ஒரு மனிதனை மட்டுமே தேவன் தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியவராயிருக்கிறார். பாருங்கள்? ஒரே தேவன் உண்டு; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி.. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே தேவன். கவனியுங்கள், மேலும், வெறுமனே அவைகளை அலுவல்களாகப் பயன்படுத்தினார். ஆகவே அவர் எலியாவுடன் இருக்கிறார். எலியாவின் ஆவியுடன். அவர் அந்த ஆவியை உபயோகப்படுத்தினார், ஆனால் அதே தேவன், எல்லா காலத்திலும் தமது வார்த்தையை நிறைவேற்ற அதை இயக்குகிறார். 213. இப்போது, கவனியுங்கள், இதில் இப்போது, தாவீது அவனுக்கு இருந்த எல்லாமே ஒரு ஒழுங்கில் இருந்தது என்று நினைத்தான். மேலும் அவன் ஏவப்பட்டிருந்தான். பாருங்கள், பரிசுத்த ஆவி எப்படி ஒரு மனிதனை அபிஷேகிக்க முடியும்? அந்த அபிஷேகித்தலானது அதன் முறைமையில் அமையப் பெற்றிருக்க வேண்டும். வெளிப்புறத்து ஆவியானது பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப் பட்டிருந்தாலும் ஆத்துமாவானது அடர் இருட்டாக இருக்க நேரிடலாம். கோதுமைக்கு ஜீவனைத் தரும் அதே தண்ணீர் தான் முட்செடிக்கும் ஜீவனைத் தருகிறது, முட்செடியும் அதே தண்ணீரினால் வளர்கிறது: முட்செடியின் ஜீவன் அதன் அடிப்பாகத்தில் உள்ளது. அது களிகூருகிறது; அது பூக்கிறது, ஜீவனைப் பெறுகிறது, கோதுமை செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்கிறது. ஆனால் அதன் ஆத்துமா வானது முட்செடிதான். பாருங்கள்? கள்ளப் போதகர்கள் எழும்பலாம், திரித்துவத்தின் எல்லா வகைகளையும், மற்ற அனைத்தையும்கூட போதிக்கலாம், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருந்து, உண்மையான சுவிசேஷம் செய்யக்கூடிய அதே அளவு அற்புதங்களைச் செய்யலாம். ஆனால் இங்கேயோ வார்த்தையானது, கிரியை செய்வது வார்த்தையே. நான் என்ன குறிப்பிடுகிறேன் என்பதைப் பாருங்கள்? இப்போது, இதை உபதேசிப்பது சரிதான் என்று பூகிக்கிறேன். நான்-நான் இன்று காலையில் இந்த விடுதியில் பல்வேறு ஸ்தாபனங்களுக்கிடையிலான (கூடுகையில்) கூடாரத்தில் இருக்கிறேன். 214. கவனியுங்கள், நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை கவனிக்கவேண்டும். இப்போது, நல்லது, கவனிக்கவும். ஒரு உண்மையான எழுப்புதல் கொண்டிருந்த எல்லா உணர்ச்சிப் பரவசங்களையும் தாவீது பெற்றிருந்தான். கவனிக்கவும்! அவர்கள் கூச்சலிட்டார்கள், அவர்கள் கத்தி னார்கள், அவர்கள் நடனமாடினார்கள், அந்த அபிஷேகத்திலிருந்து அவர்கள் உண்மையாகவே ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொண்டனர். நிச்சயமாக பெற்றுக் கொண்டனர்! எல்லோருக்குமே ஒரு உண்மையான எழுப்புதல், ஆனால் நீங்கள் கவனிக்கவும், தேவன் அதில் இல்லை. தேவன் அதில் இல்லை. அவருக்கு ஒரு தீர்க்கதரிசி, சரியாக அந்த தேசத்திலேயே இருந்தான். அவர்கள் அதை அறிந்தவர்களாயிருந்திருக்க வேண்டும். பாருங்கள்! தாவீது நிச்சயமாய் அதை அறிந்தவனாய் இருக்க வேண்டும். 215. இன்று நாம் பெரிய ஸ்தாபனங்கள் மற்றும், நமது நாட்களில் நடைபெற்ற சிலுவைப் போர்கள் போன்ற எல்லா இயக்க அமைப்புகளைப் பெற்றிருந்தும், அதன் முடிவு முன்பிருந்ததைப் போன்றே அமைந்திருக்கிறது. நம்முடைய மகத்தான சிலுவைப் போர்கள், நம்முடைய எல்லா பெரிய அருமையான காரணகாரியங்கள், நம்முடைய பெரிய கட்டிடங்கள், நம்முடைய பெரிய... ஆயிரக்கணக்கில், உறுப்பினர்களாயும் மற்றவைகளையும் சேர்த்துக் கொண்டிருந்தாலும், அதன் முடிவும் முன்பு இருந்தது போலவே, எல்லாமே தோல்வியடைந்தன. நான் மாறுபட்டிருக்க வேண்டுமென்பதற்காக அதைச் சொல்லாமல், நான் இன்று காலையில் அவருடைய புத்தகத்தின் பேரில் நின்று கொண்டிருப்பதால், நான் தேவனுக்கு முன்பாக உத்தமமாய் இருக்கவே இதைச் சொல்கிறேன், பாருங்கள்? எல்லாமே தோல்வியில் முடி கிறது, அதே முடிவை தருகிறது. 216. இன்று நாம் செய்வது போன்று, தேவனையும் (அவருடைய நேரத்திலும், காலத்திலும்) அவருடைய தீர்க்கதரிகளையும் கருதாமல், வேத சாஸ்திரத்தையும், குருமார்களையும், மதக்கோட்பாடுகளை மாத்திரமே சார்ந்து கொண்டபோது என்ன நேரிட்டதென்பதை நாம் இப்போது காண்போம் அவை எல்லாம் குளறுபடியாகி விட்டது. இப்பொழுது, மிகத் தெளிவான பார்வையில், அனைத்தும் குழப்பத்தில் முடிந்துவிட்டது. அங்கே உண்மையான தேவ னுடைய ஆவி இருக்குமானால், அது வார்த்தையினிடம் வழிநடத்தும்; வார்த்தையின் ஒரு பாகத்திற்கு மாத்திரமின்றி அந்த காலத்துக்கான முழுமையான வார்த்தையினிடத்திற்கும் வழி நடத்தும். பாருங்கள்? 217. பெந்தெகொஸ்தே நாளில், ஆவியானது அதற்குள், சரியாக யோவேல் 2:38-க்கு (2:28-க்கு) வழிநடத்தியது. பாருங்கள்! லூத்தரின் நாட்களில் அது அதற்குள், அதை, சரியாக வழிநடத்தியது, வெஸ்லியின் நாட்களிலும், இந்தக் கடைசி பெந்தெகொஸ்தேயின் அசைவிலும். ஆனால் இதுவோ வேறொரு காலம்; இது மணவாட்டியை வெளியே அழைக்கின்ற காலம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பான பெந்தெகொஸ்தே அல்ல, அல்லது பெந்தெகொஸ்தேயின் திரும்புதல் அல்ல. 218. பரிசுத்த ஆவி லூத்தரில் இருந்தது, பரிசுத்த ஆவி வெஸ்லியில் இருந்தது; அது அபிஷேகிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை. மேலும் பரிசுத்த ஆவி சபைக்காலங்களில் ஜனங்களுக்கு திரும்பக் கொடுக்கப்பட்டது, அவர்கள் வரங் களின் திரும்ப அளித்தலைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். தேவனிடம் தங்களை அர்ப்பணித்ததினிமித்தம், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மூலமாக அந்நிய பாஷையில் பேசுவதை அவர்கள் கண்டு கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளை வியாதியஸ்தர்கள் மேல் வைத் தனர், அவர்கள் சொஸ்தமானார்கள். அவர்கள் ஆவியில் நடனமாடினார்கள். பாருங்கள்! அது சீர்த்திருத்தத்தின் காலமாயிருந்தது, சபையை மீண்டும் ஒழுங்கிற்குள் கொண்டு வருவதாய் உள்ளது. மேலும், சபையின் கடைசி ஒழுங்கின் கிரமம், சபைக்குள் வரங்களை வைத்தல் ஆகும்; அதாவது, லூத்தர் நீதிமானாகுதல் என்பதை கொண்டு வந்தார். வெஸ்லி பரிசுத்தமாகுதல் என்பதை கொண்டு வந்தார். பெந்தெகொஸ்தே வரங்களைக் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அதே தவறு, கோதுமை தண்டிற்கு இயற்கை அளித்த அதே முறைமை, அவர்கள் தங்களை ஸ்தாபித்துக் கொண்டனர், அது தேவனுக்கு விரோதமாகவும், அவருக்கு முரணாகவும் உள்ளது. 219. இப்போது, நாம் காண்கிறோம் அதாவது இந்த தண்டுகள் ஒன்று கூடி வரும்போது, அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அது எப்படியாயிருந்தாலும் "புதிய வெளியீடு" என்று அவர்கள் அழைக்கும் அந்தக் காரியமானது, “அசெம்பிளிஸ் ஆஃப் காட்” சபையிலிருந்து வெளியே வரும்போது, அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ் நானம் என்பது எவ்வளவு சத்தியமாயிருந்தாலும், அவர்கள் ஏற்கனவே பொதுவான கூட்டமைப்பில் இருந்தனர். மனிதன் அதை கையகப்படுத்திவிட்டான், ஆவியானவரும் அவர்களை விட்டு விலகிவிட்டார். சரி! அதற்குப் பிறகு இது வந்தது.....உங்களுடைய சிறந்த தலைவர்கள் சிலரோடு நான் பேசினேன். அவர்கள் கூறினர்: “நல்லது, நாங்கள் இப்போது என்ன செய்வது? இதுதான் சத்தியம் என்று அவர்கள் அறியும்போது, அவர்கள் தங்களுக்குள் வருத்தபடுவார்கள்.” ஆனால் அவர்கள் அதை அறியாமல் போய் விட்டால், அவர்கள் ஆவிக்குரிய குருடர்களாயும், வேதத்தை அறியாதவர்களாயும் இருப்பார்கள். இப்போது அதை நான் மோசமாக கூறாமல், பயபக்தியுடன் கூறுகிறேன். ஏனெனில், வேதத்தில் எந்த இடத்திலேயும், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்னும் பட்டப்பெயரை பயன்படுத்தி ஒருவர்கூட ஞானஸ்நானம் பெற்றதாக குறிப்பிடப்படவில்லை. மேலும் உலக சபையின் ஆலோசனை சங்கம், ரோமன் கத்தோலிக்க சபை வரும்வரை அவ்வாறு பயன்படுத்தவில்லை. அவர்களுடைய சொந்த மத போதனை அதைச் சாட்சி பகருகிறது. இது ஒரு கத்தோலிக்கக் கொள்கை! வேதத்தின் உபதேசம் அது அல்ல, ஆனால் அது ஒரு கத்தோலிக்கக் கொள்கை. பின்னர் மெத்தோடிஸ்டுகளாகிய நீங்களும் அவர்கள் செய்தது போலவே, உங்கள் மத போதனைகளையும், மற்றவைகளையும் கொண்டு வந்தீர்கள். மெதுவாக அதிலிருந்து வளர்ந்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இப்பொழுது பெந்தெகொஸ்தேவானது, அதன் சில கொள்கைகளை பரப்புகிறது. ஆனால் நீங்களும் அவர்களுடைய கொள்கைகளையே பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். 220. ஆனால், இது மணவாட்டி - அழைக்கப்படுகிற நேரம். இது ஏழு முத்திரைகளும் திறக்கப்பட்டுள்ள நேரம். இது சீர்திருத்தக்காரர்கள் திறக்கப்படும்படி விட்டுவிட்ட அனைத்தும் வெளிப்பட்ட நேரம். மல்கியா 4-ம் அதிகாரம் மாத்திரமே அதைச் செய்ய முடியும். ஏனெனில், அது வெளிப்பாட்டை தேவனிடத்திலிருந்து நேரடியாக எடுத்து, அதை ஒரு தனிப்பட்ட நபரிடம் அதை செய்யும் படியாக கொண்டு வருகிறது. அது சரிதான்! அது ஒரு குழுவிற்கு வர முடியாது. ஒருபோதும் இல்லை. ஒரே மனிதன்! அதைத் தான், தேவன் தம்முடைய மணவாட்டிக்காக வருகிறதின் நிழலாட்டமாக, ஒரு எலியேசரை வாக்குத்தத்தம் செய்துள்ளார். பாருங்கள்? 221. குருமார்கள் மற்றும் ஊழியர்கள் முதலானோர், நிஜமாகவே அபிஷேகம் பெற்றவர்களாயிருந்து, தங்களது சொந்த ஏவுதலைப் பெற்றுக் கொள்ளும்போது, குறிப்பிட்டு கவனியுங்கள். தாவீது அபிஷேகம் பண்ணப்பட்டவன். வேதம் அவ்வாறு சொல்கிறது. ஆனால், நீங்கள் பாருங்கள், அவன் தவறான தகவல் ஆதாரங்களினூடாக சென்றான். தவறான பாதைக்கு சென்றான். தேவனுடைய பரிசுத்தமான பாதையில் சென்று, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்ன என்பதையும், “இதற்கு இதுதான் நேரமா? இதற்குரிய காலமா இது? இதுதான் தேவனுடைய சித்தமா?” என்று காண்ப தற்குப் பதிலாக, அவன் தனது அபிஷேகத்தைத் தவறான பக்கமாய், மக்களிடம் செலுத்தி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும், தலைவர்களிடம் செலுத்தி அவர்கள் என்ன நினைக்கிறர்கள் என்பதையும் கேட்டறிந்தான். 222. அவன் தேவனுடைய உண்மையான ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தால், முதலில் தேவனுக்கு முன்பாக சென்று, “பிதாவே! இது என்ன?” என்று நாத்தான் தாவீதுக்கு பிறகு செய்தது போல கேட்டிருப்பான், “நான் இந்த கேதுருமர வீட்டில் வாசமாயிருக்க, என் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியோ இந்த திரைகளின்கீழ் இருப்பது சரிதானா?”, என்று தாவீது கூறினான். 223. நாத்தான் அவனை நோக்கி, “தாவீது, தேவன் உன்னோடு கூட இருப்பதால், உன் இருதயத்திலுள்ள எல்லாவற்றையும் நீ செய்வாயாக, நீ தேவனால் அபிஷேகிக்கப்பட்ட பாத்திரமாயிருக்கிறாய்” என்றான். 224. ஆனால், அவன் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பதினால், அவன் தவறிழைக்கும் போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியைத் திருத்த கடமைப்பட்டிருக்கிறார். அன்றிரவு அவர் அவனுக்கு முன்பாக தோன்றி, “போய் என்னுடைய தாசனாகிய தாவீதிடம் சொல், நான் அவனுடைய தைரி யத்தை மெச்சுகிறேன், இதற்காக நான் அவனை நேசிக்கிறேன், ஏனெனில் அவன் என் இருதயத்திற்கேற்ற தாசன், மேலும் என்னுடைய உடன்படிக்கை பெட்டியை அந்த விதமாக வைப்பதற்கான காலம் இது என்று நான் அறிவேன். ஆனால் நான்... ஆனால் அதைச் செய்ய வேண்டிய காலம் இதுவல்ல. இதைச் செய்ய நான் அவனை அனுமதிக்காமல், அவனுடைய குமாரனை அனுமதிப்பேன்” என்றார். 225. பின்பு, நாத்தான் இங்கே, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வந்து, “நீ கொண்டிருக்கும் அந்த மகத்தான வெளிப்பாடானது, நீ அந்த உடன்படிக்கை பெட்டியை கொண்டு வந்தபோது எப்படி தவறாயிருந்ததோ அது போலவே இதுவும் தவறாயிருக்கிறது” என்றான். (உஹ்-ஹு! உஹ்-ஹு! பாருங்கள்?) “நீர் அதைச் செய்யாதீர். முயற்சியும் செய்யாதீர்! ஆனால் தேவன், அதைச் செய்ய உன்னுடைய குமாரனை அனுமதிப்பேன் என்றார்.” அங்கேதான்! பாருங்கள்? அங்கேதான் காரியம்! 226. ஆபிரகாம் எப்படி பூமியிலே வரப்போகிற நகரத்திற்காக நாடினானோ, அதுபோலவே தாவீதும் அபிஷேகம் பெற்றவனாயிருந்து அதை முன்னதாவே கண்டதினால் அப்படி கூறினான். ஏனென்றால் ஆபிரகாம் என்றாவது ஒருநாள் அந்த நகரத்திலே வசிக்கப் போகிறபடியால், அதற்காக அவன் காத்திருந்தான். அவன் அதை தேடித் திரிந் தான். அவன் தேடித்திருந்த அதே இடத்தில், அப்பொழுது அது அவனுக்கு மேலே இருந்தது, ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியில் அது கீழே இறங்கி வரும், அவன் அதிலே வாசம் பண்ணுவான். ஆனால் அவன் தீர்க்கதரிசியாய் இருந்தபடியால், அவன் அபிஷேகிக்கப்பட்டிருந்து, ஏவுதலுக்குட்பட்டவனாய், அந்த நகரம் அங்கு எங்கோ உண்டென்பதை அறிந்தவனாய், அதை நோக்கி காத்திருந்தான். ஆனால், நீங்கள் பாருங்கள், அதைக் குறித்ததான முழு வெளிப்பாடும் அவனுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அது அவனுடைய காலத்திற்கானது அல்ல. [ஒலிநாடாவில் காலியிடம் ஆசிரிய...யோவான் வரைக்கும், அது பர லோகத்தை விட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வருவதைக் கண்டான். அது தான் அந்த நகரம். 227. பாருங்கள், எல்லாமே அதனதன் காலத்தில் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் கோதுமையை வசந்தக் காலத்திலோ அல்லது இலையுதிர் காலத்திலோ விதைத்து, அடுத்த கோடைக் காலத்தில் அறுத்தால், பாருங்கள்? அது தண்டின் வழியாக மேலே வர வேண்டும்... அதன்பின் பட்டுக் குஞ்சத்தின் மூலமாக மேலே வரவேண்டும், மேலும் உமி... அது அதன் காலத்தில் ஆகவேண்டியது. இயற்கை அனைத்தும் ஒரு தொடர்ச்சியில் செல்லுகிறது. தேவனு டைய ஆவி இயற்கையை உருவாக்கியது. மேலும் தேவன் மற்றும் இயற்கை எல்லாம் ஒரு தொடர்ச்சியில் உள்ளது. ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள எல்லா காரியங்களும், பரலோகத்தில் அவன் என்ன கண்டானோ அதனுடைய மாதிரியாய் இருந்தது. 228. நீங்கள் பாருங்கள், ஒரு மரமானது ஜீவிப்பதற்குப் போராடி முயற்சிக்கிறது. அதன் அர்த்தமானது, மரிக்கக் கூடாத மரமொன்று உண்டு. நீங்கள் பாருங்கள், ஒரு மனிதன் ஜீவிப்பதற்கு போராடுகிறான். அது எதைக் காட்டு கிறது என்றால், மரிக்கக்கூடாத ஒரு கூடாரம் எங்கேயோ இருக்கிறது. “இப்பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும் நமக்கென்று ஏற்கனவே ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.” பரலோகத்தின் நல்லப் பிதா ஒருநாள், என்னை அந்தத் திரைக்குப் பின்னால் நடந்துச் செல்லவும், அதைப் பார்க்கவும் அனுமதித்தார். எத்தனைபேர் அதை.... கேட்டீர்கள்? பாருங்கள்? காலத்தின் திரைக்கு அப்பால் காண்பது. நான் உங்களுக்கெல்லாம் எப்படி இப்போது பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறேனோ, அதே போல, அங்கே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். பலிபீடத்தின் கீழ், “இன்னும் எவ்வளவு காலம்?” என்று புலம்பிக் கொண்டிருந்தனர். இது ஒரு புராணம் அல்ல; அறிவுக்கூர்மையுள்ள சிலர், “எவ்வளவுக் காலம் கர்த்தாவே?”... பாருங்கள், நாம் அதை இப்போது உணர்வது போல, நமது காலத்தில் சகோதரன் பில் டாக் (Bill Dauch] அவரது தொண்ணூற்று மூன்றாம் வயதில் இங்கே அமர்ந்துள்ளார். மீண்டும் அந்த இளமையான மனிதனுக்காக ஏதோவொன்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று... நீங்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். நான் சகோதரன் ஜாக் (Jack] மற்றுமுள்ள நாம் அனைவரும், சகோதரன் ஹெரோல்சர் (Hierholzer] இங்கிருக்கிறார், அந்த இளம் பிராயத்திற்கு திரும்பிச் செல்ல எப்படியாக அதை விரும்புகிறேன்.. எதற்காக நாம் அதை செய்ய விரும்புகிறோம்? மீண்டும் இளைஞனாகி அங்குமிங்கும் ஓடுவதற்காகவா? இல்லை ஐயா! ஏனெனில், நாம் நேசிக்கும் இந்த தேவனை மகிமைப்படுத்த, நமக்கு அதிக நேரம் உண்டாயிருக்கும் என்று நாம் உணருகிறோம். 229. பிறகு, என் அருமை சகோதரர்களே, இன்று காலையிலே நான் இந்தச் செய்தியை உடையவனாயிருக்கிறேன். ஆற்றின் அக்கரையில் ஒரு தேசம் உண்டு. அது என்றென்றும் இனிமை என்று அவர்கள் அழைக்கின்றனர். அங்கே, காலங்களினூடே மற்றும் எல்லாக் காலங்களிலும், நித்தியத்திலும் நாம் அவரை மகிமைப்படுத்துவோம். நாம் ஏன் அவ்வாறு உணர்கிறோம்? ஏனெனில், ஆழம், ஆழத்தை நோக்கிக் கூப்பிடுகிறது, ஒரு ஆழம் கூப்பிடும் வரை, அதற்கு மறுஉத்தரவு கொடுக்க இன்னொரு ஆழம் இருந்தாக வேண்டும், இல்லையெனில் எந்த ஒரு கூப்பிடுதலும் அங்கே இருக்கப் போவதில்லை. ஒரு சிருஷ்டிப்பு இருப்பதற்கு முன்னர் அதை சிருஷ்டித்த சிருஷ்டிகர் இருந்தாக வேண்டும், இல்லையெனில்.... சிருஷ்டியே ஒரு சிருஷ் டிகர் இருக்கிறார் என்பதற்கான சரியான அத்தாட்சி ஆகும். 230. இந்த ஆசாரியர்களை கவனியுங்கள், யாரும் சரியான பாதையில் இல்லை, அந்த அபிஷேகத்தை கவனியுங்கள், எல்லாம் சரி, அபிஷேகத்தினால் தவறு ஒன்று மில்லை. அதேதான் பெந்தெகொஸ் தேயினரான உங்களுக் கும். ஆனால், இப்போது எந்தப் பாதையில் நீங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். பெந்தெ கொஸ்தேயிலிருந்து நாட்கள் மாறி விட்டன. வேறு ஏதோ ஒன்று போய்க் கொண்டிருக்கிறது. ஒரு வேளை தேசத்திலே எந்த ஒரு தீர்க்கதரிசியும் இல்லாதிருந்தால், தாவீது செய்தது சரியாயிருந்திருக்கும். அது சரி. ஆனால் தேவனால் தீர்க்கதரிசியென்று ரூபகாரப்படுத்தப்பட்ட, நியமிக்கப்பட்ட, சாட்சி பகரப்பட்ட நாத்தான் அங்கே இருந்தான். 231. கவனியுங்கள்! வேதாகமத்தில் உடன்படிக்கைப் பெட்டி என்பது எப்போதுமே நமக்கு அது வார்த்தையின் மாதிரியாக உள்ளது. ஏனெனில் தேவனுடைய வார்த்தை உடன்படிக்கை பெட்டிக்குள்ளே இருந்தது. மேலும்... அவர் கள் எப்படி அந்த உடன்படிக்கை பெட்டியை மேலே கொண்டு வந்தார்கள் என்பதை கவனியுங்கள். அது தேவன் நியமித்த சரியான விதத்தில் அது வைக்கப்படவில்லை. இப்போது, உடன்படிக்கை பெட்டியானது எப்படி நகர்த்தப்பட வேண்டும், எப்படி எடுத்துச் செல்லப்பட வேண்டும், யார் மூலமாக இது செய்யப்பட வேண்டும் என்பதையெல்லாம் தேவன் முன்னதாக நியாயப்பிரமாணத்திலே சொல்லியிருக்கிறார். ஆனால் தாவீது, அவனுடைய அபிஷேகத்தின் கீழ். 232. என் சகோதரனே, இதைத் தவறவிடாதீர்கள் பெண் பிரசங்கியாக மற்றும் அது போன்று திகழ விரும்பும் என் சகோதரிகளே, இதைத் தவறவிடாதீர்கள். உங்களுடைய அபிஷேகம் எவ்வளவு அதிகமாயிருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் தேவனால் அளிக்கப்பட்ட ஸ்தானத்திற்குள்ளாக வந்தாக வேண்டும். தாவீதின் அபிஷேகம் எல்லாம் சரியாகத்தான் இருந்தது, ஆனால் அதைச் செய்கின்ற பொழுது, அவன் உற்சாகமடைந்து எல்லைக் கோட்டை மீறி அடி எடுத்து வைத்துவிட்டான். அவன் என்ன செய்தான்? அவன் எல்லைக்கோட்டைத் தாண்டி விட்டான். உடன்படிக்கைப் பெட்டியை அதனுடைய ஆதி ஸ்தானத்தில் வைப்பதற்கு பதிலாக, அவன் ஒரு புதிய மாட்டு வண்டியின் மீது ஏற்றி எடுத்துச் சென்றான். அவன் லேவியர்களின் இருதயத்தின் மேல் வைக்கும்படி செய்யவில்லை. அது லேவியர்களின் இருதயத்திற்கு மேலாக இருக்கும் தோள்களின்மேல் சுமந்து செல்லப்பட வேண்டிய தாயிருந்தது. வார்த்தையானது சிந்தையில் இல்லை, அது இருதயத்தில் உள்ளது! “ஒரு புதிய மாட்டு வண்டியின் மீது அல்ல”. அது என்னவாயிருந்தது? சில.... அது ஏதோ ஒரு புதிதான காரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினது, அங்கே தாவீது அதைச் செய்தான். இருக்கிறதும், வரப்போகிறதுமான ஒவ்வொரு ஸ்தாபனத்தையும் குறித்து பேசுகிறது. தேவனுடைய வார்த்தையானது ஸ்தாபன குருமார்களாலும், ஆயர்களாலும் மற்ற எவராலும் சுமந்து செல்லப்படக் கூடாது. அது மதம் சார்ந்த அசைவு அல்ல, அது மனித னுடைய இருதயத்திலுள்ள பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானம் ஆகும். பரிசுத்த ஆவியானது புருஷர்கள் மற்றும் ஸ்திரீகள் கீழ்ப்படியத்தக்க, அவர்களின் இருதயத்திற்குள் விளங்கும் தேவனுடைய அன்பின் பொக்கிஷமாகும் பாருங்கள்? 233. அவருடைய ஊழியக்காரர்களின் தோள்களின் மீது இருந்தது. அவருடைய ஊழியக்காரர்கள் லேவியர்களாயிருந்தார்கள். அந்த உடன்படிக்கைப் பெட்டி அவர்களுடைய இடது தோள்களின் மீது வைக்கப்பட்டு, அவ்வாறாகக் கட்டப்பட்டிருந்தது, ஏனெனில் அது அவர்களது இருதயத்திற்கு மேலாக வைக்கப்பட்டிருந்தது. வார்த்தையின் பாரமானது அவர்களது இருதயத்தின் மேல் இருந்தது. ஆமென்! இப்போது, உங்களுடைய ஸ்தாபனங்களின் மேலுள்ள பாரம் உங்கள் இருதயத்தின் மேல் உள்ளது, உங்கள் ஐக்கியத்தின் பாரம்: இதை நீங்கள் கட்டப் போகிறீர்களா? அல்லது அதைச் செய்யப் போகிறீர்களா? அல்லது வேறு ஏதாவது காரியம் செய்யப்போகிறீர்களா? உங்கள் ஸ்தாபனத்திற்கு இன்னும் எத்தனை அதிகமானவைகளை கொண்டு சேர்க்கப்போகிறீர்கள் என்ற பாரம். கர்த்தருடைய வார்த்தையின் மீதான பாரத்திற்கு பதிலாக; ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே பார்ப்பார்கள், வேறெதையும் அல்ல. ஆனால், நீங்கள் அதை இப்போது ஒரு புது மாட்டு வண்டியில் வைத்துள்ளீர்கள். பாருங்கள்! மேலும் அவர்கள் இதை உலக சபையின் ஆலோசனை சங்கம்(Ecumenical Council] மேல் வைத் திருக்கிறார்கள், அதற்கு தோளும் கூட கொடுத்திருக்கின்றனர். நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை, தேவன் இப்போது எனக்கு உதவி செய்வாராக! நான் உங்களுக்கு உண்மையைத் தான் சொல்கிறேன். 234. இப்போது, கொள்கைகளினாலும், சர்வ சபைகளின் ஐக்கியங்களின் செல்வாக்கினாலும் அந்த காலத்திற்கான வார்த்தை, உண்மையான வார்த்தை புறக்கணிக்கப்பட்டது. ஏனென்றால் அவர்கள் அதிகமான உணர்ச்சிப்பெருக்கு கொண்டிருந்தனர். ஆனால் தாவீது, அபிஷேகிக்கப்பட்ட இராஜா... அவன் இராஜாவாக இருந்தான், ஆனால் அவன் அபிஷேகம் செய்யப்பட்ட இராஜா. “நான் ஒரு ஊழியக்காரன், அபிஷேகிக்கப்பட்டவன்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் ஊழியக்காரனாகவே இருங்கள். தீர்க்கதரிசியாக முயற்சிக்காதீர்கள். பாருங்கள்! நீங்கள் ஒரு சுவிசேஷகனாக இருந்தால், சுவிசேஷகனாவே இருங்கள். 235. உசியாவை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்! ஏசா யாவின் நாட்களில், இளமையான இராஜா... இளமையான தீர்க்கதரிசி. உசியா ஒரு பெரிய மனிதன், அபிஷேகிக்கப்பட்ட மனிதன், தேவன் அவனை ஆசிர்வதித்தார். தன் சொந்த நலனுக்காக தெய்வீக காரியத்தை உபயோகிப்பவன் (blessed himself). ஆமாம்... ஒருமுறை, அதன் பேரில் இங்கே நான் உங்களிடம் பிரசங்கித்தேன். மேலும் ஒரு நாள், அவன் அதிகமாக தன்னை உயர்த்திக்கொண்டு, ஆசாரியனின் அலுவலை தானே எடுத்துக்கொள்ள முடியும் என்று நினைத்தான். அவன் அக்கினியை எடுத்து கர்த்தருக்கு முன்பாக உள்ளே சென்றான். அந்த ஆசாரியர்கள் அவனிடம், “அதைச் செய்யவேண்டாம் உசியா!” என்று கூறினர். ஆனால் அவன் பெருமை கொண்டான். தீர்க்க தரிசி அவனிடம் எதையுமே சொல்ல முடியவில்லை. ஆசா ரியர்களுக்கு அவர்களுடைய முறைமைத் தெரிந்திருந்தது. அவர்கள், அவர்களது முறைமைகளை கடை பிடித்திருந்தனர். அவர், “அது உன்னுடைய முறைமை அல்ல, உசியா. அதைச் செய்யாதே!" என்றனர். 236. நல்லது, அவன் அவர்களை, “பேசாதீர்கள்!” என்று கூறி அக்கினியுடன் பலிபீடத்திற்குள் செல்லும் படியாக, ஆசாரியனின் வேலையை எடுத்துக் கொண்டான். அவன் ஒரு அபிஷேகிக்கப்பட்ட இராஜா, ஆசாரியன் அல்ல. அந்த ஆசாரியர்கள் அவனிடம் இதைச் சொல்ல முயற்சித்தனர்: “நீர் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ள, ஒரு மகத்தான இராஜா, தேவன் எங்களை உம்மூலமாக ஆசீர்வதித்திருக்கிறார், ஆனால் நீர் ஒரு இராஜாவாயிருக்கிறீர், ஆசாரியன் அல்ல.” 237. மேலும் போதகர்களாகிய நீங்கள் ஒருபோதும் ஒரு தீர்க்கதரிசியிடம் என்ன செய்யவேண்டும் என்று சொல்லக் கூடாது, அல்லது சுவிசேஷகர்கள் போதகர்களிடம் சொல்லக்கூடாது. பாருங்கள், அது பரிபூரணமாக அடையாளம் காணப்பட்டிருக்குமானால், ஒவ்வொருவரும் அவரவருடைய அலுவலை உடையவர்களாயிருக்கிறார்கள். 238. ஆகவே, அவன் அக்கினியுடன் உள்ளே சென்று, குஷ்டரோகத்தால் தாக்கப்பட்டு மரித்துப் போனான். 239. இப்போது, இங்கே தாவீது, இராஜா. தாவீது இங்கே அதே காரியத்தைச் செய்ய முயற்சிக்கிறான். அவன் அதை தன்மேல் எடுத்துக் கொண்டான். “நல்லது, அது அருமையாயுள்ளது. நாம் சென்றாக வேண்டும்." சுற்றிலும் இருந்த ஜனங்களைப் பார்த்தான், “தலைவரே, நீர் என்ன கூறுகிறீர்? உம்மிடம் பத்தாயிரம் பேர் உள்ளனரே!” 240. “தேவனுக்கு மகிமை, தாவீதே, நான் ஆவியை உணர்கிறேன்” ஓ, அவன் உணர்ந்தான்! அவன் அதை உணர்ந்தான். “தாவீதே? நீர் என்ன நினைக்கிறீர்? நீரும் அதை உணருகிறீரா?” 241. “தேவனுக்கு மகிமை, அது என் மீதும் முழுவதுமாய் உள்ளது! நாம் இது சரியா என்று சோதித்துப் பார்க் கலாம், நாம் பார்க்கலாம். பெட்டி யார் வசம் உள்ளது?” 242. “நம்மிடம்தான் உள்ளது. நம்மை சார்ந்தவர்களிடம் உள்ளது.” 243. "யாரிடம் ஆலோசிக்க வேண்டும்?” நிச்சயமாக, உடன்படிக்கைப் பெட்டியைத்தான். பெலிஸ்தியருக்குப் பதிலாக அந்த நிலம் இஸ்ரவேலுக்கு உரியதாயிருந்ததைப் போலவே, அதேக் காரியம்தான். அது சரியே. அவர்கள் அதை சார்ந்தவர்கள் தான். “மேலும், நானும்கூட அந்த அபிஷேகத்தை உணர்வது போல..." 244. நூற்றுக்கு அதிபதிகள், சபையார் அனைவரும், “தேவனுக்கு மகிமை!”, என்றனர். அவர்கள் கரகோஷம் செய்தனர், அவர்கள் ஆரவாரமிட்டனர், மேலும் அவர்கள் நடனமாடினர், மேலும் கீழும் குதித்தனர். 245. அவர்களிடம் ஆவி இருந்தது. ஆனால் பிதாவானவர் எதை சிந்தித்துக் கொண்டிருந்தார் என்பதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “நான் எவ்வாறு நாத்தான் தீர்க்கதரிசியை அங்கே அனுப்பினேன்! என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும், தாவீதுக்கும் அது தெரியும். ஆனால், இப்பொழுதோ அவன் முழுவதும் உற்சாகமூண்டவனாய், கட்டுப்பாட்டு எல்லையை மீறி அடியெடுத்து வைத்து, மேலும் இதைச் செய்யும்படி சென்றான்.” 246. சரி, கவனியுங்கள். “தோள்களின் மீது சுமந்து செல்வது” என்பது தான் தேவனுடைய அசலான திட்டம். கட்டாயமாய் செய்யப்பட வேண்டிய ஐந்து கட்டாய காரியங்கள் (five must's) அங்கே உள்ளன. இதை நீங்கள் குறித்துக் கொள்ளும்படி விரும்புகிறேன். ஒருவேளை நீங்கள்.. நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். இப்போது இது இருபது நிமிடங்கள், பத்து மணி கழிந்து இருபது மற்றும் கூட சில நிமிடங்கள் ஆகியுள்ளது ஆகவே, கூடுமானால் பதினொரு மணிக்கு முடிக்க முயற்சி செய்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம், விரைவாகச் செல்கிறேன். தேவனுக்கு சேவை செய்வதில் ஒரு மனிதன் எவ்வளவு நேர்மையானவனாக இருந்தாலும், எவ்வளவு நேர்மையாய் செய்தாலும், எவ்வளவு அபிஷேகம் நிறைந்த வனாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒரு பிரஸ்பிட்டேரியனாகவோ, பாப்டிஸ்ட்டாகவோ, பெந்தெகொஸ்தேயினராகவோ இருந்தாலும்; நீ ஒரு பிஷப்பாகவோ, டீக்கனாகவோ, அல்லது ஒரு போதகராகவோ, சுவிசேஷகராகவோ, தீர்க்கதரிசியாகவோ, நீ எதுவாக இருந்தாலும் சரி; அங்கே அந்த ஐந்து கட்டாயங்களை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். அங்கே எவ்வளவு அபிஷேகம் காணப்பட்டாலும், அது எவ்வளவு அருமையாய் தோன்றினாலும், எவ்வளவாய் ஜனங்கள் சத்தமிட்டாலும், ஆவியால் நடப் பிக்கக்கூடிய அனைத்தும் இருந்தாலும், அங்கே கட்டாயம் என்ற ஒன்று உண்டு. 247. இப்போது, என் சகோதரர்களே, உங்கள் தாள்களைத் தயாராக வைத்துக் கொள்ளுகிற வேளையிலே, அது ஏன் என்று நீங்கள் இப்போது புரிந்துக் கொள்கிறீர்களா? இப்போது, ஞாபகம்கொள்ளுங்கள், இப்போது, அந்நிய பாஷையில் பேசுவதை நான் நம்புவதில்லை என்று உங்கள் மத்தியில் கற்பிக்கப்பட்டும், நீங்களனைவரும் (பாருங்கள், நான் தேசம் அனைத்திற்கும் [இணைப்பின் வாயிலாக] பேசிக் கொண்டிருக்கிறேன்) அப்படியாக நினைத்துக் கொண்டும் இருந்தீர்கள் என்பதை நினைவு கூருங்கள். அந்நிய பாஷையில் பேசுவதை நான் நம்புகிறேன். ஆனால், நீங்கள் அந்நிய பாஷையில் பேசியும் கூட பரிசுத்த ஆவி இல்லாதவர்களாய் இருக்கலாம். 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில், "மனுஷர் மற்றும் தூதர்கள் பேசும் பாஷைகளில் நான் பேசினாலும், இன்னும் நான் ஒன்றுமில்லை” என்கிறது. பாருங்கள்? அது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாயிருக்கிறது, உனக்குள் இருக்கும் ஆத்துமாவோடு அது செய்வதற்கு அதற்கு ஒன்றுமில்லை. நீ அந்நியபாஷைகளில் பேசிக்கொண்டே, வார்த்தையை மறுதலிக்கவும் செய்யலாம். அப்படி நடந்ததை நான் கண்டிருக்கிறேன், நீங்களும் கூட அதை காண்கிறீர்கள். பாருங்கள்! ஒரு ஸ்திரீ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கலாம், மேலும்....பாருங்கள்! அவர்கள் எல்லாவற்றையும் செய்யலாம். அவர்கள் தலைமயிரை கத்தரித்துக் கொள்கின்றனர், அதன் பின்பும் கூச்சலிட்டு அந்நியபாஷைகளில் பேசுகிறார்கள், மற்றும் எல்லாக் காரியங்களும் செய்கின்றனர்... ம்... ஹும்... அது மிகச்சரியாக உள்ளது. நீங்கள் வார்த்தையின் சத்தியத்தின் வரிசையில் சீர்பொருந்த வேண்டும். 248. கவனிக்கவும்! ஒரு மனிதன் எவ்வளவு நேர்மையானவனாக இருந்தாலும், அவன் எவ்வளவு மகத்துவமாக தேவனால் உபயோகிக்கப்பட்டாலும், அவன் என்னவா யிருந்தாலும், அவன் இப்படியாக இருக்க வேண்டும்: கண்டிப்பாக.... அவன் பேசுகிற காரியம் வேதத்தில் அந்த மணி வேளையோடு பொருந்த வேண்டும். யாரோ ஒருவர் கூறுகிறார், “நல்லது, அந்நாளில் மோசே” மோசே என்ன செய்தானென்று எனக்கு தெரியும், ஆனால் இன்று தேவன் செய்வது அதுவல்ல. "நல்லது, அந்நாட்களில், முப்பது வருடங்களுக்கு முன்னர், லூத்தர் கூறினார்... அதெல்லாம் சரிதான், ஆனால் இன்று அவர் செய்வது அதுவல்ல. "நல்லது, நாற்பது வருடங்களுக்கு முன்னர் பெந்தெகொஸ்தே ஊற்றப்பட்டது.” ஆனால், இன்று அவர் செய்வது அதுவல்ல. பாருங்கள்? அது கட்டாயமாக காலத்திற்கு பொருந்த வேண்டும். 249. அது கட்டாயமாக வேதாகமத்தின்படியாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கட்டாயமாக அந்த காலத்துக்கு உரியதாயிருக்க வேண்டும். மூன்றாவதாக, இப்படியாக இருக்கும் என்று தேவனுடைய வார்த்தை எப்படி கூறியுள்ளதோ, கட்டாயமாக அந்த விதமாகத் தான் அது இருக்க வேண்டும். 250. மேலும் நீங்கள் “தேவனுக்கு மகிமை! பரிசுத்த ஆவி என்மேல் விழுந்தது. அல்லேலூயா! பெந்தெகொஸ்தே நாளில் அது நடந்தது போலவே” என்று சொல்ல லாம். ஆனால், இன்றைக்கோ அது வேறுவிதமாக இருக்கலாம். அது தாவீதின் மீதும் விழுந்தது. இல்லையா? நிச்சயமாக. அது நடந்தது. உசியா மீதும் விழுந்தது, ஆனால் அது தவறாயிருந்தது! பாருங்கள், நீங்கள் இப்போது, அதைக் காட்டிலும் இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும். இப்போது, புண்படாதீர்கள், சற்று பயபக்தியாயிருங்கள். 251. மேலும் கவனியுங்கள்! அது கட்டாயமாக ஒரு மனிதனிடத்திற்கு, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு மனிதனிடம் வரவேண்டும். ஸ்தாபனத்தின் தெரிந்து கொள்ளுதல் அல்ல, ஜனங்களின் தெரிந்து கொள்ளுதல் அல்ல, ஆனால் தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின் படிதான். மேலும், அது தேவனிடமிருந்து வரக்கூடிய ஒரு செய்தியாகவோ, தேவனிடமிருந்து வரக்கூடிய மகத்தான வெளிப்பாட்டின் செய்தியாகவோ இருக்குமானால், அது கண்டிப்பாக அவருடைய தீர்க்கதரிசியிடம் வர வேண்டும். இப்போது, உங்களுக்கு அதற்கான வேதவசனம் வேண்டுமானால், அது ஆமோஸ் 3:7. பாருங்கள்! இப்போது, அது கட்டாயம். 252. அங்கே ஐந்து காரியங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்: அது அந்த காலத்திற்கு உரியதாய் இருக்க வேண்டும். அது தேவன் நடக்கும் என்று உரைத்த அந்த நேரமாய் இருக்கவேண்டும். அது தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அது அந்த காலத்திற்கேற்ற தேவனுடைய நேரத்தில் இருக்க வேண்டும். பாருங்கள், மேலும் அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் படி இருக்கவேண்டும். 253. தேவனுடைய வார்த்தையை வியாக்கியானம் செய்வதற்கு, நம்மில் எவரும் தேவனுக்கு தேவையில்லை. தேவனே, அவருடைய சொந்த வியாக்கியானி. அவருக்கு நமது இறையியல் பாடங்கள் தேவையில்லை. நம்முடைய ஞானம் அவருக்குத் தேவையில்லை, அது முட்டாள்தனம். பாருங்கள்? ஏவாளுக்கு அது இருந்தது. உஹ்-ஊஹ், அவளுடைய ஞானத்தினால், வியாக்கியானத்தை தவற விட்டுவிட்டாள். 254. “அட்டா, அந்த மனிதன் ஒரு சாமர்த்தியசாலி” எனலாம். நல்லது. அதனால், ஒரு காரியமுமில்லை. நிச்சயமாக. ஆகாப் ஒரு திறமைசாலியான மனிதன், பெல்தெஷாத்சார் ஒரு திறமைசாலியான மனிதன். சாத்தான் மிகவும் வஞ்சகனும், கொடூரமும், தந்திரமும் உடையவன், உங்களில் எவருமே அவனோடு தாக்குபிடிக்க முடியாது. ஒருவராலும் முடியாது. 255. நான் யாரையும் சார்ந்து இல்லை. எவரையும்... புத்திசாலித்தனத்தையும் அல்ல, தேவனை மாத்திரமே சார்ந்திருக்கிறேன். பாருங்கள்! தேவன் என்னவாக இருக்கிறார்? அவர் வார்த்தையாயிருக்கிறார். பிறகு தேவன் எவ்வாறு அவருடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறார்? இப்போது கூர்ந்து கவனியுங்கள், இவைகளை தவறவிடாதீர்கள். எவ்வாறு தேவன் அவரது சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார்? எப்படியென்றால், அதை நிறைவேறச் செய்வதின் மூலமாக, வெறும் ஒரு வார்த்தையை மாத்திரமல்ல, அந்தக் காலத்திற்குறிய அனைத்தையும் நிறை வேறச் செய்வதன் மூலம். 256. "நோவாவே, நீ வெளியே சென்று பிரசங்கி, நீ ஏவப்பட்டவனாயிருக்கிறாய்” என்று சொல்வதல்ல. ஆனால், “ஒரு பேழையை உண்டாக்கு, அதில் கதவுகளை செய்து, இதை இவ்விதமாகவும், அதை அவ்விதமாகவும் பொருத்து.” அவன் கதவை கீழே வைப்பதற்கு பதிலாக அதை மேலே வைத்தால் என்னவாகும்? அவன் ஜன்னலை கீழே வைத்துவிட்டு, கதவை மேலே வைத்தால் என்னவாகும்? பாருங்கள்? அது அந்த மணிவேளைக்கு ஏற்ற தாய் அது அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் சரியாக தேவன் அதற்கான வேளையில் அதை உபயோகப்படுத்தப் போகிறார். அது அந்தவிதமாகவே கட்டாயம் இருக்க வேண்டும், மேலும் அது ஏவுதலின்படி வர வேண்டும். 257. நான் ஒருமுறை ஒரு மனிதன் சொன்னதை கேட்டேன், அவன் சொன்னான், “அந்த மனிதன் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறார் என்று நம்புகிறேன், அது நல்லது என்று நம்புகிறேன். ஆனால் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து கொண்டு... அவர் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நம்புகிறேன். ஆனால், ஒரு உபாத்தியாயராக, “இயேசு மாத்திரம் குழுவை சார்ந்தவராக இருக்கிறார்.” என்ன ஒரு... நீங்கள் அவனை எந்த வகையான மனிதன் என்று அழைப்பீர்கள்? தான் என்ன பேசுகிறோம் என்பதை அறியாத மனிதனா யிருக்கிறான். 258. “தீர்க்கதரிசி” என்னும் வார்த்தைக்கு, “தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துபவர்” என்பது பொருள். வியாக்கியானம் அவரிடம் மாத்திரமே வரும். ஆகவே தான், இன்று தீர்க்கதரிசி எலியாவின் ரூபத்தில் நம்மிடையே அனுப்பப்பட வேண்டிய இந்த மகத்தான மனிதன் நமக்கு தேவையாயிருக்கிறார், ஏனென்றால் அது நமக்கு அளிக்கப்பட்ட ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய வெளிப்படுத்த லாயிருக்கும். அது அந்த நாளுக்கான, அந்த மணி வேளைக்கான, அந்த காலத்திற்கான தேவனுடைய வாக்குத்தத்தமாயிருப்பதை நமக்கு காண்பிக்கிறதாயிருக்கிறது. மேலும் ஞாபகம் கொள்ளுங்கள். அவர் எதிர்த்துப் பேசப்படுவார், எப்பொழுதுமே அப்படியிருந்தது, எப்பொழு துமே அப்படியாயிருக்கும். எப்படி பதரானது தன்னை வெளியே இழுத்துக் கொள்வதைப்போல, புறக்கணிக்கப் பட்டிருப்பார். முதலில் அவர் ஏற்றுக் கொள்ளப்படுவார், ஏனென்றால் பதரானது கோதுமை மணியை, சூரியனை எதிர்நோக்கி புறப்படும்வரை மாத்திரம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும். பெந்தெகொஸ்தேயினர் தாங்கள் சிதறடிக் கப்படும்வரை, திறந்த வாசலைக் கொடுத்து செய்தியை ஆதரித்தனர். அதன் பிறகு அந்த பதரானது கோதுமை மணியைவிட்டு தன்னை வெளியே இழுத்துக் கொள்ளும், பின்னர் கோதுமை மணியானது முதிர்ச்சியடையும்படியாய் சூரியனின் பிரசன்னத்தில் தரித்திருக்கும். 259. எந்த ஸ்தாபனமும் இனி இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கேயிருக்கும் சகோதரன் ஜாக் (Jack] ஒரு வரலாற்றாளன், உங்களில் அநேகர் அப்படியாய் இருக்கிறீர்கள். எழுப்புதல் துவங்கி மூன்று வருடங்கள் கழித்து ஸ்தாபனமாகாத எந்த எழுப்புதலும் இருந்ததில்லை. அது சரியா? இந்த கடைசி நாட்களில், தேவனுடைய அற்புதமான இந்த மகத்தான கடைசி அசைவு, இருபது வருடங்களாய் தொடர்கிறது. அது ஸ்தாபனங்களிலிருந்து பத்து லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளது, அது நாளுக்கு நாள் இன்னுமாய் விலகி சென்று கொண்டிருக்கிறது; பதரானது தன்னை வெளியே இழுத்து கொண்டு, அதனோடு எந்த ஒத்துழைப்பையும், எதையுமே வைத்துக் கொள்வதில்லை. பாருங்கள்? அது எப்போதுமே அதிலிருந்து விலகி தன்னை வெளியே இழுத்துக் கொள்கிறது. அங்கே இனி வேறு எதுவும் இருக்கப் போவதில்லை, இப்பொழுது அது ஒரு கோதுமை மணி மாத்திரமே. ஆனால் நாமோ அதிகமாகப் பச்சையாக இருக்கிறோம். ஹ்-ஊஹ. அது சரி. பக்குவமடைய, சூரியனுடைய பிரசன்னத்தில் தரிக்க வேண்டும். அவ்வளவுதான் காரியம். பச்சை அதிகமாய் உள்ளது. நம்மிடம் உத்தமம் இல்லை, நம்மிடம் பரிசுத்தம் இல்லை, ஜீவிக்கிற தேவ ஆவியானவர் தம்முடைய வார்த்தையில் அசைவாடி, காரியங்களை நமக்கு காண்பிப்பதை அறிந்துகொள்ள நாம் பெற்றிருக்க வேண்டியதான காரியங்கள் நம்மிடம் இல்லை. 260. நம்மிடையே கள்ள ஆள்மாறாட்டக்காரர்கள் எழுந்துள்ளார்கள். எதைச் செய்ய அது உள்ளது? வஞ்சிப் பதற்காக. வேதாகமம் அப்படிச் செய்வார்கள் என்கிறது. “யம்பிரேயும், யந்நேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல, கடைசி நாட்களிலும் இவர்கள் எதிர்த்து நிற்பார்கள்.” பாருங்கள்? அவர்களும் அதையே செய்வார்கள், சரியாக இங்கேயே வந்து, அதைப் போலவே ஆள்மாறாட்டம் செய்வார்கள். பாருங்கள்? ஜாக்கிரதையாக இருங்கள்! வேதாக மத்தின் உபதேசத்தை கவனியுங்கள். அடையாளங்கள் பின்தொடரும் செய்தியை கவனியுங்கள்! இன்னும் பழைய பள்ளியின் அதே செய்திகளா? அதை மறந்துவிடுங்கள்! 261. தேவன் தமது ஜனங்களின் கவனத்தை ஈர்ப்பதற் காக அற்புதங்களையும், அடையாளங்களையும் அனுப் பினார். இயேசு வந்தபோது, எப்படி வெறுமனே வியாதியஸ்தர்களை சுகமாக்குதல் மற்றும் அதுபோன்ற காரியங்களை செய்தாரோ, அதுபோலவே தீர்க்கதரிசிகளும் செய்தனர். அவர்கள், “ஓ! மகிமை! அவர் வருகிறார், அவர் ஒரு பரிசேயராக வரப்போகிறார். ஒரு சதுசேயராக வரப்போகிறார்” என்று நினைத்தனர். 262. ஆனால், அவர் சொன்னார்: “சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள், அவனுடைய கிரியை களையே நீங்கள் செய்கிறீர்கள்” மேலும், “மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தை பானம் பண்ணாதவன் எவனோ, அவனுக்குள் நித்தியஜீவன் இல்லை” என்றார். அதை அவர் விளக்கவில்லை. அதை அவர் விளக்கவேண்டிய அவசியமில்லை. அல்லேலூயா! அது வேறொரு காலத்திற்கானது. உஹ்-ஹூ. அவர் எதைச் சொல்ல வேண்டுமோ, அதை மட்டுமே சொன்னார். “பிதாவுக்கு எது பிரியமாயிருக்கிறதோ அதையே நான் செய்வேன். அது அவரது வார்த்தையை கடைபிடிப்பது. இதை நான் செய்யவில்லையெனில், என் ஜீவியமும், என் கிரியைகளும் நான் கடைபிடிக்க வேண்டிய இந்த வார்த்தை யோடு ஒத்துப் போகவில்லையென்றால், என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை, நான் அவருடையவனல்ல; ஆனால் ஒத்துப் போகுமென்றால், என்னை நீங்கள் விசுவாசிக்க முடியவில்லையென்றாலும், அந்த கிரியைகளை விசுவாசியுங்கள்” என்றார். 263. கவனியுங்கள், இப்பொழுது, கண்டிப்பாய் செய்யப்பட வேண்டிய இந்த கட்டாயங்கள். 264. இப்போது, பாருங்கள்! தேவன், அவர்களுக்கு தம்முடைய அளிக்கப்படும் வழியில், “தம்முடைய அருளப் பட்ட பாதையில் (His provided way) அவர்களுக்கு காரியத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் அதை ஏவுதலி னால் வெளிப்படுத்தினார். ஆனால் அது தவறான வழி முறையில் இருந்தது. பாருங்கள். ஏவுதல் அருமையாகத் தான் தென்படும், ஆனால் அது தவறான வழிமுறையில் இருந்தால், அது தவறான இலக்கை நோக்கி வழி நடத்தப் படும். உதாரணத்திற்காக, நீங்கள் ஒரு துப்பாக்கிக் குண்டை எடுத்து, இலக்கை நோக்கி நேராக சுட்டால், அது இலக்கை நோக்கியே நேராக செல்லுகிறது. ஆனால் ஒரு சிறிய விசையான காற்று கூட அதன் துல்லியத்தை விட்டு விலகச் செய்துவிடும். இப்போது, உங்களுடைய வாகனத்தில், மணிக்கு அறுபது, எழுபது மைல் வேகத்தில் சாலையில் செல்லும்போது, காற்றின் வேகத்தால் நீங்கள் நிலை குலைந்தாலும், காற்றின் ஊதல் உங்களை ஊதித்தள்ளுமேயானால், உங்கள் சக்கரங்களை திருப்பி நேராக்கி, மீண்டும் வாகனத்தை சாலையின் மேல் கொண்டு வரலாம். ஆனால் நீங்கள் ஒரு துப்பாக்கி தோட்டாவை அவ்வாறு செய்ய முடியாது; அதன் சக்கரங்களை நேராக்க அங்கே எதுவுமே இல்லை, அது இலக்கை தவற விடுகிறது. பாருங்கள், தான் ஆரம்பித்த பாதையிலேயே அது பயணிக்க வேண்டும். 265. ஆகவே, தேவனுடைய வார்த்தையானது கட்டாயமாக அதனுடைய மூலப் பாதையில் பயணம் செய்ய வேண்டும். காற்றின் சிறிய ஊதல்கூட அதை திசை விலகச் செய்யாது; சிறிய ஒரு ஸ்தாபனமோ, அல்லது எதுவுமே அதை அதை திசை விலகச் செய்யாது; சிறிய துன் புறுத்தல்கள் கூட அதை திசை விலகச் செய்ய முடியாது; அது இலக்கை நோக்கி துல்லியமாக செலுத்தப்பட்டு விட்டது! சரியாக அது இலக்கை அடிக்கத்தான் போகிறது. அது அதன் இலக்கை அடிக்கும்போது தேவன் அதை நிரூபணம் செய்வார்: “துல்லியமான வெற்றி!” (“Bulls Eye!") உஹ்-ஊஹ். அவர் என்ன சொன்னாரோ, அதைச் மிகச் சரியாக செய்வார். வேதாகமத்தில் அது இவ்வாறாக உள்ளது, “கர்த்தர் உரைக்கிறதாவது அது நிறைவேறும்! அது இங்கேதான் உள்ளது. பாருங்கள்! அது தான் காரியம். 266. இப்போது, தேவன் தம்முடைய அளிக்கப்பட்ட பாதையில் அதை வெளிப்படுத்தவில்லை ஆகவே அவர்கள், அவருடைய வார்த்தைக்கு அப்பால் அதைச் செய்யவிருந்தனர். மேலும் காலத்திற்கு பொருந்தாத அதைச் செய்யவிருந்தனர், சரியாக இப்பொழுது இவர்கள் செய்து கொண்டிருப்பது போல. மனிதர்கள், எவ்வளவுதான் நேர்மையாக இருந்த போதிலும், தேவனால அருளப்பட்ட பாதைக்கு அப்பால் அவருக்கு ஒரு சேவை செய்ய முயற்சி செய்யும்போது, அதை அவர்கள் எப்பொழுதுமே குழப்பி விடுகின்றனர். பிலேயாமைப் போல, தான் தேவனுக்கு சேவை செய்வதாக பிலேயாம் நினைத்தான். 267. தேவன் பொய்யுரைக்கிறார் என்று நீங்கள் எண்ணு கிறீர்களா? தேவன் எப்பொழுதாவது தமது சிந்தையை மாற்றிக் கொள்பவரா? ஆனால், தேவன் அவ்வாறு செய்தது போலத்தான் ஜனங்கள் இன்று நடந்துக் கொள்கிறார் கள். தேவன், ஸ்திரீகள் தங்கள் தலைமயிரை வெட்டக் கூடாது என்று சொல்லும்போது அவர்களோ, “நாங்கள் வெட்டிக் கொள்ளலாம், டாக்டர் இன்னின்னார் வெட்டிக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். மேலும் சகோதரர் இன்னின்னார், நீங்கள் வெறுமனே மிகவும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்' என்று கூறிவிட்டார்” என்கிறார்கள். உஹ்-ஊஹ், உஹ்-ஊஹ். பாருங்கள்! 268. “நல்லது, இது சம்பவிக்க வாய்ப்புள்ளதா? இது சம்பவிக்குமா?” 269. “ஆமாம், உஹ்-ஊஹ, இன்னின்னார் அவ்வாறு கூறியிருக்கிறார்கள்.” 270. தேவன் தமது சிந்தையை மாற்றுவதில்லை. 271. பிலேயாம் ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? வேதாகமம் அப்படித்தான் சொல்கிறது. அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். பாலாக் அவனிடம் வந்து, “அங்கே சென்று, அந்த ஜனங்களை சபியும். அவர்கள் பூமியின் விசாலத்தை மூடியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஸ்தாபனமாகக்கூட இல்லை, ஒரு தேச மாக இல்லை, வெறுமனே சிதறப்பட்ட கூட்டமாக இருக்கிறார்கள்; நாமே இந்த பூமியின் பிரமுகர்களாக இருக்கிறோம். இப்போது நீர் அங்கே போய், அந்த ஜனங்களை சபியும், நான் அதற்காக கிரயத்தை தருகிறேன்” என்று சொன்னான். 272. மேலும் ஒரு தீர்க்கதரிசி சரியாக எதைச் செய்ய வேண்டுமோ, அதை பிலேயாம் செய்தான். அவன் “நான் போக மாட்டேன். நீ இங்கேயே இரவு முழுவதும் காத்திரு. தேவன் என்ன செய்ய சொல்கிறார் என்று நான் பார்க் கிறேன்” என்றான். 273. ஆகவே அவன் உள்ளே சென்று, “கர்த்தாவே, சில மனிதர்கள் என்னோடு இங்கே வந்து, கீழே இருக்கும் இன்னொரு ஜனங்களிடம் போய், அவர்களை சபிக்கும்படி என்னை கேட்கிறார்கள். இதைக்குறித்து நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டான். 274. கர்த்தர் சொன்னார்; “நீ போகவேண்டாம். அவர்கள் என்னுடைய ஜனங்கள்!”. 275. பிலேயாம் வெளியே சென்று, “நீங்கள் உங்கள் வீட்டிற்கு திரும்பிப் போங்கள். நான் உங்களோடு வரக் கூடாது, அதைச் செய்யக்கூடாது தேவன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்” என்றான். இப்போது, தேவனுடைய மூல வார்த்தையானது, “போகாதே!" என்பதாகும். 276. நல்லது. அவர்கள் திரும்பிச் சென்று, “உமக்கு தெரியுமே, உம்முடைய பிஷப் செவிகொடுக்க மாட்டான்” என்று கூறினர். 277. “நல்லது” இராஜா சொன்னான்: “நாம் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனுக்கு சிறிது பணம் தேவை, அது அவனை இணங்கச் செய்யும் என்று நம்புகிறேன். அல்லது நான் ஒருவேளை அவனுக்கு மாகாண சபை மூப்பர் பதவியைக் கூட கொடுக்கலாம், அல்லது நான் பெரியக் காரியங்களை அவன் செய்யும்படி ஏதாவது செய்வேன். நான் அவனை ஒரு வேளை பிஷப் ஆகும்படிச் செய்யலாம். நான் என்ன செய்வேன் என்பதை நீங்கள் கணிக்க முடியாது. இப்பொழுது நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். எப்படியாயினும் அவனை இணங்கச் செய்ய உங்களுக்குத் போதிய அளவு படிப்பறிவு இல்லை; எங்கே நிதானமாக பேச வேண்டும், எங்கே ஆவேசமாக நடக்க வேண்டும் என்பதெல்லாம் உங்களிடம் சரியான விதத்தில் இல்லை. அவன் உங்களுக்கு செவி கொடுக்க மாட்டான். நாம் முக்கிய பிரமுகர்களை, மெய்யாகவே கல்வி அறிவு கொண்ட ஒரு குழுவை அங்கு அனுப்புவோம்” என்று சொன்னான். 278. அவர்கள் அங்கே சென்று, “டாக்டர் பிலேயாம், டாக்டர் பிலேயாம், உங்களுக்கு வாழ்த்துக்கள். ராஜாவிடமிருந்து உங்களுக்கு வணக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்றனர். 279. “காலை வணக்கம் சகோதரர்களே”பாருங்கள்? 280. இப்போது, “டாக்டர் பிலேயாம்.." மேலும், ஓ, அந்த வார்த்தைஜாலங்கள் எப்படியாய் பிரவாகித்தது! அவன், “இப்போது, ராஜா உம்மை உயர்த்தப் போவ தாகவும், மேலும் உமக்கு சிறந்த கௌவுரவத்தை அளிக்கப் போவதாகவும் சொல்லியிருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா, இந்தக் காரியம் செய்ய, அவர்கள் உங்களுக்கு இவ்வளவு தான் பணம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் ராஜா அதின் மூன்று மடங்கு, நான்கு மடங்கு தருவதாக சொல்கிறார். நீங்கள் வெறுமனே வந்து அதைப் பெற்றுக் கொண்டீர்களானால்” என்றான். பிறகு பிலேயாமின் கைகளில் அரிப்பு ஏற்பட்டுவிட்டது. அவன் முட்டாள்தனமான கருத்துக்களைக் கொண்டவனாய் தன்னுடைய மனதை போட்டு குழப்பினான். 281. இப்போது, ஞாபகம்கொள்ளுங்கள். அவன் அதைக் கொண்டு தேவனை கூப்பிட்டான். அபிஷேகம் பண்ணப் பட்ட ஒருவன், ஆனால் அவன் சரியாக, மூலத்திட்டத்திலிருந்து தேவனை அசைய செய்தான். அதையே தான் மிகச்சரியாக பெந்தெகொஸ்தேயினரும் செய்தனர்! பிரபலம் அடைவதற்காக ஒருத்துவமாகிய நீங்கள், திரித்துவமாகிய நீங்கள், பிரபலத்திற்காக வித்தியாசமாக உங்களை காண்பிக்க முயற்சித்து ஸ்தாபனமாக்கிக் கொண்டீர்கள், மரித்தும் போனீர்கள்! ஒருபோதும் நீங்கள் மீண்டும் எழும்பப் போவதில்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், நீங்கள் தேவனுடைய அசலானதில் கண்டிப்பாகத் தரித்திருக்க வேண்டும். அவர் உங்களை ஜனங்களாக்கும்படி அந்த ஐக்கியத்திலிருந்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தார். ஆனால் நீங்களோ உங்களை நிறுவிக் கொண்டு நீங்கள் வெளியே வந்த அதே... நிலைக்கு, நீங்கள் கக்கின அதே காரியத்திற்கு [மன்னிக்கவும்] மீண்டும் சென்று விட்டீர்கள். எந்த நிலையிலிருந்து வந்தீர்களோ அதே நிலைக்கு, “நாய் தான் கக்கினதை திரும்பவும் உண்பது போல, பன்றி தான் புரண்ட சேற்றிற்கு திரும்புவது போல” மன்னிக்கவும். நான் அப்படி கூறியதற்கு மன்னியுங்கள். இங்கே இந்த மேடைக்கு அது பொருத்தமானதல்ல. பாருங்கள்? வெறுமனே, நான் அதை மாம்சத்தில் சொல்லி விட்டேன். கவனியுங்கள். இப்போது... வாந்திபண்ணுவது, நான் அப்படித்தான் அர்த்தம் கொண்டேன். நான் அப்படித் தான் சொல்லியிருக்க வேண்டும். அந்த வார்த்தை எல்லாம் சரிதான். ஆனால் தவறாக பயன்படுத்தப் பட்டுவிட்டது. பாருங்கள்? சரியான வார்த்தைதான் உபயோகிக்கப்பட்டது, ஆனால் சற்று தவறாகச் சொல்லப்பட்டுவிட்டது, அவ்வளவு தான். அதாவது, “வாந்தி,” “நாய் தான் கக்கினதற்கு திரும் பியதுபோல.” 282. அசெம்பிளிஸ் ஆப் காட், பொது ஆலோசனை சங்கம் (General Council) முதலாவதாக பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தை அமைத்து, அதற்குள்ளாக தங்களை நிறுவிக் கொண்டதனிமித்தம், அவர்களால் வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருத்துவராகிய நீங்களும், அதையே செய்தீர்கள் என்று உங்களுக்கு தெரியாதா? பின்னர் எப்படி நீங்கள் “சர்ப்பத்தின் வித்து” “நித்திய பாதுகாப்பு” மற்றும் இதுபோன்று வரக்கூடிய மற்ற பிறச் செய்திகளை பெற்றுக் கொள்வீர்கள்? அதை உங்கள் கதவு களுக்குள் விடாத வண்ணம் நீங்கள் உங்களை மிகவும் இறுக்கமாக ஸ்தாபித்துக் கொண்டீர்கள், உஹ்-ஹூ, உஹ்-ஹூ, பிலேயாமும் அதே காரியத்தை செய்தான். ஆனால் தேவன் தம்முடைய சிந்தையை மாற்றவில்லை. 283. ஆகவே பிலேயாம் சென்று சொன்னான்: “கர்த்தாவே, இப்போது பாரும், எனக்கு, இப்போது உண்மையாகவே குறிப்பிடப்படும் ஒரு நபராக ஆவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. உமக்குத் தெரியும், நான் ஒரு ஒன்றுமற்றவனாக இருந்தேன். ஆனால் குறிப்பிடும்படி யான நபராவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதைக் குறித்து நீர் என்ன சொல்கிறீர், கர்த்தாவே?" இப்போது அதை அவன் ஒருபோதும் சொல்லியிருக்கக் கூடாது!. தேவன் என்ன செய்யச் சொன்னார் என்பதை அவன் சரியாக அறிந்திருந்தான்! 284. ஆகவே, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும், வேதாகமத்தின் பேரிலான இந்த விவாத சிக்கல்கள், அவைகள் இந்நாட்களில் இருக்க வேண்டிய வைகளே, அதைக் குறித்து செய்ய வேண்டியது என்னவென்றால், அதை ஏற்றுக் கொள்வதே! தேவன், “இது தான் சத்தியம்” என்று தெளிவாக நிரூபணம் செய்வதை நீங்கள் காணும்போது, அது தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்வதாகும், ஆனால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? மாட்டீர்கள். உங்கள் ஸ்தாபனம் அதைச் செய்ய உங்களை அனுமதிக்காது. 285. டூசானில் இருக்கும் அநேக ஊழியக்காரர்கள் இந்தக் காலை வேளையிலே இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சகோதரன் கில்மோர் [Gilmore] உங்களுக்கு எதிராக எனக்கு ஒன்றுமில்லை. சகோதரன் ப்ராக்(Brock), முதல் அசெம்பிளி (First Assembly) மற்றும் நட்புறவு சபை (Friendly Church). புருஷர்களாகிய நீங்கள், நான் அங்கே எல்லா நேரமும் இருந்திருக்கிறேன். நீங்கள் என்னை உள்ளே கூட விடமாட்டீர்கள். நான்.. நிச்சயமாக, உங்களால் முடியாது, உங்களால் கூடாது, நீங்கள் என்னவாயிருக்கிறீர்களோ, அந்த விதமாகவே இருக்கிறீர்கள். உங்களால் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் நீங்கள் ஸ்தாபனமாக்கிக் கொண்டீர்கள். மேலும் கவனி யுங்கள், ஊசா கொல்லப்பட்டதுப் போல. ஏனெனில், அவன் அந்த தவறான ஏவுதலின் கீழிருந்தான். அதைப் போலவே, அநேக, உண்மையான கிறிஸ்தவர்கள் அந்தப் பழைய, மரித்துப்போன ஸ்தாபனங்களில் இருந்து கொண்டு, தங்களுடைய அனுபவங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் உடன்படிக்கை பெட்டியின் மீது தங்கள் கைகளை வைக்கிறார்கள், அப்படிச் செய்வதற்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை. இப்போது நீங்கள் இதை விசுவாசிக்கலாம், அல்லது விசுவாசிக்காமலும் இருக்கலாம், அது உங்களைப் பொறுத்தது. தேவனே உங்கள் நியாதிபதி. தேவன் அவருடைய வார்த்தையை ஒருபோதும் திரும்பவும் எடுத்துக் கொள்வதில்லை. முதல்முறை அவர் என்ன சொல்கிறாரோ, ஒவ்வொரு முறையும் அதையே சொல்கிறார். 286. அவர் பிலேயாமிடம், "நீ போக வேண்டாம்” என்றார். 287. அதன் பிறகும், பிலேயாம் திரும்ப வந்து, “ஆனால் கர்த்தாவே, நான் போகலாமா?” என்று கேட்டான். 288. இப்போது பாருங்கள்! “போ” என்று தேவன் சொன்னார். இப்போது, போவதற்கு அவனுக்கு அனுமதி கொடுத்தார். தேவனுடைய அனுமதிக்கும் சித்தம் என்ற ஒன்று உண்டு, அது தேவனுடைய மூலச் சித்தம் இல்லை. அவன் எத்தகைய தொந்தரவுக்குள்ளானான் என்று பாருங்கள்? 289. மேலும், எந்த மனிதனாவது தேவனுடைய வார்த்தையின் மேல் கட்டாமல், அதற்கு புறம்பாக எதையாவது, ஸ்தாபனத்தையோ அல்லது எதையாகிலும் கட்டி எழுப்புவானென்றால், அது சரிந்து விழும் மணல் போல் விழுந்து போகும்! அது எதுவானாலும் மரிக்கவே செய்யும். ஏனெனில் தேவனுடைய வார்த்தையானது, ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் மணவாட்டியின் சரீரமாயிருக்கிறது. அனைத்தும் பாதங்களாகவோ, அல்லது கைகளாகவோ, அல்லது தொடையாகவோ, ஒரேகாரியமாக அது உங்களுக்கு இருக்காது. அவைகளெல்லாம் அதனதன் காலத்தில் வருவதாகும். 290. ஆனால் பெந்தெகொஸ்தேயாகிய நீங்கள் எல்லாவற்றையும் ஒரேகாரியமாக ஆக்கி விட்டீர்கள். ஆகவே புதிய வெளிப்பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடி யாது. அதன் காரணமாகத் தான், நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அங்கேயே தங்கி விடுகிறீர்கள், அதிலேயே மரித்தும் விடுகிறீர்கள். அதுவோ முன்னேறிச் செல்கிறது. [மிகவும் அதிகமாக உங்களை சோர்வடையச் செய்ய விரும்பவில்லை.] ஆனால், தேவன் தமது சிந்தையை மாற்றுவதில்லை. அவருடைய முதல் முடிவு மிகவும் சரியாக இருக்கிறது. ஆகவே, தேவன் தமது சிந்தையை மாற்றுவதில்லை. அவர் வெறுமனே உங்களுடைய விருப்பத்தின் பேரிலான சித்தத்தில் உங்களைப் போக அனுமதிக்கிறார். ஓரல் ராபர்ட்ஸ் சொல்வதுபோல, தேவன் ஒரு நல்ல தேவன்தான். ஆனால் அவர் பயங்கரமான தேவனும்கூட. 291. கவனியுங்கள். “தேவனுக்கு மகிமை உண்டாகட்டும், நான் அந்நிய பாஷைகளில் பேச விரும்புகிறேன்!” என்று நீங்கள் கூறுவதைப் போல. அதைச் செய்ய உங்களை அவர் அனுமதிப்பார். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அடையாளம் அதுவல்ல. 292. ஞாபகம்கொள்ளுங்கள், சந்தேகமுடைய தோமா என்ன சொன்னான்; அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான். அங்கே தான் நீங்களும் இருக்கிறீர்கள், அதே காரியம் தான். 293. இயேசு கூறினார், "தோமாவே, நீ அதைத்தான் அறிந்துக் கொள்ள விரும்பினாயென்றால், இதோ உனது கைகளை இங்கே போட்டுப் பார்த்துக் கொள்.” இப்போது, உங்களுக்கு தோமாவின் பாதைதான் வேண்டுமென்றால், நீங்கள் தொடர்ந்து போகலாம். ஆனால் அவர் என்ன சொன்னார்? “காணாதிருந்தும் விசுவாசிப்பவர்களுக்கு, எவ்வளவு பெரிதான பலன் கிடைக்கும்!” 294. கவனியுங்கள், கவனியுங்கள், இதைச் செய்ததினிமித்தம், அவன் ஒரு நேர்மையான மனிதனுடைய மரணத்திற்கு காரணமாகிறான். பெட்டியின் மீது கைகளை வைத் தான், அவன் அதைச் செய்திருக்கக் கூடாது. ஒரு நல்ல நேர்மையான மனிதன், அபிஷேகமும் மற்றெல்லாமும் சரியாகத்தான் உள்ளது என்று எண்ணினான். ஆனால் பெட்டியானது தவறான வழிமுறையில் சென்று கொண்டிருந்தது. “மாடுகள் இடறின” என்று வேதம் சொல்கிறது. லேவியர்கள் அல்ல. மாடுகள் இடறினதால் வண்டி சரிந்து கொண்டிருந்தது. அந்த நேர்மையான மனிதன், அன்பினால் நிரப்பப்பட்ட அவன், அந்தப் பெட்டியை விழாமல் பிடிக்க தன்னுடைய கையை பெட்டியின் மீது வைத்தான். லேவியரை தவிர எந்த ஒரு மனிதனும் பெட்டியை தொடக் கூடா திருந்ததனால், அவன் மரணத்தினால் அடிக்கப்பட்டான். பாருங்கள், தேவன் எப்படி தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார், எப்படி தம்முடைய வழிகளையும், தம்முடைய ஒழுங்கையும் காத்துக் கொள்கிறார்! உசியா குஷ்டரோகத்தால் அடிக்கப்பட்டான்; இங்கே தாவீது, ஒட்டு மொத்தமாக ஒரு மனிதனின் மரணத்திற்கு, ஒரு பேரழி விற்கு காரணமாகி விட்டான். இருவருமே ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருந்தும், தேவனுடைய வழியிலிருந்து விலகி வெளியே இருந்தனர். அது சரியா? அவன் மரித்தான். ஓ! அது தாவீதுக்கு மரண பயத்தை உண்டுபண்ணியது. அந்த ஸ்தலம்... சகோதரன் ஜாக் வாசித்த வண்ணம் பெயரிடப்பட்டது. பாருங்கள்! அவன் அங்கே அவனை குறித்து வைத்தான். 295. எத்தனை முறை ஸ்தாபனங்கள் இதே காரியத்தை நேர்மையான விசுவாசிகளுக்குச் செய்திருக்கின்றனர்... கத்தோலிக்கச் சபை, மெத்தோடிஸ்டு சபை, பாப்டிஸ்டு, கிறிஸ்துவின் சபை, பெந்தெகொஸ்தே சபையும்கூட, இதே காரியத்தைக் கொண்டு அநேக ஆவிக்குரிய மரணத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். இது போன்ற காரியங்களோடு அது வெளிப்படும் பொழுது, அவர்கள்... அவர்களால் அதனோடு தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாது, ஏனெ னில் அவர்களின் ஸ்தாபனமும் அதைத்தான் நம்புகிறது. 296. இன்றைக்கு பாருங்கள், மார்க்க சம்பந்த பெரிய சண்டைகள், அதே காரியம்தான். அவர்களை முன்பு இருந்ததைவிட மோசமாக, இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறார்கள் என்பதைத் தவிர அவர்கள் வேறெதையும் செய்வதில்லை. இதுபோன்ற ஒரு பெரிய எழுப்புதல் கூட்டங்களை நடத்தி, சிறிது காலம் அதிலே தரித்திருந்து, பின்னர் தங்கள் பாவங்களுக்கு திரும்பிச் சென்று மீண்டு மாய் அதைச் செய்யத் துவங்குகின்றனர். இன்னுமொரு எழுப்புதல் கூட்டத்தில் பங்கெடுத்து, “By”, அது போன்ற சில காரியத்தை நான் பெற்றிருக்கிறேன், நான் முயற்சித் தேன், “அதற்கு மேல் வேறு எதுவுமில்லை” என்கிறார்கள். பாருங்கள்? அவர்கள் அந்த முறைமையை அறிந்திருக்க வில்லை. அதைக் காண்பதுமில்லை. 297. ஒரு காலை வேளை, நமது சிறந்த சுவிசேஷகரான பில்லி கிரஹாம், இவ்வாறான ஒரு காலைச் சிற்றுண்டியில், கெண்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லில் உட்கார்ந்து கொண்டு, வேதாகமத்தை மேலே வைத்தவராய், “அங்கே தான் தேவனுடைய முன்மாதிரி (example) இருக்கிறது” என்றார். அது உண்மை, அம்மனிதன் கூறியது உண்மை. அவர் கூறினது: “பவுல் நகரத்திற்குள் சென்று, ஒருவரை மனந்திரும்பச் செய்தான். ஒரு வருடம் கழித்து, அங்கே திரும்பி வந்த போது, அவன் அந்த ஒருவரிலிருந்து மற்ற முப்பது மனந்திரும்பியவர்களை பெற்றிருந்தான். ஆனால் நான் ஒரு நகரத்திற்குச் சென்று முப்பதாயிரம் பேரை மனந்திரும்பும்படி செய்து, ஆறு மாதங்களில் திரும்பி வந்தபோது, முப்பது பேர்கூட காணப்படவில்லை” என்றார். மேலும் அவர், “உங்களுக்கு விஷயம் என்னவென்று தெரியுமா? சோம்பேறி பிரசங்கிமார்களாகிய நீங்கள், மேசையின் மீது உங்கள் கால்களை வைத்துக் கொண்டு, இரவு உணவிற்கு பிறகு அவர்களிடம் நேராய்ச் சென்று பேசுவதற்கு பதிலாக தொலைபேசி மூலம் மக்களை அழைத்து பேசுகிறீர்ளே” என்றார். 298. ஓ! என்னுடைய இருதயம் எரிந்து கொண்டிருந்தது நான் நினைத்தேன், “ஓ! தேவனுடைய மகத்தான மனிதனே! இந்த விஷயத்தில் உன்னுடன் உடன்படாமல் இருப்பதை நான் விரும்பவில்லை, இருப்பினும் பவுலினுடைய மனந் திரும்பின நபர்களின் மத்தியில் யார் சோம்பேறி பிரசங்கியாக இருந்தது? ஆனால் பவுல் செய்தது என்ன? மனந் திரும்பினவனை வார்த்தையிடம் கொண்டு சென்றான், அவன் அவனை செய்திக்குள் கொண்டு சென்றான், அவன் தேவனை எங்கே கண்டு கொண்டானோ அங்கே அவனை எடுத்துச் சென்றான்; அவன் இருதயத்தில் அக்கினி எரிந்து கொண்டிருந்தது. அவன் தேசத்தை அக்கினி மூளச் செய்தான்! நீ செய்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் என்ன வென்றால், அவர்களை பாப்டிஸ்டு அல்லது மெத்தோடிஸ்டு சபை, அல்லது வேறு எதற்குள்ளாகவோ வைத்துவிடுகிறாய். அங்கே பற்றியெறிய ஒன்றுமே இல்லை என்பதில் வியப் பொன்றுமில்லை.” உஹ்ஹூ ஆம் ஐயா! 299. அப்படியானால், இன்றைய தினத்திற்காக வார்த்தையானது எதை வாக்குதத்தம் பண்ணியுள்ளது என்று பாருங்கள். நாம் அதை கண்டுபிடிப்போம்! அது மெத்தோடிஸ்டா? பாப்டிஸ்ட்டா? பெந்தெ கொஸ்தேவா? அல்லது இன்றைக்கு அது எது? இப்போது நீங்கள் சென்று உங்கள் வேதாகமத்தை வாசியுங்கள். நான் உங்களுக்கு மேற்கோள் காட்டியிருந்த வேதவசனங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வெளிப்படுத்தின விசேஷம்... 300. எனக்கு நேரமிருந்தால், நான் அதை வாசிப்பேன். ஆனால் எனக்கு நேரமில்லை. எனக்கு இன்னும் பன்னிரெண்டு அல்லது பதினான்கு நிமிடங்களே உள்ளன. நான் சரியான நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால், நான் சரி யான நேரத்தில், சரியாக பதினொன்று மணிக்கு முடிக்க வேண்டும். 301. கவனியுங்கள். மல்கியா 4-ம் அதிகாரம்... வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரத்தில், ஏழு முத்திரைகள். வேதம் கூறவில்லையா?... இப்போது கவனி யுங்கள்! ஒரு தூதன், பரத்திலிருந்து வந்த ஒரு செய்தி யாளன் இருந்தார். மேலும் பூமிக்குரியத் தூதனும் இருந்தான். இந்த ஒவ்வொரு தூதர்களும் அந்தந்த சபை காலத்துக்குரியவர்கள். அவர் சொன்னார்: “இந்த தூதனின் நாட் களி..” “ஒரு தூதன் வந்தார், செய்தியாளன். (ஆங்கிலத்தில் “தூதன்-Angel” என்ற வார்த்தையின் பொருள் “செய்தியாளன்-messenger" என்பதாகும்)... பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் தமது பாதங்களை பூமியின் மீதும், சமுத்திரத்தின் மீதும் வைத்து, “இனி காலம் செல்லாது” என்று சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் மேல் ஆணையிட்டு சொன்னான்” என்று கூறுகிறது. அது சரிதானா? ஒரு வானவில் அவர் தலையைச் சுற்றியிருந்தது. மற்ற அனைத்து காரியங்களும் அங்கே நடந்து கொண்டிருந்தன. அந்தத் தூதன் கிறிஸ்துவே! நிச்சயமாகவே! அவர் என்ன சொன்னார்? “ஆனாலும், ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில், ஏழாம் சபையின் காலம்.” 302. எப்போதுமே சபை காலத்தின் முடிவில், காரியங் கள் நிகழ்கின்றன... தேவன் ஒரு தூதனை அனுப்பும் வரை மதகுருமார்கள் அதை அவ்வளவாய் குழப்பி போடுகிறார் கள், அந்த தூதன் கொண்டுவரும் செய்தியே அந்த சபை யின் காலத்திற்குரிய செய்தியாகும். பிறகு அவர்கள் அவருடைய செய்தியை எடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர் சிறிது காலம் மட்டுமே வாழ்கிறார். மேலும் தேவன்... பிறகு அவர்கள் அவருடைய செய்தியை எடுத்து, மற்றவற்றோடு அதை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். பிறகு அவர்கள் வந்து இன்னொரு ஸ்தாபனத்தை ஏற்படுத்துகிறார்கள், இன்னொரு செய்தியாளனை எடுத்துக் கொள்கிறார்கள். மற்றுமொரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 303. நீங்கள் அனைவரும் என்னுடைய புத்தகத்தில் பார்த்தீர்கள். ஏழு சபை காலங்களில் [எனும் புத்தகத்தில்] அவர் என்னிடம் கூறிய வண்ணம் அது எல்லாம் வரையப்பட்டுள்ளது; அது என்னுடய எண்ணங்களிலிருந்து வராமல் தேவனிடத்திலிருந்து வந்தது என்பதற்கு சாட்சியாக நான் நிற்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே நான் அதற்காக கணக்கொப்புவிக்க வேண்டும். கவனியுங்கள், இங்கே நான் அதிலிருந்து வித்தியாசமான எண்ணத்தைக் கொண்டிருந்தேன், நான் என்னுடைய சொந்த எண்ணங்களை பெறுகிறவனாக இருந்தேன். சகோதரன் ஜாக் அந்த தூதனைக் குறித்து என்னிடம் கூறியது போல, எப்படி “அந்த கிறிஸ்து ஒரு மகிமையடைந்த சரீரமாக இருந்தார்.” ஆனால் அது அதுவல்ல, அது செய்தியானது சரியாயிருக்கிறது என்று ஊர்ஜிதப்படுத்துகிறது, அந்த உன்னத தெய்வீகத் தன்மை, அவர் தேவனாயிருக்கிறார். பாருங்கள்? நான் வார்த்தையிலிருந்து பிரசங்கித்துக் கொண்டிருக்கும் அதுவே தான் அது. வார்த்தையானது எப்போதுமே வார்த்தைக்கு சாட்சி கொடுக்கிறதாயிருக்கிறது. 304. இப்போது, சீக்கிரமாக இப்போது, இன்னும் சில நிமிடங்களில் நாம் முடிக்க இருக்கிறோம். 305. இப்போது, அவர் சொன்னார்: “ஏழாம் தூதனின் செய்தியின் நாட்களில், பூமிக்குரிய தூதன், ஏழாம் சபைக் காலம், மற்றும், ஆறு சபை காலங்களினூடாக இழக்கப்பட்ட, இந்த எல்லா இரகசியங்களும் சரியாக இப்பொழுது வெளிப்படுத்தப்பட வேண்டும்.” நல்லது, அந்த தூதர்கள் மிகச் சரியாகச் சொன்னது இதைத்தான். இங்கே ஏழு முத்திரைகள் உள்ளன. அல்லது இந்த இரகசியங்கள் திறக்கப்படுதல். மேலும் நீங்கள் அந்த ஸ்தாபனங்களுக்கு முன்பாக, அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். அவர்கள் செய்கிறதற்கு முரணாக.....சகோதரனே, அவர்கள் கிளிஞ்சலைப் (clam) போல தங்களை மூடிக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் எப்போதுமே அதைத் தான் செய்கிறார்கள். ஆனால் இதுவே காலம். 306. இதுதான் ஏழாம் சபையின் காலம் என்பதை எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள்? “ஆமென்” என்று சொல்லுங்கள் [சபையார் “ஆமென்” என்கின்றனர்] லவோதிக்கேயா சபை, வெதுவெதுப்பானதை தேவன் தம் வாயினின்று வாந்தி பண்ணுகிறார். மேலும் அவர்கள் தங்களுடைய வாயிலிருந்து தேவனை வெளியே தள்ளி விட்டனர். வேதாகமத்தில் வேறு எந்த ஒரு சபை காலத்திலும் இயேசு வெளியே நின்றுகொண்டு உள்ளே வருவதற்கு தட்டிக்கொண்டு முயற்சி செய்வதாகக் காணப்படவில்லை. அவர்கள் அவரை வெளியே தள்ளி விட்டனர், ஒத்துழைக்கவில்லை. இயேசு யார்? அவர் வார்த்தை. வார்த்தையானது வெளியே தள்ளப்பட்டு விட்டது. உமியானது கோதுமை மணியை வெளியே தள்ளி விட்டது! அவர், “நான் வாசற்படியில் நின்று தட்டுகிறேன், அவர்களில் எவன் கட்டுண்டவனாயிருக்கிறானோ அவன் என் சத்தத்தைக் கேட்கிறான்” என்றார். தேவனே, இரக்கமாயிரும்! 307. அப்போது சம்பவித்ததாவது, அந்த மனிதன் மரித்தபோது, தாவீது அபிஷேகத்தோடு அவன் செய்த தவறு என்ன என்பதை பார்த்தான். ஓ தாவீதே! போதகரான நீர், மரித்த கொள்கைகளையும், ஸ்தாபனங்களையும் பற்றிக் கொண்டிருக்கிறீர் என்பதை உம்மால் பார்க்க முடியவில்லையா? அது என்ன செய்கிறது என்று உம்மால் காண முடியவில்லையா? அது ஒரு உசியாவை கொன்று கொண்டிருக்கிறது. ஆவிக்குரிய மரணம், அதன்பின் நீங்கள் எழுப்புதல் ஏன் இல்லை என்று வியக்கிறீர்கள். உங்களுடைய ஸ்திரிகள் தங்கள் முடியை வெட்டிக் கொள்ள அனுமதிக்கிறீர்கள், முகத்திற்கு வர்ணம் பூசவும், குட்டையான கால் சட்டைகளை அணியவும் உங்கள் பையன்களை போக்கிரி (Ricky schools) ரிக்கி பள்ளிகள் போன்றவற்றிற்கு அனுப்பு வதும், அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஓரின சேர்கையாளர்களாகவும், மற்ற அருவருப்புகள் நிறைந்தவர்களாகவும் வீட்டிற்கு வருகிறார்கள். 308. தாவீதின் நோக்கம் என்ன என்பதை கவனியுங்கள்: அவன் தன்னுடைய சொந்த வீட்டிற்கு பெட்டியை கொண்டு வருகிறான். அது தலைநகரம் அல்ல, அது அந்த இடமல்ல, அது எருசலேமுக்கு சொந்தமானது. ஆனால் தாவீது அதை தன்னுடைய சொந்த வீட்டிற்கு கொண்டு வருகிறான். தன்னுடைய சொந்த ஸ்தாபனத்தின் மீது எழுப்புதல் இருக்க வேண்டும் என்று விரும்பினான். “ஓ நீங்கள் அசெம்பிளியா, சரி, நீங்கள் ஒருத்துவமா, சரி. நீங்கள் பெந்தெகொஸ்தேவா, சரி.” 309. யாரோ சொன்னது போல, “சகோதரன் பிரான்ஹாமே, உமக்கு செவிகொடுக்கிற யாரையாவது நீங்கள் எப்பொழுதாவது கொண் டுள்ளீர்களா?” என்று கேட்டார். மேலும் அவர் “நான் பில்லி கிரஹாமை காண முடிகிறது, அவருடன் தேசத்திலிருக்கும் எல்லா ஸ்தாபனங்களும் இருக்கிறது. நான் ஓரல் ராபர்ட்ஸை காணமுடிகிறது, பெந்தெகொஸ்தே ஜனங்கள் அவரை தொற்றிக் கொண்டுள்ளார்கள். ஆனால் அவை அனைத்திற்கும் நீங்கள் எதிராக உள்ளீர்.” உஹ்-ஹூ, “பின்னர் எப்படி இந்த உலகத்தில் உங்களுக்கென்று யாரையாவது பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?” என்றார். 310. நான், “அது தேவன்” என்றேன். 311. “கர்த்தராகிய நான், உலகத் தோற்றத்துக்கு முன்பே அதை நட்டு விட்டேன். என் கையிலிருந்து யாராவது பறிக்காத வகையில், இரவும் பகலும் நான் அதற்கு நீர் பாய்ச்சுவேன்” ஏசாயா. “நான் நீர் பாய்ச்சுவேன். நான் அதை நாட்டினேன். முன்குறித்தலின்படி, உலகத் தோற்றத்திற்கு முன்பே நான் அவர்களுடைய பெயர்களை புத்தகத்தில் எழுதி வைத்துள்ளேன். நான் அவைகளுக்கு நீர் பாய்ச்சுவேன். தொடர்ந்து செல்லுங்கள். நான் தண்ணீரை நிரப்புவேன். நீ அதைத் தெளித்து மட்டும் விடு” சரி. பாருங்கள்? “அவர்களில் ஒருவனாவது என் கைகளிலிருந்து பறிக்கப்படாத வண்ணம், நான் அதற்கு இரவும் பகலும் நீர் பாய்ச்சுவேன்.” அங்கே தான் காரியம். 312. எருசலேமுக்குப் பதிலாக, தாவீதின் நகரத்திற்குக் கொண்டுவர விரும்பினான். அந்த நாட்களில் அதற்கான ஒரு இடமும் அங்கே ஆயத்தமாக இல்லை. இன்றும் அப்படியே உள்ளது. ஏழு முத்திரைகளால் வெளியாக்கப் பட்ட இந்த மகத்தான இரகசியங்களுக்கு, எந்த ஸ்தாபனங் களிலும் இடமில்லை...அதை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் ஸ்தாபனத்தை விட்டுவிட வேண்டும். லூத்தர் முதற் கொண்டு, ஒருத்துவ பெந்தெகொஸ்தே வரையிலுள்ள எல்லாவற்றிலும் அதைப் பெற்றுக் கொள்ளும்படியான ஒரு இடமும் இல்லை. அதைப் பெற்றுக் கொண்ட எந்த மனிதனும், பின்னர் தன்னுடைய ஸ்தாபனத்திலேயே நிலைத்திருக்கவும் முடியாது. அவன் கோதுமையைப் பின்பற்றிச் செல்லவேண்டும் அல்லது உமியை பின்பற்றிச் செல்ல வேண்டும், ஏதாவது ஒன்றை தான் அவன் பின்பற்ற வேண்டும். 313. கிறிஸ்துவாகிய வார்த்தைதான் நமது பேழை. அவர்களுக்கு அவர்களுடைய ஸ்தாபனங்கள் தேவை. கவனியுங்கள், அவரை ஸ்தாபனங்களாகிய மாட்டு வண்டியில் எடுத்துச் செல்ல முடியாது. அவருடைய செய்தியானது ஒரு புதிய ஸ்தாபன வண்டியின் மேல் செல்ல முடியாது, அது ஒரு தீர்க்கதரிசியினுடைய இருதயத்திலே வைத்து சுமந்து செல்லப்பட வேண்டியதாயிருக்கிறது. அது அப்படியாகத்தான் இருக்க வேண்டும், அது அந்த வழியிலே தான் செய்யப்பட வேண்டும், அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் 314. ஆகவே, ஸ்தாபனங்கள் ஒருபோதும் அதைப் பெற்றுக்கொள்ளாது, அவைகள் அதை பெற்றுக்கொள்ளவும் முடியாது. யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைகையில், இயேசு, "பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னது என்பதைக்கூட அவர்கள் அறியாதிருக்கிறார்கள்” என்று கூறினபோது, யூதர்கள் அதற்கு குருடர்களாயிருந்தது போலவே, இவர்களும் இதற்கு குருடர்களாயிருக்கிறார்கள். அவர்களை நிந்திக் காதீர்கள். ஆனால், நீங் களும் அதே நிலையிருந்து, உங்கள் கண்கள் குருடா யிருந்து, நீங்கள் விழித்துக்கொண்டு அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க முடியாதவண்ணம் இருந்திருப்பீர்களென்றால் என்ன செய்திருக்க முடியும் என்பதை மட்டும் எண்ணிப் பாருங்கள். 315. அதுதான் அவர்களுடைய நிஜமான தேவன் என்பதை அவர்களால் காணமுடியவில்லை. அவர் சிலுவையின் மேல் தொங்கிக் கொண்டிருந்த போது, இருநூறு கெஜ தூரத்தில், ஆலயத்தில் அவர்கள் 22-ம் சங்கீதத்தைப் பாடிக் கொண்டிருந்தனர். “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? அவர்கள் என் கால்களையும், என் கைகளையும் உருவக் குத்தினார்கள்,” பாருங்கள்! “என்னுடைய எழும்புகளையெல்லாம் அவர்கள் என்னைக் நோக்கிப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஏன் என்னை கைவிட்டீர்?” மேலும் அங்கே, அவர்களால் பாடப்பட்ட அதே தேவனை தாங்களே சிலுவையில் அறையும் அளவிற்கு அவர்கள் அவ்வளவு குருடர்களாயிருந்தனர், மேலும் அதை அவர்கள் அறியாதவர்களாயிருந்தனர். 316. இப்போது, லவோதிக்கேயா சபை தன்னிடமுள்ள ஸ்தாபன அங்கத்தினர்களினிமித்தம் தன்னை மிகவும் உயர் வாய் எண்ணிக் கொண்டு, அவள் ஒரு “நிர்வாணியும், பரிதபிக்கப்படத்தக்கவளும், தரித்திரனும், குருடனுமாயிருக்கிறதை அறியாமலிருக்கிறாள்” என்று வேதம் இவ்வாறாக கூறவில்லையா? குருடாயிருப்பது என்றால் என்ன? இந்த லவோதிக்கேயா சபைக்கு குருடன் என்பது, யூத சபையின் முடிவு கட்டத்தைப் போல, அதே கிறிஸ்துவை அறியாமல் குருடராயிருந்து, அவரை கதவிற்கு வெளியே தட்டிக் கொண்டும் உள்ளேவர முயன்று கொண்டும் நிற்பவராய் கொண்டிருப்பதே: "நிர்வாணியும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், நிர்பாக்கிய முள்ளவனும், குருடனாயுமிருக்கிறதை அறியாமலிருக்கிறாள்.” ஓ தேவனே! இரக்கமாயிரும்! 317. ஏன் அந்த கோதுமை மணியானது அங்குள்ள அந்த குமாரனுடைய பிரசன்னத்தில் கிடந்து, நாம் எந்த மணி நேரத்தில் ஜீவிக்கிறோம் என்பதை காணக்கூடாது? ஆம்! கிறிஸ்துவே நமது பேழை. ஆனால் அதைச் செய் வதற்கான அவருடைய மூல வழியானது.... பிறகு இங்கே அவ.... அவர்களுக்கு அவருடைய ஆவி இருந்தது, அதெல்லாம் சரிதான். அது நமக்குத் தெரியும். அவர்கள் கர்த்தருக்காக காத்திருக்கிறார்கள். தன் காலத்தில் நிரூபிக்கப் பட வேண்டிய அவருடைய மூல வார்த்தையின் பேரிலான திட்டத்தை கவனியுங்கள். இப்பொழுது நாம் நிச்சயமாக அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். ஸ்தாபனங்களின் மனித திட்டங்களை அல்ல, தங்கள் சொந்த பேழைக்கு உறுப்பினர்களை சேர்ப்பதை அல்ல, தாம் வாக்குத்தத்தம் பண்ணின ஒவ்வொரு திட்டத்தையும் உறுதிப்படுத்துகிற அவரைக் காண்பதின் மூலம், அவர்களுடைய விசுவாசத்தை அவர்-அவர் தம்முடைய வார்த்தை யின் மூலம் வெளிப்படுத்துகிறார். 318. அவர்களுக்கு ஒரு மெத்தோடிஸ்டு பேழை உள்ளது, ஒரு பாப்டிஸ்டு பேழை, ஒரு பிரஸ்பிடேரியன் பேழை உள்ளது. வருகின்ற மகா உபத்திரவத்தின் நிமித்தம் எல்லோரும் இந்த பேழைக்குள் செல்கின்றனர். “தேவனுக்கு மகிமை! நான் மெத்தோடிஸ்டு பேழைக்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறேன், பிரஸ்பிட்டேரியன் பேழை, பெந்தெகொஸ்தே பேழை.” ஆனால் அங்கே ஒரே ஒரு பேழை தான் உண்டு. அது இயேசு கிறிஸ்து தாமே. அவர் வார்த்தையாயிருக்கிறார்! 319. கவனியுங்கள், பழைய ஏற்பாட்டில் தேவன் தீர்க்கதரிசியிடம் “சுருளைப் புசி” என்றார். புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசியிடம் அவர், “சிறு புத்தகத்தைப் புசி” என்றார். ஏன்? அந்தத் தீர்க்கதரிசியும், வார்த்தையும் ஒன்றாக வேண்டும்! பாருங்கள்? அதுதான் பேழை, அது தேவனுடைய வார்த்தை. 320. தேவன் தம்முடைய வார்த்தையை வாக்குரைத்திருக்கிறார், தம்முடைய மணவாட்டியை தெரிந்தெடுக்கையில், அது எவ்வாறு நிறைவேறும், அது எப்படியாக நடந்தேறும், அது எப்படியாக செய்யப்பட வேண்டும் என்பதை அவர் வாக்குரைத்திருக்கிறார். சரியாக உங்களுக்கு முன்பாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கர்த்தருடைய நாமத்தினால், மேலும் அது அசலான வார்த்தையினால் நடந்து கொண்டிருக்கிறது! சாயங்கால நேர செய்தி இங்கே தான் உள்ளது. 321. ஹேவுட் (Haywood] என்பவரை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது, அவர் இவ்வாறு எழுதியுள்ளார். சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாயிருக்கும், மகிமையின் பாதையை நிச்சயம் நீ காண்பாய்; 322. ஆம், ஏழு முத்திரைகளின் சாயங்கால வாக்குறுதி, வெளிப்படுத்தின விசேஷம் 10, மல்கியா 4, லூக்கா 30 மற்றும் 10 போன்றவை. உபாகமம் 4:1 மற்றும் 4, பிறகு 25, 26 வசனங்களை வாசியுங்கள், இந்தக் கடைசி நாட்களைப் பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள். இது மோசே இஸ்ரவேலுக்குச் சொல்லுகிறார்: “நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் காத்துக்கொள்ள வேண்டும், அதிலே ஒன்றையும் நீங்கள் கூட்டாதீர்கள்!” தீர்க்கதரிசியான மோசே அங்கே மேலே இருந்தான், தேவனுடைய வார்த் தையைக் கண்டான். மேலும் அது தேவனுடைய சொந்தக் கரங்களால் எழுதப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு, அவனிடம் கொடுக்கப்பட்டது. அவர், “நீ ஒவ்வொரு வார்த்தையையும் காத்து கொள்வாயாக, அதனுடன் ஒன்றையும் கூட்டாதே, அதிலிருந்து ஒன்றையும் எடுத்துப் போடாதே” என்றார். உபாகமம் 4:25 மற்றும் 26-ம் வசனங்களில் நீங்கள் அதை வாசிக்கலாம். (உபா 4:2) 323. கவனியுங்கள்! நீங்கள் அதனோடு கூட்டாதீர்கள். அதிலிருந்து எடுத்துப்போடவும் வேண்டாம்; ஏனெனில், நீங்கள் அப்படிச் செய்தால் தேவன் உங்களுடைய பங்கை ஜீவபுத்தகத்திலிருந்து எடுத்துப் போடுவார். நீங்கள் அவருடைய வித்து அல்ல என்பதை அது காட்டுகிறது. 324. நினைவில் கொள்ளுங்கள்! தேவன் நமக்கு வாக்குரைத்த எல்லாமே, தேவன் நம்மோடு பேசின எல்லாமே, கர்த்தரின் நாமத்திலே உங்களுக்குச் சொல்லப்பட்ட எல்லாமே நடந்தேறிவிட்டன! தேவன் ஒருபோதும் எந்த ஒரு வாக்குறுதியையும் தவறவிடவில்லை. தாம் கூறின ஒவ்வொரு வாக்குறுதி யையும் அவர் காத்துக் கொண்டார். நமக்குச் சொன்ன ஒவ்வொன்றும் சத்தியமாகவே இருந்து வந்துள்ளன. கடந்த இருபது வருடங்களாக, ஷ்ரீவ்போர்ட் (Shreveport) ஜனங்களே, நான் தேவனுடைய வல்லமையின் மூலமாய் உங்களுடைய போதகரின் உபசாரத்தினிமித்தம் உங்களுக்குப் பிரசங்கித்துள்ளேன், மேலும், இன்று உங்களில் இதை நன்கு பதிவு செய்யப் போகிறேன். பிள்ளைப் பேற்றை கடந்த ஸ்திரீகளுக்கும், புருஷர்களுக்கும், பிள்ளை களுக்கும்: இன்னல்களும், சுகமளித்தலும், தீர்க்கதரிசனமும், சம்பவிக்கப் போகும் காரியங்களும், நான் உரைத்த ஒன்று கூட ஒரு போதும் தவறியதில்லை! இப்போது, அந்த ஸ்தாபனங்களிலிருந்து விலகியிருங்கள். அவைகள் உங்களை மரணத்திற்கு வழி நடத்தும். 325. சாமுவேல் ஒரு நாள் நின்றிருந்தபோது, அவர்கள், “எங்களுக்கு ஒரு இராஜா வேண்டும். நாங்களும் உலகத்திலுள்ள மற்றவர்களைப்போல இருக்கவேண்டும்” என்றனர். 326. சாமுவேல் சொன்னான், “நீங்கள் அந்த இராஜாவை பெற்றுக் கொள்ளாதீர்கள். அவன் உங்கள் குமாரர், குமாரத் திகளை எடுத்துக்கொள்வான். அவன் இதைச் செய்வான், அதைச் செய்வான்”. 327. அவன், “ஆமாம், நீர் சொல்வது சரி தான் என்று நானறிவேன்” என்றான். 328. ஆனாலும் சாமுவேல், “எனக்கு செவி கொடுங்கள். உங்களுடைய பணத்தை எப்பொழுதாவது நான் எடுத்தது உண்டா? வாழ்வாதாரத்திற்காக எப்போதாவது உங்களிடம் கெஞ்சியிருக்கிறேனா? உங்களுக்காக ஜெபக் கூட்டம் நடத்தும்படி உங்களிடம் எப்பொழுதாவது, நீங்கள் எனக்கு இவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறேனா?” என்று கேட்டான். இப்பொழுது உங்களையே நியாயம் தீருங்கள், இப்பொழுதும்கூட! பாருங்கள்? அவன், “நான் எப்பொழுதாவது, கர்த்தருடைய நாமத்தில் உங் களுக்கு ஏதாவது சொல்லி, அது நிறைவேறாமல் போனதுண்டா?” என்றான். ஒன்று கூட இல்லை. 329. "ஓ! ஆம் சாமுவேல், நீர் எங்களிடம் பணத்திற்காக ஒருபோதும் கெஞ்சியதில்லை. ஒருபோதும் பெரிய காரியங்களைவேண்டும் என நீர் கேட்டதில்லை. சாமுவேலே, அது உண்மை. கர்த்தரின் நாமத்தில் நீர் சொன்ன எல்லா காரியங்களும் நடந்தேறியது. ஆனாலும் சாமுவேல், எப்படியும் எங்களுக்கு எங்களுடைய ஸ்தாபனம் வேண்டும்!” 330. “அப்படியானால் நீங்கள் போய் அதை பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களைப் பொறுத்தது.”அது சரி. 331. நீங்கள், தேவனுக்கு ஒரு சேவை செய்கிறோம் என்று நினைக்கலாம். ஆனால் அது தேவன் செய்கின்ற வழியை விட்டு விலகிப்போனால், நீங்கள் அதை மேலும் மேலும் குழப்பிக் கொண்டிருப்பீர்கள். ஓ! ஜீவிக்கின்ற தேவ னுடைய சபையே! கடினமான உணர்ச்சிகளை சமாளிக்கும் என்னுடைய அயர்லாந்தின் உத்திகளை (my Irish way and my sense of humor) தயவுசெய்து மன்னியுங்கள். ஆனால், என் இருதயத்தின் உத்தமத்திலும், பக்தியிலுமிருந்து: அசெம்பிளி ஆப் காட் சபைகளே, ஓருத்துவக்காரர்களே, பிரஸ்பிட்டேரி யன்களே, மெத்தோடிஸ்ட்டுகளே, நீங்கள் யாராக இருந்தாலும், உங்கள் ஜீவன் தப்ப ஓடுங்கள். நினைவிருக்கட்டும், அங்கிருந்து வெளியே வாருங்கள். தேசங்கள் உடைந்து கொண்டிருகின்றன, இஸ்ரேவேல் விழித்தெழுந்து கொண்டிருக்கிறாள், மீதியாயிருப்பவர்களுக்காக ஆயத்தமாகிறாள். தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள்; ஸ்தாபன முறைமைகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன, திகில்கள் சூழந்துள்ளன; 'ஓ, சிதறடிக்கப்பட்டவர்களே, உங்களுடைய சொந்த இடத்திற்கு திரும்பி வாருங்கள்.” மீட்பின் நாள் சமீபித்துவிட்டது, மனுஷருடைய இருதயம் பயத்தினால் சோர்ந்து போகின்றன; ஆவியினால் நிரப்பப்பட்டு, உங்கள் தீவட்டிகளை சுத்திகரித்து, சரிபடுத்துங்கள்; மேலே நோக்கிப் பாருங்கள்! உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது. 332. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் கடைசி நேரங்களில் இருக்கிறோம், நாம் இங்கேயிருக்கிறோம். சுவற்றில் எழுதப்பட்ட கையெழுத்து உள்ளது. இரண்டாவது வருகை மிகச் சமீபத்தில் உள்ளது. மணவாட்டி தெரிந்தெடுக்கப்படுகிறாள்; நீர் பாய்ச்சப்படுகிறாள்; வெளியே கொண்டு வரப்படுகிறாள். 333. இப்போது, அது சபையிலிருந்து வெளியே இழுக்கப்படுவதாக அர்த்தம் அல்ல; அதாவது, ஸ்தாபனக் கொள்கைகளிலிருந்து வெளியே இழுக்கப்படுவதைக் குறிக்கிறது. நீங்கள் கண்டிப்பாக சபைக்குச் செல்ல வேண்டும். ஆனால் எந்த ஸ்தாபனங்களுடனும் சேராதீர்கள். இயேசு எல்லா பிரிவினருடனும் சென்றார். ஆனால் அவைகள் ஒன்றிலும் அவர் ஒருபோதும் சேர்ந்துகொண்டதில்லை. அவைகள் ஒன்றிலும் அவர் சார்ந்து கொண்டது மில்லை. நிச்சயமாக இல்லை, ஆனால் அவைகளுடன் அவர் இருந்தார். அங்கேதான் வெளிச்சமானது பிரகாசித்துப் பரவ வேண்டியுள்ளது. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அங்கே சரியாக இருங்கள், வெளிச்சத்தை பரப்பிக் கொண்டே இருங்கள். பாருங்கள்? அதற்காகத்தான் தேவன் உங்களை பயன்படுத்துகிறார். பசியுள்ள இருதயமுடைய ஜனங்கள், இயேசு கிறிஸ்து உண்மையானவர், நேற்று அவர் இருந்தது போல இன்றும் அவர் இருக்கிறார், என்றென்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை அவர்கள் தெரிந்து கொள் ளட்டும். 334 ஒரு புருஷனோ அல்லது ஸ்திரியோ எல்லா உத்தமத்தோடும், தங்களால் முயன்ற அளவிற்கு தேவனுக்கு ஒரு சிறப்பான சேவை செய்ய முயற்சித்து, அதேசமயம் தவறான வழியில் அதை குழப்பிவிடக் கூடும். அவர்கள் பரிசுத்த ஆவியின் மெய்யான அபிஷேகத்தை உடையவர்களாய் இருந்தும், அந்த காலத்திற்கான தேவனுடைய திட்டத்திற்கு முரணாக அதை கிளறிப் போட்டு, மொத்தத் தையும் ஒரு பெருங்குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். இப்போது, அது உண்மை என்று நீங்கள் விசுவாசித்தால், “ஆமென்” என்று சொல்லுங்கள். [சபையார் “ஆமென்” என்கின்றனர்] இப்போது தான் நாம் அதை வாசித்தோம். தேவனுடைய அருளப்பட்ட வழியில் வந்து அதை செய்யாததினால், முழு காரியத்தையும் ஒரு பெருங்குழப்பத்திற்குள் ஆழ்த்தி விட்டனர். நாம் ஜெபிப்போம். 335. ஒ சபையே! இங்கேயும், தேசத்தினூடாகவும், இந்தக் காலை வேளையிலே உங்களுடைய தாழ்மையான ஊழியக்காரனுக்குச் செவிகொடுங்கள் செவிகொடுப்பீர்களா? சில வருடங்களுக்கு முன்பு, இது முதலாவது தொடங்கிய போது, நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்று பாருங்கள்; இப்போது பாருங்கள், என்னவிதமான ஆள் மாறாட்டங்கள் மூலதனமாக பயன்படுத்தப் பட்டு, மற்றும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான டாலர்கள் ஸ்தாபனங் களில் வந்து குவிந்துள்ளது. பாருங்கள்? இன்னுமாக தேவனுடைய வார்த்தையை விட்டு விலகிப் போகிறார்கள். கட்டிடங்களும், ஸ்தாப னங்களும் தேவன் தம்முடைய ஆவியை அசைவாட்டுகிற வழியல்ல. அதை தம்முடைய வார்த்தையில் சரியாக ஊற்றியுள்ளார், அதை ஜீவிக்கச் செய்யும்படியாக, நீங்கள் உலகத்தோற்றத்திற்கு முன்பே அந்த வார்த்தையோடு நியமிக்கப்பட்டிருப்பீர்களானால், ஒவ்வொரு வார்த்தையும் சரியாய் அந்த வார்த் தைக்கு மேலாகவே வந்து தங்கும். மனித உயிரணுக் களில் எப்படி ஒரு மனித உயிரணுவுக்கு மேலாக ஒரு நாயினுடைய உயிரணுவையோ அல்லது ஒரு பூனையின் உயிரணுவையோ உடையதாயிராமல் ஒரு மனித உயிரணுவையே உடையதாயிருக்கும். ஆனால் துவங்குவதற்கு, முதலாவதாக அது ஒரு உயிரணுவை உடையதாயிருக்க வேண்டும். அது சரி தானே? “ஆமென்” என்று சொல் லுங்கள். (சபையார் “ஆமென்” என்கின்றனர்] நல்லது, அது முதலாவதாக வார்த்தையின் உயிரணுவாக இருக்குமானால், மற்ற வார்த்தையின் உயிரணுக்களும் அதன் மேலாக வைப்பதற்கு நியமிக்கப்பட்டு ஒரு முழு வார்த்தையின் சரீரமாக கட்டப்படும். 336. குழந்தைகளாயிராதேயுங்கள், அன்பில் மாத்திரம் நிலைத்திருங்கள், ஆனால் ஆவியிலும் நியாயந்தீர்க்கிற திலும் புருஷர்களாயிருங்கள். நான் உங்களுக்கு சத்தியத்தை கூறினேனா இல்லையா என்று நீங்களே நிதா னித்துப்பாருங்கள். அது தேவனுடைய வார்த்தைதானா இல்லையா என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள். நாம் பேசிக்கொண்டிருக்கும் மணிநேரம் இதுதானா இல்லையா என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். இந்த காரியங் களெல்லாம் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளதா என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள். இப்பொழுது, இவைகளெல்லாம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதா? இந்த உலகத்தில் ஒரு மனிதனால் அதைச் செய்ய முடியாது என்ற வகையில் அது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது நம்மிடையே வழிந்தோடி நம்மை கடந்து செல்ல விட்டுவிடுமளவிற்கு நமக்கு அது மிகவும் பழகிப் போன ஒன்றாகிவிட்டது. காத்திரு, சபையே, காத்திரு. 337. இந்தக் காலை வேளையில், இங்கே, இயேசு கிறிஸ்துவை அறியாத யாராவது ஒருவர் இருப்பீர்களானால், இந்தக் காலை வேளையில் நீதிமானாக்கப்படாமல் நின்று கொண்டிருப்பீர்களானால், நீங்கள் ஒருபோதும் பாவம் செய்யவில்லை என்பதுபோல, உங்கள் பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விட்டன. நீங்கள் அப்படியாக தான் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்... ஏனெனில், ஞாபகம் கொள்ளுங்கள், ஒரு நாளில், ஒருவேளை அது இன்றே இருக்கலாம்; அல்லது அடுத்த ஐந்து நிமிடத்தில் இருக்கலாம், ஆனால் ஒரு நாள் அந்த இருதயம் நின்று போகும். அதன் உள்ளேயிருக்கும், அந்த பகுதியானது இந்தக் காலை வேளையிலே இந்தச் செய்தியைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் காண்கிற இந்த செய்தியைக் குறித்து என்ன செய்கிறீர்கள் என்பதை வைத்து நியாயந் தீர்க்கப்படுவதற்காக அது பறந்து சென்று தேவனுடைய பிரசன்னத்திற்கு முன்பாக நிற்கப்போகிறது. இல்லை, அது நான் அல்ல. நான் வெறுமனே தேவனுடைய வாய்க்கருவி. (Mouthpiece). இந்த ஒலிபெருக்கி போல, நான் அதனுள் பேசாவிட்டால் அதனால் எதையும் சொல்ல முடியாது. மேலும், தேவன் பேசாவிட்டால், என்னாலும் எதுவும் சொல்லமுடியாது. ஆனால், நீங்கள் பாருங்கள், தேவன் இது சத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறார். நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருக்க வேண்டும். 338. இப்போது, நமக்கு பீட அழைப்புக்கு இடம் இல்லாதிருக்கிறது, ஆனால் சரியாக நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜையிலிருந்தே உங்களை ஒப்புக் கொடுக் கலாம். இந்த இடம் நெருக்கமாகவும், நெரிசலாகவும், நிரம்பி வழிந்து கொண்டுமுள்ளது. என்னால் உங்களை பீடத்திற்கு வரும்படி அழைக்க முடியவில்லை. உங்களை அழைப்பதற்கும் இங்கே ஒரு பீடமும் இல்லை. ஆனால் பீடம் உங்கள் இருதயத்திலுள்ளது. “இயேசு கிறிஸ்து மெய்யா னவர்” என்னும் அந்த சிறிய நம்பிக்கை, இன்று உங்க எண்டை நெருங்கி வரவும், அவருடைய முழு சரீரத் தையும் நீங்கள் அழைப்பித்து, அவரை உங்கள் இரு தயத்தில் தங்கும்படி செய்வீர்களா? ஒருவேளை அங்கே அவர் இல்லையென்றால், “கர்த்தாவே, என்னை நிரப்பும், நான் உம்மால் ஜீவிக்கும்படிக்கு, உம்முடைய வார்த்தையினாலும், உம்முடைய பிரசன்னத்தினாலும் என்னை நிரப்பும்” என்று நீங்கள் உங்கள் கரங்களை அடையாளமாக அவருக்கு உயர்த்தி காண்பிப்பீர்களா? 339. தேசத்தினூடாக அனைவரும், எல்லாத் தலைகளும் தாழ்ந்திருக்கிற நிலையில், எல்லாக் கண்களும் மூடியிருக்கும் நிலையில், இங்கே, கண்களுக்குத் தென்படுகிற சபையாரும், கண்களுக்கு தென்படாத மற்ற வெளியே இருப்பவர்களும்கூட உங்கள் கரங்களை உயர்த்துங்கள்; உங்களுக்காக நான் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். அவ்வளவே என்னால் செய்ய முடியும். என்னால் அதை (உங்கள் இருதயத்தை) நிரப்ப முடியாது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக; என்னால் அதை நிரப்ப முடியாது. உங்களை, உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவனால் நிரப்ப முடியும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே கண்களுக்கு தென்படும் பார்வையாளர்களின் கரங்கள் எவ்விடத்திலும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. “அதை நிரப்பும், என்னை நிரப்பும், ஓ கர்த்தாவே!” மேலும் இப்போது, நன்றி சகோதரியே! நன்றி சகோதரனே! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அருமை சகோதரியே, உங்களை. பிறகு நான்... இப்போது நான் நினைக்கிறேன் கிட்டத்தட்ட எல்லா நேர்மையான உள்ளங்களும், நேர்மையாய் நடக்க விரும்புகிறவர்களின் கரங்களும் உயர்த்தப்பட்டிருக்கும்போது, நானும் எனது கரங்களை உங்களோடு சேர்த்து உயர்த்த விரும்புகிறேன். 340. ஓ கர்த்தாவே! நான் ஒரு தேக்கநிலையை அடைவதற்கு என்னை ஒருபோதும் அனுமதியாதேயும். கர்த் தாவே, தொடர்ந்து ஏதோ ஒன்றில் நின்றுவிட அனுமதியாதேயும். கர்த்தாவே! நான் செய்யத்தக்கதாக நீர் நியமித்த அனைத்தையும் செய்து முடிக்கும்வரை தொடர்ந்து என்னை முன்னேறிச் செல்ல அனுமதியும். விலையைப் பற்றி அக்கறையில்லை, பணமானாலும் அக்கறையில்லை, விமர்சனங்களானாலும் அக்கறை யில்லை, சிலுவை எவ்வளவு கடினமானதாயிருப்பினும், நீர் சுமந்த அந்தச் சிலுவையை நான் நினைவு கூறுவேன். எனவே, மரணம் என்னை விடுவிக்கும் வரைக்கும், இந்த புனித சிலுவையை நான் சுமப்பேன். ஒரு கிரீடம் அணிய, பின்னர் வீட்டிற்கு செல்வேன். எனக்கென்று அங்கொரு கிரீடம் உண்டு. உலகமனைத்தும் சும்மா இருக்க, இயேசு மாத்திரம் சிலுவை சுமக்க வேண்டுமா? இல்லை, சிலுவையுண்டு அவரின் ஒவ்வொரு குமாரருக்கும் எனக்கும் ஓர் சிலுவையுண்டு. 341. அன்பான தேவனே, வார்த்தையானது முன்பாக கடந்து சென்றுவிட்டது. அது வெறுமையாகத் திரும்பாது, அது தன்னுடைய இடத்தை எங்கேயாவது கண்டு கொள்ளும். விதையானது ஏற்கனவே நடப்பட்டிருந்தால், அது வளரும் வரை அந்த வார்த்தையானது அதற்கு நீர்ப் பாய்ச்சும். எவராலும் உம்முடைய கையிலிருந்து அதைப் பறித்துக் கொள்ள இயலாது, “என் பிதா எனக்கு கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும். ஒரு மனிதனாலும் என்னுடைய கரத்திலிருந்து அவைகளை பறித்துக் கொள்ள முடியாது. உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்பே, அவைகளை என் பிதா எனக்குக் கொடுத்துள்ளார்.” திட்டங்கள் எல்லாம் தீட்டப்பட்டபோதே, இயேசுவுக்கு அவருடைய மணவாட்டியாகிய அவருடைய சபையானது கொடுக்கப்பட்டது. 342. இந்த ஸ்தாபனங்களுடன் இந்த உலகம் செய்து கொண்ட போலியான விவாகம். நீர் உலகத்திற்கு வந்து, மரித்தீர். நீர் அவளை மீட்டுக் கொண்டீர், நீர் அவளை நீதிமானாக்கினீர், அவள் ஒருபோதும் முதலில் அதைச் செய்யவில்லை. அதில் அதற்குள் சிக்கவைக்கப்பட்டாள். குருடாயிருந்தாள். இப்பாடல் சொல்கிறபடி, நான் ஒரு காலத்தில் காணாமற் போனேன், ஆனால் இப்பொழுதோ நான் கண்டுபிடிக்கப்பட்டேன். நான் ஒரு காலத்தில் லவோதிக்கேயாவில் குருடனாயிருந்தேன், ஆனால் இப்பொழுதோ நான் காண்கிறேன். கிருபையே பயப்படும்படி, என் இருதயத்திற்கு போதித்தது. என் பயங்கள் யாவற்றையும் போக்கியதும் கிருபையே; தேவ சித்தம் இல்லாமல் தேவனுக்கு ஒரு சேவை... நான் முதல் விசுவாசித்த வேளையிலே கிருபையானது எவ்வளவு விலையேறப் பெற்றதாய் பிரசன்னமானது! எனக்கு நாவறண்டு போனபோது, தேவனுடைய தண்ணீரானது என் ஆத்துமாவின் மேல் விழுந்தது. 343. தேவனே, இங்கேயும் மற்றும் தேசம் முழுவதும் இருக்கக்கூடிய ஒவ்வொரு இருதயமாகிய சிறிய பீடத்திலும், தேவனுடைய பீடத்தின் அடியிலிருந்து வரும் தண்ணீரானது இக்காலையிலே உம்முடைய சபையின் மீது பாய்ந் தோடட்டும். கர்த்தாவே, காலமானது முடிவுபெறும் நிலை யில் உள்ளதால், அதற்கு நீர்பாய்ச்சும். அது குமாரனின் பிரசன்னத்தில் கிடத்தப்பட்டு உம்முடைய மகத்தான களஞ்சியத்தில் சேர்க்கப்படும்படி அது முதிர்ச்சியடைவதற்காக அதற்கு ஜீவனைத் தாரும், ஜீவத் தண்ணீரைத் தருவீராக 344. பிதாவே, அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். ஆனால் தண்டு காய்ந்துபோகத் தான் வேண்டும், எனவே நான் தண்டிற்காக ஜெபிக்க முடியாது; அது மரித்தாக வேண்டும். ஆகவே அது மரித்துவிட்டது. ஆனால் கர்த் தாவே, கோதுமை மணிக்காக நான் ஜெபிக்கிறேன், அது கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அருளும் கர்த்தாவே, வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக ஒன்று கூட்டப்படுதல் ஏற்படும் வரை, தேவனுடைய புதிய தண்ணீரானது புரிந்து கொள்ளுதலின் ஆனந்தக் கண்ணீரால் கன்னங்களைக் குளிப்பாட்டட்டும். கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில் இதையெல்லாம் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன், இதன் விளைபயன் உமக் குரியது. ஆமென். [சபையிலிருந்த ஒரு சகோதரி சாட்சி கூறுகிறாள். ஒலிநாடாவில் காலியிடம்] ஆமென். 345. ஆகவே, பிதாவாகிய தேவனே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். பிதாவே, நாங்கள் இங்குள்ள எங்கள் சிறிய சகோதரிக்காக, இல்லப் பணிப்பெண்ணிற்காக, அவளுடைய பெலத்திற்காக ஜெபிக்கிறோம். நான் நான் அவள் முன்னிலையில் நடந்தபோது, அந்த தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன், எப்படியாக அந்த ஆவி அவள் மீது வந்து, அதே செய்தியை கொடுத்தது என்று நினைத்துப் பார்க்கிறேன், அதாவது அன்று கர்த்தரின் தூதன் ஆற்றின் மீது அதே செய்தியை இவ்வாறாக தந்தார்: கர்த்தராகிய இயேசுவின் முதல் வருகைக்கு யோவான் ஸ்நானகன் எப்படி அனுப்பப்பட்டானோ, அப்படியே அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக நீ அனுப்பப்பட்டாய்.” 346. கோதுமைமணி பகுதியானது இப்பொழுது உருவமடைந்து கொண்டிருப்பதை காண்கையில், தேவனே, நீர் செய்த எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். சொல்வதற்கு அதிகமாகவே எங்கள் இருதயங்கள் நிரம்பியுள்ளன. நான் நிறைவாக உணர்கிறேன், கர்த்தாவே, வேறு ஏதாவது சொல்லவேண்டுமென்றால் அதை எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும் நன்றி பிதாவே, நீர் எங்களுக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். நான் அவரை நேசிக்கிறேன்... நாம் அவரிடம் பாடுவோம், இப்போது, நினைவு உறுங்கள், அவர் இங்கே இருக்கிறார். முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார், என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 347. அது உங்களை மிகச் சிறியதாய், மிகவும் சிறியதாய் உணரச்செய்கிறதா? எல்லாம் வெறுமையாகி விட்டது, அவருடைய ஆவிக்காக ஆயத்தமா யிருக்கிறது, பாருங்கள். தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கையை நிலைநாட்டுங்கள்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! உலகின் வீணான ஐசுவரியத்தை இச்சியாதீர் அது விரைவில் கேட்டுப் போகும். நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கையை நிலைநாட்டுங்கள்! (ஸ்தாபனத்தின் மேலல்ல) தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் கட்டுங்கள்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! 348. எத்தனைபேர் அதைச் செய்ய முயற்சிக்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். இப்போது மேசைக்கு குறுக்காக உங்கள் கைகளை நீட்டி, மற்றொருவருடைய கரங்களில் உங்களுடைய கைகளை இவ்வாறாக ஒன்று சேர்த்து வையுங்கள். நீங்கள் உட்காரலாம், அது பரவாயில்லை, அல்லது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள். கூர்ந்து கவனியுங்கள். இப்போது ஒன்றுசேர நாம் பாடலாம். இது, நமது உடைந்து போகாத தேவனுடைய அன்பின் சங்கிலியை பிரதிநிதித்துவம் செய்கிறது. நாம் ஒருவர் கரங்களை ஒருவர் பிடித்துள்ளோம், ஏனெனில் தேவனில் நமக்கு விசுவாசம் உண்டு. நாம் ஒருவரை ஒருவர் தொடுகிறோம், ஏனெனில் நாம் சகோதரர்களும், சகோதரிகளுமாயும் உள்ளோம், அதே அசைவாடும் ஆவியானவரும், தேவனுடைய நித்தியமான வார்த்தையும், வெளிப்படுத்தப் பட்டு நம்முடைய இருதயங்களில் வாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. நம் யாத்திரை முடிவடையும்பொழுது, தேவனுக்கு நாம் உண்மையாய் இருந்திருப்போமேனில், மகிமையில் அழகும் பிரகாசமுமான நமது வீட்டை பரவசமான நமது ஆத்துமா காணுமே ! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கையை நிலைநாட்டுங்கள்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! (கர்த்தரின் ஆவியை!) தேவனுடையதைப் பற்றிக் கொள்ளுங்கள்... அவர் மேல் உங்கள் சிந்தையை வையுங்கள். பாருங்கள். இந்த விதமான ஜெபக்கூட்டங்களை நாம் எதிர்காலத்தில் நடத்த வேண்டும். ...மாறாத கரத்தை உங்கள் நம்பிக்கைகளை நித்தியமான காரியங்களின் மேல் கட்டுங்கள்! அங்குள்ள நித்தியமான ஒன்றே ஒன்று வார்த்தை மட்டுமே. தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! இந்த உலகத்தின் வீணானப் புகழ், கல்வியின் மீது ஆசைப்படாதே! அது விரைவில் கேட்டுப் போகும். (அது என்ன செய்தது என்று இன்று அதைப் பாருங்கள்) பரலோகப் பொக்கிஷங்களைப் பெற்றுக்கொள்ளும்படி தேடுங்கள் அவை ஒருக்காலும் கடந்துபோகாது. தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் கட்டுங்கள்! தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்! 349. [ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறாள். சகோதரர் பிரன்ஹாம், தேவனுடைய கரங்களைப் பிடித்துக் கொள் என்னும் பாடலை தாழ்ந்த குரலில் முணுமுணுக்க ஆரம்பிக்கிறார். மற்றொரு சகோதரி வியாக்கியானம் செய்கிறாள்) எப்படி நாங்கள் உமக்கு நன்றி சொல்வோம் கர்த்தாவே. இந்த புனிதமான நேரத்தில் நாங்கள் ஏறக்குறைய அடக்க ஆராதனையைப் போல, ஒரு மரித்துக் கொண்டிருக்கிற, மரித்த உலகத்தை, ஒரு மரித்துக் கொண்டிருக்கிற, மரித்த சபையின் அடக்கத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். தேவனே, உம்முடைய கோதுமை மணிகளை சீக்கிரமாய் கூட்டிச் சேரும். பிதாவே, கர்த்தராகிய இயேசுவே, சீக்கிரமாய் வாரும். 350. உம்முடைய ஜனங்களை ஆசீர்வதியும், பிதாவே, ஜனங்களுடைய இருதயங்களில் நேர்மையையும், ஆழ மானதையும் கொண்டு வாரும். முறிந்துபோகக்கூடிய குமிழி நடனங்களிலிருந்து நாங்கள் வெளியே வரட்டும், வந்து, தேவனுடைய, ஆழமான பொக்கிஷங்களாகிய தேவனில் வந்து அமர்ந்து நிலைகொள்ளச் செய்யும். இதை அருளும் கர்த்தாவே. அன்பினாலும், உத்தமத்தினாலும் எங்கள் இருதயங்களை நிலை நிறுத்துவீராக. 351. பிதாவே, எங்கும் உள்ள உம்முடைய ஜனங்களை ஆசீர்வதியும். இந்த இடத்தை விட்டு நாங்கள் கடந்து செல்லும்போது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செல்வோமாக. சத்தியம் என்னவோ அதை நாங்கள் பேசவும், நேர்மையானவற்றைப் பேசவும், சரியானவற்றைப் பேசவும், தவறான வைகளை விட்டு விலகவும் செய் வோமாக. கர்த்தாவே, ஒரு மனிதன் எங்களிடம் பொய் சொல்லத் தொடங்கினால், நாங்கள் சீக்கிரமாய், எங்கள் முதுகை அவனுக்கு எதிராக திருப்பி அவனிடமிருந்து விலகுவோமாக. எல்லா அசுத்தமான, ஆபாசமான நகைச்சுவைகள் போன்ற உலகத்தின் காரியங்களுக்கு எங்கள் முதுகை காட்டி விலகிச் செல்வோமாக. அருமையான தேவனே, எங்களுக்கு உதவி செய்யும் எங்களை வனைந்துக் கொள்ளும், எங்களை உருவாக்கும், எங்களை உடையும், தேவனுடைய குமாரரும், குமாரத்திகளின் சாயலாக எங்களை உருவாக்கும். அதன் மூலம் நாங்கள் பரிசுத்த ஆவியின் சீரியப் பண்புகளோடு நடந்து கொள்வோமாக. நாங்கள் ஒருவரோடொருவர் கரம் பற்றிக் கொண்டவர்களாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். ஆமென். நாம் எழுந்து நிற்போம். சகோதரன் நோலன்.